Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - ஐ லவ் யூ - 22 - Chillzee Story - 5.0 out of 5 based on 2 votes

“எங்க வீட்டு நிலைமை சரியில்லைன்னு ஒரு கவர்ன்மென்ட் எக்ஸாம்க்கு அப்ளை செய்திருந்தேன். பத்து மணிக்கு எக்ஸாம். எங்க ஊருல இருந்து அங்கே போக இரண்டு மணி நேரத்துக்கு ஒரு பஸ் தான் வரும். நானும் என் கூட படிச்ச ராதாவும் ஒன்னா கிளம்பினோம். அன்னைக்குன்னு பார்த்து பஸ் வரவே இல்லை. அடுத்த பஸ் பிடிச்சு எக்ஸாம் எழுத முடியாது.”

தமிழ்ச்செல்வி விவரித்த விதத்தில் அங்கிருந்த மூன்று பேருக்கும் அவள் சொன்ன காட்சி கண் முன் விரிந்தது!

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ராதா அழாத குறையா நின்னா. எனக்கு சிரிப்பு வந்துச்சு.”

எங்களை போலவே இன்னும் கொஞ்சம் பேரு அந்த பஸ்சுக்காக அங்கே இருந்தாங்க.

அப்போ ஒரு கார் அங்கே வந்து நின்னது. அதுல இருந்த அவர் --- வெற்றி ---- கூட்டத்தில இருந்த ஒருத்தரை பார்த்து,

ராஜூ பஸ்சுக்கா நிக்குற? வா நான் உன்னை டிராப் செய்றேன்னு சொன்னார்.

அந்த ராஜூண்ணா எங்க ஊருக்காரர். எங்க மேல இரக்கப் பட்டு எங்களுக்கும் உதவ கேட்டுக் கிட்டார். அவரும் சரின்னு சம்மதிச்சார்.

ராஜுண்ணா சொன்ன நம்பிக்கையில நானும் ராதாவும் காருல ஏறினோம்.

ராதா அவருக்கு நன்றி மேல நன்றி சொல்ல அவரு என்னை கேள்வியா பார்த்தாரு.

அழணும்னு இல்ல ஆனா சிரிப்பு என்ன வேண்டி இருக்கு? எக்ஸாம்க்கு படிக்கலையான்னு என்னை பார்த்து கேட்டாரு.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "நீயிருந்தால் நானிருப்பேன்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

பஸ் வரலைன்னு தெரிஞ்சாச்சு. நான் வருத்தப்பட்டு அழுதா பஸ்சு ஓடி வந்திருமா என்ன? அதான் வருத்தப் படாம சிரிச்சேன்னு சொன்னேன்.

அவர் என்னை சுவாரசியமா பார்த்தார்”

இதான் எங்க முதல் சந்திப்பு”

ஒரு ப்ளோவில் கதை சொல்லிக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வி எதிரே நின்றிருந்தவனைப் பார்த்து பட்டென்று நிறுத்தினாள்.

அங்கே அவளுக்கு நேரே வெற்றி, கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு, ஒரு சுவரில் சாய்ந்து நின்ற படி அவள் சொல்வதை சுவாரசியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான்.

தொடரும்!

Episode 21

Episode 23

Go to I Love You story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

Chillzee Story

On-going Stories

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 22 - Chillzee Storysaaru 2019-02-14 15:51
Good story ha ha thamiliil kalakura po
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 22 - Chillzee StoryRaVai 2019-02-12 16:48
சினிமாவிலே கேமிராவை மூவ் பண்ணி பாத்திரத்தை அறிமுகப்படுத்தறாமாதிரி, கதையிலே அந்த டெக்னிக் ரொம்ப ரசிக்கும்படியா இருக்கு. நல்லாயிருக்கு, படிக்க!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 22 - Chillzee StoryAdharvJo 2019-02-12 16:21
wow Wah Wah Wah selvi-a kuda oru kadhai elutha sollala ma'am :D kodupotta road poduradhu idhu thano :dance: Hero stun agitaro :Q: Rajamathas smart mathas aga irukangale :P cute +Interesting update ma'am :clap: :clap: thank you. keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 22 - Chillzee StorySAJU 2019-02-12 15:54
Hahaha super aaa kathai solra tamil
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 22 - Chillzee Storymadhumathi9 2019-02-12 12:35
wow interesting aaga kathaikkul kathai (y) :clap: nice epi.waiting to read more. :thnkx: 4 this epi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 22 - Chillzee Storymahinagaraj 2019-02-12 11:56
சோ கியூட்.... :clap: :GL:
ரொம் அழகாதான கதை போயிட்டு இருந்தது.. ஏன் இந்த ஸ்டாபிங்... சீக்கரம் அடுத்த அப்டேட் போடுங்க மேம்.. :yes: :lol:
:thnkx:
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 Yesterday 21:01
கிங் – க்வீன் suite போல இரண்டு பகுதிகளை கொண்ட விஸ்தாரமான அறை அது. வெற்றி ஒரு பகுதியை எடுத்துக் கொண்டிருந்தான். தமிழ்ச்செல்வி இன்னொரு பகுதிக்கு இன்று மாறி இருந்தாள்.

