(Reading time: 15 - 30 minutes)

இவ்ளோ பேசுறியே ஏன் நீ கொஞ்ச நாள் இங்க வந்து குழந்தையை பார்த்துக்கோனு சொன்னா உன்னால முடிஞ்சுதா.உன் வீட்டை விட்டு பொண்ணு வீட்டுல இருக்க முடியாதுனு பிடிவாதம் பிடிக்குற இல்ல.நீங்க சொன்னாஅதுல அர்த்தம் இருக்கும் நா பண்ணா பிடிவாதமா?

எல்லாத்தையும் விடு உனக்கும் சரி என் மாமியாருக்கும் சரி எங்களோட பாட்டிங்க கூட இருந்தாங்க இல்ல.கஷ்டமோ நஷ்டமோ கொஞ்சமாவது உதவியா இருந்துருப்பாங்க இல்ல.நா தானியா தான கஷ்டபடுறேன்.

இரண்டுபேர்ல யாராவது ஒருத்தர் நா பாத்துக்குறேன் குழந்தையைனு ஒரு ஆறுதலுக்காவது சொன்னீங்களா?இப்போ ஏதோ ஒரு பிரச்சனைனு வந்தவுடனே முதல் ஆளா என்னை குறை சொல்ல வந்துட்ட இல்ல..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

யாரும் என்னை குத்தி காமிச்சு சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்க வேணாம்.குழந்தையை பார்க்க கெஸ்ட் மாதிரி தான வந்துட்டு போறீங்க பாத்துட்டு கிளம்புங்க.என் பொண்ணை நானே வளர்த்துக்குறேன்”,என்றவள் கண்மண் தெரியாமல் கத்திவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட மரகதமோ கண்கலங்கிவிட்டார்.

ஐயோ அத்தை அவளே குழந்தைக்கு முடிலனு வருத்தத்துல இருக்கா அதான் நீங்க ஏதோ சொன்னவுடனே கண்டபடி பேசுறா.பெருசா எடுத்துக்காதீங்க ப்ளீஸ்.அவளும் பாவம் தான அத்தை.வீட்டையும் பார்த்து குழந்தையும் கவனிச்சு வேலைக்கும் போறா.

நாம ஒரு செகண்ட்ல அவளை தப்பு சொல்லிட்டு போய்டுறோம்..என்னதான் சொன்னாலும் அவ அவளோட அத்தனை வேலையையும் பெர்பெக்டா தான் பண்றா.உங்களுக்கு எனக்கு என் அப்பா அம்மாக்குனு அத்தனையும் அவ தான் கவனிச்சுக்குறா.அப்படியிருக்க இப்படி சொன்னா அவளால எப்படி தாங்கிக்க முடியும்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "கலாபக் காதலா..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

எல்லாத்துக்கும் மேல ஒரு அம்மாவா அவளுக்கு தான அத்தை குழந்தையை நினைச்சு இன்னும் கவலையா இருக்கும்.நீங்களே யோசிச்சு பாருங்க.நானும் உங்களை ஹர்ட் பண்றேன்னு நினைக்க வேண்டாம்.புரிஞ்சுகோங்க ப்ளீஸ்.”

ஐயோ மாப்பிள்ள எதுக்கு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிகிட்டு எனக்கும் அவ நிலைமை புரியாம இல்ல இருந்தாலும் குழந்தைக்கு முடிலனு பாத்தவுடனே கோபம் வந்துருச்சு..விடுங்க நா போய் அவளை சமாதானப்படுத்திக்குறேன்.”

என்றவர் மகளை சமாதானப்படுத்தி அழைத்து வந்தார்.அடுத்த ஒரு வாரத்தில் தேடி அலைந்து ஒரு வயதான பெண்மணியை குழந்தையை பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்தனர்.அவரோடு குழந்தை பழகிக் கொள்ளும் வரை மரகதம் கூட இருந்து பார்த்துக் கொள்வதாய் முடிவு செய்தனர்.

மீண்டும் மது வேலைக்கு கிளம்பும் அன்று காலை சீக்கிரமே எழுந்தவன்,”மதுடியர் எந்த வொரியும் இல்லாம ஆபீஸ் போய்ட்டு வா மதியானம் வரை நானும் இருப்பேன்.அப்பறம் பாப்பா தூங்கிருவா அதுக்கப்பறம் கொஞ்சநேரம் தான சமாளிச்சுரலாம்..கவலபடாம இரு ஓ.கே வா.உனக்கு சப்போர்டிவ்வா நா இருக்கேன்.சரியா?”

தேங்க் யூ சோ மச் ஸ்ரீகா..நிஜமா இப்போ நீ சொல்ற இந்த வார்த்தையெல்லாம் எனக்கு எத்தனை பலத்தை கொடுக்குதுனு உனக்குதெரியாது.இப்படி ஒரு ஆதரவை மட்டும்தான் மனசு எதிர்பார்க்குது மத்தபடி எத்தனை வேலையா இருந்தலும் சமாளிச்சுருவேன்..தேங்க்ஸ் அகெயின் லவ் யூ..”,என்றவள் ஆதரவாய் தோள் சாய்ந்து கொண்டாள்.

Episode # 06

Episode # 08

அடுத்த அத்தியாயத்துடன் நிறைவுப் பெறும்!

{kunena_discuss:1240}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.