(Reading time: 13 - 25 minutes)

தொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 06 - ஸ்ரீ

Unnaale naan vazhgiren

உறவுகள் தொடர்கதை

உணர்வுகள் சிறுகதை 

ஒரு கதை என்றும் முடியலாம் 

முடிவிலும் ஒன்று தொடரலாம் 

இனியெல்லாம் சுகமே

 

உன் நெஞ்சிலே பாரம் 

உனக்காகவே நானும் 

சுமைதாங்கியாய் தாங்குவேன் 

 

உன் கண்களின் ஓரம் 

எதற்காகவோ ஈரம் ?

கண்ணீரை நான் மாற்றுவேன் 

 

வேதனை தீரலாம்

வெறும்பனி விலகலாம் 

 

வெண்மேகமே

புது அழகிலே நானும் இணையலாம்

ரகதத்தின் பேச்சை கேட்ட பின்பு மது சற்றே தெளிவாகி இருந்தாள்.மாமியார் எதுவும் கூறினால் கூடகஷ்டப்பட்டுஅமைதி காத்தாள்.முக்கியமாய் ஸ்ரீகாந்திடம் எதைப் பற்றியும் வாயே திறக்கவில்லை.

அப்படியிருந்த நாட்களின் வித்தியாசத்தை கண்கூட உணர்ந்திருந்தாள்.ஒவ்வொரு நாளும் ஒருவித புத்துணர்ச்சியோடு எந்தவித கடுகடுப்பும் இன்றி நிம்மதியாகவே கழிந்தது.இது இருவருக்குமான புரிதலை இன்னுமே அதிகரித்திருந்தது.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“என்ன மது டியர் இப்போ எல்லாம் எதோ வித்தியாசமா தெரியுதே?”

“அப்படியா எனக்கு ஒண்ணும் தெரிலயே!”,என்றவள் நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

“இல்ல சும்மா இருக்குற உன்னை நானே குழப்ப கூடாதுதான்.இருந்தாலும் கேக்காம இருக்க முடில.அம்மாவுக்கும் உனக்கும் எதுவும் சண்டையா?”

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லையே ஏன் கேக்குறீங்க?”

“இல்ல ஒரு வாரமா இரண்டு பேரும் எந்த பிரச்சனையும் பண்ணாம என்ன நிம்மதியா வச்சுருக்கீங்களே அதான் இது எதாவது புயலுக்கு முன் வரும் அமைதியோனு டவுட்.”

“ம்ம் நல்ல டவுட்..நான்தான் இனி தேவையில்லாத விஷயத்தை எல்லாம் மைண்ட் பண்ணிக்க வேண்டாம்னு முடிவு எடுத்துருக்கேன் ஸ்ரீகா..அதான்.”

“புரில மது எதை பத்தி சொல்ற?”

“இல்லங்க நமக்கான நேரமே கம்மியா இருக்கு அதுலயும் உட்காந்து சண்டை போட்டுட்டு இருக்க வேண்டாம்னு தான் அத்தை எதுவும் சொன்னாலும் பெருசா எடுத்துக்கல.

அதோட ரிசல்ட் இந்த ஒரு வாரமா நானுமே கொஞ்சம் ரிலாக்ஸ்டா பீல் பண்றேன்.நீங்களுமே மத்த நாளை விட எனர்ஜிடிக்கா தான் தெரியுறீங்க.சோ அதை அப்படியே கன்ட்டினியூ பண்றேன்.என்ன சொல்றீங்க?”

“நிஜமாவே ரொம்ப பெரிய விஷயம்தான் மது டியர்.எது எப்படியோ என் தலையை உருட்டாத வரை எனக்கு நிம்மதி.”

“அதான எப்பவுமே சேஃபர் சைட்ல இருக்கணும் பெர்ஃபெக்ட் புருஷன் தான் நீங்க..”

அதன் பின்னான நாட்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் பத்து மணி நேர உழைப்பு வார இறுதியில் ஔட்டிங் ஹோட்டல் வீக்கெண்ட் டிரிப் என பொழுது சுகமாய் கழிந்தது.

திருமணமாகி ஆறு மாதங்கள் கடந்திருந்த நிலையில் மதுவிற்கு ஒரு வாரமாகவே ஒருவித களைப்பாய் இருந்தது.வேலைப்பளு அதிகமாய் இருப்பதுதான் காரணம் என அப்படியே விட்டுவிட்டாள்.

அன்று காலை எழும்போதே தலை வலிப்பதாய் உணர்ந்தவள் அப்படியே படுத்துக் கொண்டாள்.அவள் கிளம்பும் நேரத்தில் வழக்கமாய் விழிப்பவன் விழித்துப் பார்க்க அருகில் படுத்திருந்தவளை கண்டு பதறிப்போனான்.

“ஹே மது என்னாச்சு ஆபீஸ் போகல?”

“இல்லங்க என்னவோ போல இருக்கு.அதான் அப்படியே படுத்துட்டேன்.”

“ஓ.சரி காபி தரேன் டா சாப்ட்டு ஹாஸ்பிட்டல் வேணா போய்ட்டு வந்துரலாம்.”

“இல்லங்க கொஞ்ச நேரம் தூங்கினாலே சரியாய்டும்னு நினைக்குறேன்”,என்றவள் அப்படியே விழி மூடிக் கொண்டாள்.

சற்று நேரம் கழித்து மரகதம் அவளை அழைத்திருக்க ஸ்ரீகாந்த் எடுத்து பேசினான்.

“என்ன மாப்ள நீங்க பேசுறீங்க?மது ஆபீஸ் போலயா?”

“இல்ல அத்த அவளுக்கு உடம்பு முடிலனு லீவ் போட்டுட்டா என்னனு தெரில நாலஞ்சு நாளாவே டயர்டாதான் இருக்கா.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.