(Reading time: 15 - 30 minutes)

சரி சரி மதும்மா விடு நா அவங்ககிட்ட பேசிக்குறேன்.. ,என்றவன் அவளை மேலும் வருத்தப்பட வைக்க வேண்டாம் என முடிவெடுத்துக் கொண்டான்.

அடுத்து மூன்று மாத காலங்களும் தாய் வீட்டில் இருந்ததால் பெரிய அளவில் எந்த பிரச்சனையுமின்றியே கழிந்தது.குழந்தையை மது தனியாய் பார்த்துக் கொள்ளுமளவு தேறியிருந்தாள்.

நான்காவது மாதத்தில் நல்ல நாள் பார்த்து மதுவை அவள் வீட்டில் கொண்டு விடுவதாக முடிவு செய்தனர்.அடுத்த ஒரு மாதத்திற்கு அவள் மாமியார் வந்து அவளை பார்த்துக் கொள்வதாய் ஏற்பாடு.

மதுவிற்கோ கிளம்புவதற்கு முந்தைய நாள் அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

என்ன டா மது சின்ன பிள்ளை மாதிரி அழுதுகிட்டு..”

இல்லப்பா என் கல்யாணத்துக்கு முன்னாடி அம்மா சொன்னாங்களே நியாபகம் இருக்கா நமக்கு குழந்தை வந்தப்பறம் தான் அம்மாவோட அருமை தெரியும்னு அது அவ்ளோ உண்மை பா..

அம்மா இல்லாம இவளை நா எப்படி பாத்துக்க போறேனோனு கவலையா இருக்கு..ரியலி கோயிங் டூ மிஸ் யூ மா..”,என மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

மது அம்மா சொல்றத கேளு கொஞ்சம்.நீ எத்தனை ஸ்ட்ராங்கான பொண்ணு இப்படி அழலாமா..அது மட்டுமில்லாம லைஃப்ல இதெல்லாமே ஒரு ஸ்டேஜ் டா..நாம தான் ஃபேஸ் பண்ணி ஆகணும்.

மங்கயராய் பிறக்க மாதவம் செய்திட வேண்டுமம்மானு சொல்றாங்களே..அதுல தாய்மைங்கிறது தான் உச்சகட்ட விஷயம்.பத்து மாசம் வயித்துல சுமந்து கஷ்டப்பட்டு பெத்து எடுக்குறதோட முடியுற விஷயம் இல்ல.முதல் ஒரு வருஷம் ரொம்பவே கஷ்டமான காலம் தான்.குழந்தை எப்போ ஏன் அழறதுனு தெரியாது.பால் கொடுத்தா சாப்டாது.

அந்த நேரத்துல நமக்கே கையும் ஓடாது காலும் ஓடாது.தவழும்போது ஒரு வித பாதுகாப்பு கொடுக்கணும் எழுந்து நிற்கும் போது ஒருவிதம் நடக்க ஆரம்பிச்சா ஒரு விதம்னு குழந்தைக்கு மொத்தமும் நாம தான் டா..நம்மள நம்பி வந்த உயிர்..அதோட ஒவ்வொரு அசைவும் பெத்தவளுக்குத் தான் புரியும்.அதே மாதிரி எத்தனை பேர் கூட இருந்தாலும் அந்த குழந்தையும் அம்மாவை தான் தேடும்.

ஒரு அழகான நாட்கள் இதெல்லாம்..ஒண்ணும் பயப்படாத தேவையில்லாம யோசிக்காத..ஒவ்வொரு நிமிஷமும் குழந்தையோட என்ஜாய் பண்ணு..அதுவுமில்லாம உனக்காக மாமியார் வந்துகூட இருக்க போறாங்க அப்பறம் என்ன?”

அதுதான் மா இன்னும் கொடுமையே..எப்போ என்ன சண்டை வருமோனு பயமா இருக்கு..வழக்கம்போல நீ சொல்றதெல்லாம் கேட்டு கொஞ்சம் தைரியமா தான்இருக்கு..பாப்போம் சமாளிச்சுருவேன்னு நினைக்குறேன்..”

