(Reading time: 15 - 30 minutes)

டேய் நீ பாட்டுக்கு கிளம்பி போனா குழந்தையை யார் பாக்குறது உன் மக வேற எப்போ எதுக்கு அழுவானே தெரியாது.வயசான காலத்துல நா என்ன பண்றது.இருக்குற ஒரு மாசமும் ஒழுங்கா பாத்துட்டு ஊர் போய் சேர்றேன்.உனக்கு புண்ணியமா போகும் டா..”

ஏம்மா குழந்தை வர்றதுக்கு முன்னாடி என்னவோ அந்த பேச்சு பேசுன..பெத்து குடுத்துட்டு எங்க வேணா போங்க நா பாத்துக்குறேன் அது இதுனு..இப்போ என்னடானா ஒரு அரை மணி நேரத்துக்கு இந்த பேச்சு பேசுற?”

டேய் இப்போ என்ன சொல்லிட்டேன்னு இந்த பேச்சு பேசுற.புள்ளையை பாத்துக்குறதை விட உங்களுக்கு ஊர் சுத்துறது முக்கியமா போச்சா..”

ஏங்க இதுக்குதான் நா எங்கேயும் வரலனு சொன்னேன் கேட்டீங்களா..போய் வேற வேலை இருந்தா பாருங்க”,என கத்திவிட்டு அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டாள் மது.

ஸ்ரீகாந்தோ நிச்சயமாய் இது சரிப்படாது என்று தோன்ற அடுத்த நான்கு நாட்களில் அவரை ஊருக்கு அனுப்பியிருந்தான்.இன்னும் ஒரு மாதத்தில் மதுவும் வேலைக்கு சேர வேண்டிய நிலைமையில் குழந்தையை பார்க்க ஆள் தேட வேண்டிய கட்டாயம் இருவருக்கும்.

மரகதம் குழந்தையை யாரையோ நம்பி விடுவதற்கு தன்னிடம் விட்டுச் செல்லுமாறு கூறினார்.ஆனால் இருவருக்குமான ஆபீஸிற்கும் தங்கள் வீட்டிற்கும் வைரவனின் வீட்டிற்கும் தூரம் அதிகம் என்பதால் அது சரிப்டாது என்று கூறினர்.

ஆளே கிடைக்காத நிலையில் லாஸ் ஆப் பேயில் ஒரு மாதம் விடுமுறையை எக்ஸ்டெண்ட் செய்தாள் மது.அந்த ஒரு வாரத்தில் இன்னுமே அவள் நடவடிக்கைகள்  மாறியிருந்தது.

எதற்கெடுத்தாலும் ஒரு சிடுசிடுப்பு எப்போதும் சண்டை என ஸ்ரீகாந்திற்கோ ஒன்றும் புரிவில்லை.வார இறுதியில் கிடைத்த நேரத்தில் அவளை அமர்த்தி பேசிப் பார்த்தான்.

மதும்மா என்னாச்சு இப்போ எல்லாம் நீ நீயாவே இல்ல.எதோ டென்ஷன்லயே இருக்க.என்ன உன் மைண்ட்ல இருக்கு..யாரும் எதுவும் சொன்னாங்களா?”

அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல ஸ்ரீகா.ரொம்ப ஸ்டெர்ஸ்டா பீல் பண்றேன்.தனியா வீட்டுகுள்ளயே குழந்தையை கவனிச்சுகிட்டு சரியான தூக்கம் இல்ல..நினைச்ச நேரம் வெளிய கூட போக முடில..லைஃபே வெறுத்து போன மாதிரி இருக்குங்க..

டெய்லி காரணமே இல்லாம அழுகையா வருது.அரைமணி நேரமாவது அழுறேன் தெரியுமா..பயமா இருக்கு ஸ்ரீகா எதாவது ப்ராப்ளமா இருக்குமோனு.”

மது ஏன் ஏதேதோ பேசுற..அதெல்லாம் ஒண்ணுமில்ல..நாம நாளைக்கே டாக்டரை மீட் பண்ணலாம் ஓ.கே வா எல்லாம் சரி ஆய்டும் டோண்ட் வொரி.”

டாக்டரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியவன் அவளை அழைத்துச் சென்றான்.அவர்கள் பேசி முடிக்கும் வரை அமைதிகாத்த மருத்துவர் பின்பு மெதுவாய் விஷயத்தை விவரிக்க ஆரம்பித்தார்.

இங்க பாருங்க மது நீங்க சொல்ற அளவுக்கு இது பெரிய விஷயம் இல்ல அதுவும் இந்த காலத்துல.இதை போஸ்ட்பார்டம் டிப்ரஷன்னு சொல்லுவோம்.பொதுவான காரணம்னு பார்த்தா ஹார்மோன் சேஞ்சஸ் தான்.

