(Reading time: 13 - 25 minutes)

எட்டாம் மாத இறுதியில் வளைகாப்பிற்கு ஏற்பாடு செய்து மதுவை தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள் சென்று அவளை பார்த்து வருவான் ஸ்ரீகாந்த்.

தாய் வீட்டிற்குச் சென்று வேலையும் விடுப்பு எடுத்ததே மது சற்று தேறியிருந்தாள் நான்கு நாட்களில் அவளை பார்க்க வந்த ஸ்ரீகாந்தே ஆச்சரியப்பட்டான்.

“ஹே மது சடனா வெயிட் ஏறினமாதிரி இருக்கியே வயிறுகூட பெருசா தெரியுது..”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ஆமா ஸ்ரீகா ஆபீஸ் போகாம கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கு.அது மட்டுமில்லாம பொண்ணுனா வயிறு பெருசா இருக்கும்னு பாக்குறவங்க எல்லாம் சொல்றாங்க.”

“அதெல்லாம் கூடவா இருக்கு?”

“ம்ம் அதெல்லாம் நிறைய சொல்றாங்க பெரிய வயிறு இருந்தா பொண்ணாம்..குட்டியா குடுவை மாதிரி இருந்தா பையனாம்.இப்படி ஏதேதோ சொல்றாங்க..ஹே ஒரு நிமிஷம் இரு..”

“குட்டிம்மா அப்பாவ பார்க்குறதுக்கு எழுந்துட்டீங்களா?அப்பாக்கு ஹாய் சொல்லலாமா?”,என்று பேசியவாறே அவன் கையை எடுத்து வயிற்றின் மீது வைக்க உள்ளிருந்து அந்த பிஞ்சு கை ஸ்ரீகாந்தின் கையை உரசிச் சென்றது.

ஒரு நொடி பதறியவனாய் சட்டென கையை எடுத்தவன் அவளை அப்படியே பார்த்திருக்க அவன் கேள்வி உணர்ந்தவளாய் சிரித்தவாறே,

“நம்மை குட்டிக்கு நீ ஆபீஸ்ல இருந்து வர்ற டைம் நல்லா தெரிஞ்சுருக்கு ஸ்ரீகா டெய்லி இந்த டைம் ஆனா உள்ள ஒரே ஆட்டம்தான்.அதுகுள்ளயே தூங்கி எழுந்துறாங்க.ஒரு ஹாஃவ் அன் அவர்க்கு ஆட்டம் போட்றாங்க நல்ல..சரியான அப்பா புள்ளையா வருமோ என்ன மாதிரியே?!”

“மது கையெல்லாம் நடுங்குது எனக்கு இப்போவே இத்தனை தெரியுமா குழந்தைக்கு.புல்லரிக்குது டீ..அப்படியே நா பீல் பண்ணேன் நம்ம குழந்தையை..”

“ம்ம் மாசம் ஆயிடுச்சுல அதான் நல்லாவே மூவ்மெண்ட் தெரியுது இங்க பாரு..”,என்றவள் வயிற்றை லேசாய் வருட அவள் நைட்டியை தாண்டியுமே அதன் அசைவு அப்பட்டமாய் தெரிந்தது.

அப்படி இப்படியாய் பிரசவ தினமும் வர நீர்குடம் உடைந்துவிட்டதென மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அத்தனை மாதமுமே நார்மல் டெலிவரிக்கு தான் வாய்ப்புகள் அதிகம் என கூறியிருந்த நிலையில் இப்போது கடைசி நிமிடத்தில் வந்து சிசேரியன் செய்தே ஆக வேண்டிய கட்டாயம் என கூறிவிட ஸ்ரீகாந்தோ பயந்துவிட்டான்.

இருந்தும் வேறு வழியில்லை என்று உணர்ந்தவனாய் கையெழுத்திட்டு கடவுளை வேண்டி நின்றான்.லேசாய் குழந்தைக்கு கொடி சுற்றியிருந்ததால் சற்று தாமதமாகவே ஆப்ரேஷன் முடிந்து அவர்களின் தேவதையை இவ்வுலகிற்கு கொண்டு வந்தனர்.

மயக்கம் தெளிந்தவள் குழந்தையை தேட அழகிய குட்டி தேவதையாய் தன்னருகில் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தாள்.

“ரொம்ப பயந்துட்டேன் டீ லேட் ஆக ஆக உயிரே போய்டுச்சு..”

“ம்ம் கன்சிவ் ஆன உடனே ஒரு செகண்ட்னாலும் நெகட்டிவா யோசிச்சுட்டனே அதான் இத்தனை கஷ்டமோனு தோணுது ஸ்ரீகா..”

“லூசு மாதிரி எதாவது பேசாத மது..உடம்பை கெடுத்துக்காத..நல்லா ரெஸ்ட் எடுக்கணும் இனிதான்..”

“அத்தை என்ன சொன்னாங்க??!”

“ரொம்ப சந்தோஷம் அவங்களுக்கும் நாளைக்கு எல்லாரும் வர்றாங்க பாப்பாவை பாக்குறதுக்கு..”

“ஓ..”

“சரி ரொம்ப பேசாம தூங்கு டா கொஞ்சம்..”,என்றவன் மனைவியின் அருகிலேயே அமர்ந்து கொண்டான்.

Episode # 05

Episode # 07

தொடரும்!

{kunena_discuss:1240}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.