(Reading time: 13 - 25 minutes)

“ஓ.நீங்க அவகிட்ட போனை கொடுங்களேன் ஒரு நிமிஷம்.”

மெதுவாய் அவளை எழுப்பியவன் போனை அவளிடம் கொடுக்க,”சொல்லுமா..”

“மதும்மா நாள் தள்ளிப் போயிருக்கா?”

“ம்மா நானே உடம்பு முடிலனு இருக்கேன் என்ன கேக்குற நீ?”

“மது தூக்கத்துல உளறாம கொஞ்சம் தெளிவாய்ட்டு பதில் சொல்லு..”

அதன் பிறகே அவர் கேள்வியின் அர்த்தம் புரிந்தவளுக்கு ஒரு நொடி அதிர்ந்துதான் போனாள்.

“ஆமா மா..ஆனா..”

“மது கண்ணா எல்லாம் நல்ல செய்தியா தான் இருக்கும் மெடிக்கல்ல கிட் வாங்கி செக் பண்ணிட்டு சொல்லு நாம டாக்டரை பாத்துட்டு வந்துரலாம்.செக் பண்ணிட்டு முதல்ல மாமியாருக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லு.வச்சுட்றேன்.”

போனை வைத்தவள் ஸ்ரீகாந்தை பார்த்து திருதிருவென முழிக்க அவனோ ஒன்றும் புரியாதவனாய்,”என்ன டி ஏன் இப்படி முழிக்குற?”

“ஸ்ரீகா நா கன்சிவா இருக்கேன்னு நினைக்குறேன்..”

“ஹே மது..”,என்றவன் அவள் கன்னம் தாங்கிக் கொண்டான்.

“இதுக்குத் தான் கொஞ்சம் வெயிட் பண்ணலாம்னு சொன்னேன் ஸ்ரீகா..”

“மது..இதெல்லாம் நாம முடிவு பண்ற விஷயம் இல்ல.கடவுள் கொடுக்குற கிப்ட் டா.எத்தனை பேருக்கு இந்த பாக்கியம் இல்லாம தவிக்குறாங்க.இதுக்கு மேல எதையும் நெகட்டிவா யோசிக்காத ப்ளீஸ்.”

“அதென்னவோ உண்மைதான் ஸ்ரீகா நமக்கே நமக்கான குட்டி பாப்பா..கொஞ்சம் எக்ஸ்சைட்மெண்டாவும் இருக்கு.”

“லவ் யூ டீ பொண்டாட்டி.அம்மாகிட்ட போன் பண்ணி சொல்லலாம்.”

“இருங்க பர்ஸ்ட் மெடிக்கல்ல ப்ரெக்னென்ஸி கிட் வாங்கிட்டு வாங்க கன்ஃபார்ம் பண்ணிட்டே சொல்லுவோம்.”

“அதுவும் கரெக்ட் தான் டா நீ படுத்துக்கோ நா போய் வாங்கிட்டு வரேன்.”,என்றவன் அருகில் இருக்கும் மெடிக்கல் ஷாப்பிற்கு சென்று வாங்கி வந்து வீட்டிலேயே கருதரிப்பை உறுதி செய்தார்கள்.

அந்த ஒருநொடி தயக்கத்தை தாண்டி மதுவிற்குமே மனம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்திருந்தது.ஸ்ரீகாந்த்தின் தாயிடம் விஷயத்தை கூற அவருக்கோ மகிழ்ச்சி தாளவில்லை.உடனே கிளம்பி வருவதாய் கூறினார்.

மாலையில் மரகதமும் வைரவனும் மகளைப் பார்த்துவிட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கர்ப்பத்தை உறுதி செய்து தேவையான மருந்துகளை வாங்கி வந்தனர்.

“மது கொஞ்ச நாளைக்கு பஸ் ட்ராவல் எல்லாம் வேணாம்.லீவு போடு.இல்ல வொர்க் ப்ரம் ஹோம் எடு முதல் மூணு மாசம் ரொம்பவே கேர்புல்லா இருக்கணும்.”

“ம்ம் சரிம்மா நா பி எம்கிட்ட பேசுறேன்..”

அதன்பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு மதுவிற்கும் ஸ்ரீகாந்திற்கும் இரவு உணவை தயார் செய்து கொடுத்துவிட்டுச் சென்றனர்.

“மது டியர் அம் சோ சோ ஹேப்பி..தேங்க் யூ பார் திஸ் வொண்டர்புல் கிப்ட்..”

“அடடா அன்பை பொழியுறீங்களே ஷப்பா முடில..இனி பத்து மாசத்துக்கு எனக்கு ஜாலி தான்..”

“அடிப்பாவி இத்தனை நாள் மட்டும் நா என்ன உன்னை கொடுமை படுத்தினேனா??”

“அப்படினு சொல்ல முடியாது இருந்தாலும் சொல்லலாம்..”

“சொல்லுவ டீ சொல்லுவ..”,என்றவன் அவளை அடிப்பதாய் விளையாட்டாய் கை ஓங்கிச் சிரித்தான்.

அடுத்த இரு தினங்களில் மார்னிங் சிக்னஸ் அதிகமாகவே இருந்தது மதுவிற்கு.வெறும் வயிற்றில் வாந்தி எடுப்பவளை பார்த்தவனுக்கு பயம் வந்து அப்பிக் கொண்டது.முதல் வேலையாய் தன் அன்னையை அழைத்தவன்,

“அம்மா குழந்தை குழந்தைனு கேட்ட இல்ல இப்போ இன்னும் இங்க வராம என்ன பண்ற..அவ அவ்ளோ கஷ்டப்படுறா..என்னால தனியா பாத்துக்க முடிலமா..”

“டேய் நீ தான வெள்ளிக் கிழமை கிளம்பி வர சொன்ன..சரி நா இன்னைக்கே பஸ்ல டிக்கெட் போடுறேன்.”

அன்று இரவே கிளம்பி மறுநாள் சென்னை வந்தவரை ஸ்ரீகாந்த் சென்று ஸ்டேஷனில் இருந்து அழைத்து வந்தான். வந்தவர் மருமகளுக்கு என அத்தனை அத்தனை வாங்கி வந்திருந்தார்.

“நம்ம ஊரு கீரை அத்தனை நல்லது இங்க எல்லாம் ப்ரெஷ்ஷா கிடைக்குமோ என்னவோ அதான் வாங்கிட்டே வந்துட்டேன்.அப்பறம் இது மாதுளை சிரப் வாமிட்டிங் அதிகமா இருக்குனு சொன்னானேனு வாங்கிட்டு வந்தேன்.

எப்போ எல்லாம் வயிறு பிரட்டுற மாதிரி இருக்கோ இதை ஒரு ஸ்பூன் சாப்ட்டா கொஞ்சம் கன்ட்ரோலா இருக்கும்.பழமெல்லாம் வாங்கிருக்கேன் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடுக்கோ..வேற என்ன சாப்பிடணும் போல இருக்கோ சொல்லு வாய்க்கு நல்லதா சமைச்சு தரேன்.சரியா நா போய் குளிச்சுட்டு வந்து டிபன் பண்றேன் நீ படுத்துக்கோ..”

என்றவர் எழுந்து செல்ல மதுவோ வாயை பிளந்து அமர்ந்திருந்தாள்.நமட்டுச் சிரிப்பு சிரித்தவாறே அவளருகில் வந்த ஸ்ரீகாந்த்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.