ஒரே அறை என்றாலும் இரண்டு பகுதிக்கும் தேவைக்கு அதிகமான ப்ரைவசி இருந்தது.

இடைப்பட்ட பகுதியில் இருந்த கட்டில், டிவி போன்ற வசதிகளை வெற்றியை வைத்துக் கொள்ள விட்டு விட்டு அந்த க்வீன் பகுதியை மட்டும் அவளுக்காக எடுத்துக் கொண்டிருந்தாள் தமிழ்ச்செல்வி.

இரவு தூங்குவதற்கு முன் அவள் இருந்த பகுதியில் இருந்து மற்ற பகுதிக்கு செல்ல இருந்த கதவை மூட முயன்றாள்.

******************

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...ou-chillzee-story-30
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 06 Jul 2019 18:47
“அதென்ன அது நான் எதை சொன்னாலும் கேட்க கூடாதுன்னு ஒரு அடம்?” – சந்திரிகா.

கேள்வியில் எரிச்சலும் கோபமும் கலந்திருந்தது.

“அடமும் இல்லை படமும் இல்லை. அந்த வீட்டுல இருக்குறது எங்களுக்கு வசதியா இல்லம்மா” – வெற்றி.

“காதலிச்சு, அடம் பிடிச்சு, வீட்டை விட்டு வந்து கல்யாணம் செய்துக்கிட்டவங்களுக்கு தனி வீடு வசதியா இல்லையாமே! இதென்ன புது கதையா இருக்கு!?” – அரசி.

*********

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...ou-chillzee-story-28
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 29 Jun 2019 17:35
தமிழ்ச்செல்வி இதுவரை தங்க செயின் போட்டுக் கொண்டதில்லை. இப்போது அவள் கழுத்தில் கனமான தங்கத்தாலி இருந்தது.

அதை பார்த்து அவளுக்கு சந்தோஷமாகவும் இல்லை வருத்தமாகவும் இல்லை!

அவளுடைய தற்போதைய பிரச்சனை தலைவலி! தலைவலி என்றால் சாதாரண வலி இல்லை, தலையைப் பிளப்பது போல வலித்தது!

இந்த தலைவலி போதாது என்று அங்கிருந்த அமைதியான சுழல் கூடுதலாக அவளுக்கு எரிச்சலைக் கொடுத்தது.

பொய்க் கல்யாணம்! சடங்கு சம்பிரதாயம் எல்லாம் முடிந்த உடன் நேராக வீட்டிற்கு போகலாம் என்று அவள் நினைத்தது நடக்கவில்லை.

**********

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...ou-chillzee-story-27
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 09 Jun 2019 09:18
“quiet கேம் விளையாடுறீங்களா என்ன?”

ஆச்சர்யம் கலந்த வெற்றியின் குரல் கேட்கும் வரையில் நான்கு பேரும் தமிழ்ச்செல்வியின் கேள்வியின் தாக்கத்தில் இருந்து வெளியே வராமலேயே இருந்தார்கள்.

“நாங்க விளையாடுறது ஒன்னு தான் குறைச்சல்! உங்க கல்யாணம் எப்போன்னு பேசிட்டு இருந்தோம்” – அரசி.

“கல்யாணமா?” – தமிழ்ச்செல்வியை பார்த்தான் வெற்றி.

*********

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...ou-chillzee-story-26
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 26 Mar 2019 19:01
அவளுடைய கல்யாணம் நடந்த விதத்தை பற்றி பேச யசோதாவிற்கு ரொம்பவும் பிடிக்கும்.

சாயை தவிர வீட்டிலிருக்கும் சின்னவர்கள் பெரியவர்கள் ஒருத்தரிடமும் அதை பற்றி பேச முடியாது என்பதால் அதை பற்றி நேரம் கிடைக்கும் போது எல்லாம் அவளுள்ளே நினைத்துப் பார்ப்பாள்.

யாரிடமாவது சொல்ல மாட்டோமா என மனதில் பூட்டி வைதிருந்த கதையை தமிழ்ச்செல்வி கேட்கவும், ஆர்வத்துடனே சொல்ல ஆரம்பித்தாள்.

“ஹப்பா, இவ்வளோ பெரிய வாயா தமிழ் உனக்கு!! ஹா ஹா ஹா! போதும், போதும் வாயை மூடு!”

***********

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...ou-chillzee-story-25

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top