மறுநாள் தன் வீட்டிற்கு வந்தவளுக்கு மனமே வெறுமையாய் இருந்தது.மாமியார் மறுநாள் வருவதால் இன்று இவர்கள் இருவர் மட்டுமே குழந்தையோடு.ஸ்ரீகாந்தும் விடுமுறை எடுத்திருக்க குழந்தையோடு தன் மொத்த நாளையும் செலவழித்தான்.

மதுவிற்கும் அதனால் ஓரளவு வேலை செய்ய நேரமிருந்தது. ஸ்ரீகாந்தின் தாய் வந்த பின்பு வேலை என்று ஒன்றும் அவளுக்கு இல்லை எனினும் அவரது பேச்சுகள் அவளை வெகுவாய் பாதித்திருந்தது.

குழந்தை பசி எடுத்து அழுதால் வேகமாய் அறைக்குள் வருபவர் மது உணவூட்டுவதை பார்த்துவிட்டு,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பத்மினியின் "உன்னை விட மாட்டேன் என்னுயிரே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

இப்போ தான ஃபீட் பண்ண மது..திரும்பவும் அழறானா வயித்துக்கு போதலயோ என்னவோ.மூணு மாசம் முடிஞ்ச குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் எப்படி பத்தும்.புட்டிப் பால் பழக்கலையா நீ.உங்கம்மாவும் ஒண்ணும் சொல்லலையா.”

அத்தை ஆறு மாசம் வரை வேற எதுவும் கொடுக்க கூடாதுனு டாக்டர் ஸ்ட்ரிக்டா சொல்லிடாங்க..அதுவும் போக எனக்கு பீட் பண்ற அளவு இருக்கும் போது ஏன் நிறுத்தனும்.”

ஒரு முறை இரு முறை கூறியவளுக்கு அதற்கு மேல் பொறுமையில்லாமல் போனது.தடுப்பூசி போட போகும்போது அவரையும் கையோடே அழைத்துச் சென்றவள் மருத்துவரிடம் கூற,

ஏம்மா நாலு மாச குழந்தைக்கு என்ன புல் மீல்ஸ் சாப்டுற வயிறா இருக்கும் தாய்ப்பால் பத்தாம போறதுக்கு?இதுவே அவாங்களுக்கு தேவையான உணவு தான்.ஒவ்வொருத்தங்களும் குழந்தைக்கு கொடுக்க தாய்ப்பால் இல்லையேனு கவலபடுறாங்க நீங்க என்னனா நல்லது பண்ற பொண்ணையும் சேர்த்து குழப்பிட்டு இருக்கீங்க..”

என்று ஒரு கொட்டு வைத்த பின்பே அமைதியானார்.இப்படி புதிது புதிதாய் ஒரு பிரச்சனை இருவருக்கும்.குழந்தைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வைக்க மாட்டியா?நாட்டு மருந்துனு ஒண்ணும் கொடுக்க மாட்டியா?உங்கம்மா சொன்னாங்கனு பெருங்காயம் பூண்டு எல்லாம் மட்டும் உரசிக் கொடுக்குற.

இப்படி தினம் தினம் ஒரு பிரச்சனை மதுவிற்கோ மொத்தமாய் வெறுத்துப் போனது.அந்த கோபமெல்லாம் ஸ்ரீகாந்திடம் திரும்ப வழக்கம்போல் அவன் இரு புறமும் மாட்டிக் கொண்டு முழித்தான்.வெளியில் அழைத்துச் சென்று வந்தால் அவளுக்கு சற்று மாறுதலாய் இருக்கும் என எண்ணியவன் அந்த வார இறுதியில் அவளை அருகில் கடைக்கு அழைத்துச் செல்வதாய் கூற அவன் தாயோ,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.