டயர்ட்னெஸ் லேக் ஆப் ஸ்லீப் இப்படி நிறைய காரணங்கள்.அதுமட்டுமில்லாம நீங்க வொர்கிங் வுமனா இருக்குற பட்சத்துல இது இன்னும் கொஞ்சம் சிவியரா ஆகுது.எப்பவுமே எதோ ஒரு வேலை இல்ல ப்ரெண்ட்ஸ் அவுட்டிங்னு இன்டிபெண்டண்டா இருந்துட்டு சடனா வீட்டுக்குள்ளயே குழந்தையை மட்டுமே பார்த்துகிட்டு கன்டினியூஸ் ஃபீட் பண்ணிட்டு இருக்கும் போது மனசு உங்களை அறியாம ஒரு வெறுமை ஸ்டேட்க்கு போகத்தான் செய்யும்.

இதுக்கு பேமிலி மெம்பர்ஸ் கூட பல நேரங்கள்ல காரணமா ஆய்டுறாங்க..அவங்களை ஹர்ட் செய்யுற மாதிரியான சின்ன பேச்சு கூட அவங்களை பொறுத்தவரை பெரிய விஷயமா மாறிடும்.பட் அட்லீஸ்ட் முதல்லயே இந்த விஷயத்தை கண்டுபிடிச்சு இங்க வந்துருக்கீங்க.

இதை இப்படியே விட்டுருந்தா பல வொர்ஸ்ட் ஸ்ச்சுவேஷன்க்கு கொண்டு போய் விடுறதுக்கான வாய்ப்பு கூட இருக்கு.மது, முடிஞ்ச அளவு மைண்டை ஃப்ரீயா வச்சுகோங்க மெடிடேஷன் பண்ணுங்க..உங்களுக்கான டைம்னு கொஞ்சம் ஸ்பெண்ட் பண்ணுங்க.ஸ்ரீகாந்த் முடிஞ்சளவு அவங்களுக்கு வீட்டு வேலைகள்ல உதவி பண்ணுங்க.குழந்தையை பாத்துக்கோங்க.

அப்பப்போ அவங்களை கொஞ்சம் வெளில கூட்டிட்டு போய்ட்டு வாங்க.மத்தபடி நத்திங் டு வொரி..”,என்று கூறி அனுப்பி வைத்தார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "சுஷ்ருதா..." - வித்தியாசமான காதல் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

அதன் பிறகு தன்னால் முடிந்த அளவு அவளை சாதாரணமாக வைத்துக் கொண்டான்.குழந்தையை பார்த்துக் கொள்ள ஆள் கிடைக்காமல் குழந்தையை க்ரீச்சில் விட்டு செல்வதாய் முடிவெடுத்தனர்.

மரகதத்திற்கு இதில் சிறிதும் உடன்பாடு இல்லை எனினும் மகளும் மருமகனும் அவர்கள் முடிவில் உறுதியாய் இருந்ததால் ஒன்றும் கூறாமல் விட்டுவிட்டார்.

மது வேலைக்குச் சென்று ஒரே வாரத்தில் குழந்தைக்கு கடும் காய்ச்சல் வர இரவோடு இரவாய் குழந்தையை அழைத்துக் கொண்டு மருத்துவரிடம் ஓடினர்.மரகதமோ மகளிடம் கத்த ஆரம்பித்திருந்தார்.

உனக்கு பிள்ளையை விட அப்படி என்னடி வேலை முக்கியமா போச்சு.பக்குவமா பார்த்து வளர்த்த பிள்ளை ஒரே வாரத்துல எப்படி ஆயிடுச்சு பாரு.அப்படி என்ன பெரிய புடலங்கா வேலை உனக்கு பெருசா போச்சு?நீ சம்பாதிச்சுதான் இங்க கோடீஸ்வரங்க ஆக போறோமா?”

ம்மா எதுக்கும் எதுக்கும் முடிச்சுபோடுற.நா வேலைக்கு போறதுனால அவளுக்கு காய்ச்சல் வந்த மாதிரி பேசுற.நா வேலைக்கு போறது சம்பாதிக்க இல்ல என்னோட ஐடெண்டிடிக்காக அதை முதல்ல புரிஞ்சுக்கோ.நீ சொல்றறத பார்த்தா குழந்தைனு ஒண்ணு வந்துட்டா வாழ்க்கைல வேற எதைபத்தியும் யோசிக்ககூடாதா எனக்கான நேரமே இருக்க கூடாதா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.