தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 12 - ஜெய்

“சொல்லுங்க... நீங்க என்கிட்டே பேசணும் அப்படின்னு பாபுட்ட சொன்னீங்களாம்.... என்ன விஷயம்...”
“ஆமாம் சக்தி சார்... கொஞ்ச நாள் முன்னாடி மணி அப்படிங்கற பையன் ஜெயில்ல தற்கொலை பண்ணிட்டான்னு நியூஸ் வந்துதே.... அது விஷயமாத்தான் பேசணும்....”
“எது, ஒரு பெண்ணை நடு ரோட்டுல வெட்டி கொலை பண்ணினானே அந்த பையனா....”
“சார்... அவன் அந்த கொலையை பண்ணலை சார்... அவங்க அம்மா, அப்பாக்கூட கோவிலுக்குதான் போயிருந்தான்.....”
“நம்புறா மாதிரி இல்லையே.... அதுக்கு முன்னாடிதான் அவன் போய் அந்த பொண்ணை கொலை பண்ணிடுவேன்னு மிரட்டி இருக்கான்... அதை செத்த அந்தப் பெண்ணே சொன்னதா அதோட தோழி சொல்லி இருக்கு... அப்படி இருக்கும்போது நீங்க சொல்றதை எப்படி நம்ப முடியும்....”
“அவன் மிரட்டினது என்னவோ உண்மைதான் சார்... இளவயசு பாருங்க... சினிமா வசனம் எல்லாம் பேசி அவளை மிரட்டி லவ் பண்ண வைக்கலாம்ன்னு நினைச்சுட்டான் போல.... இயல்புல அவனுக்கு அந்தளவுக்கெல்லாம் தைரியம் கிடையாது சார்....”
“நீங்க சொல்றது உண்மையாவே இருக்கட்டும்... அதுதான் கேஸ் முடிஞ்சு அந்த பையனுக்கு காரியமே பண்ணியாச்சு போல இருக்கே...புதைஞ்சு போன விஷயத்தை புதுசா எதுக்கு தோண்டி எடுக்கறீங்க....”
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
“சார் அவன் தற்கொலை பண்ணிக்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை.... அந்த லாக்அப்ல என்ன நடந்ததுன்னு தெரியணும்... நாங்க போய் கேட்டா எந்த விவரமும் சொல்ல மாட்டேங்கறாங்க...”
“போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்தான் ஓகேன்னு ஒத்துக்கிட்டீங்களே ”
“போலீஸ்காரங்க ஒத்துக்க வச்சுட்டாங்க சார்... ஆரம்பத்துல சப்போர்ட்டா இருந்த கட்சிக்காரங்க அப்பறம் வேற ஒரு விஷயம் கிடைக்கவும் இதை விட்டுட்டாங்க... அதுக்கு பிறகு போலீஸ்காரங்க கொடுத்த கொடைச்சல் தாங்க முடியாம கையெழுத்து போட்டு உடம்பை வாங்க வேண்டியதா போச்சு....”
“சரி இப்போ என்ன பண்ணலாம்ன்னு இருக்கீங்க....”
“சார் நாங்க போய் கேட்டா எந்த விஷயமும் சொல்ல மாட்டேங்கறாங்க... மறுபடி மறுபடி மணி வயரை கடிச்சு ஷாக் அடிச்சு செத்துப் போயிட்டான் அப்படின்னே சொல்றாங்க.... தற்கொலை பண்ணிக்க கூட கொஞ்சம் தைரியம் வேணும் சார்.... மணி அந்த அளவுக்கெல்லாம் தைரியமான ஆள் கிடையாது... எங்களாலதான் உண்மையா என்ன நடந்ததுன்னு கண்டுபிடிக்க முடியலை... நாங்க கேட்டாலும் பதில் சொல்ல மாட்டாங்க... ஆனா உங்கப்பா மந்திரிங்கறதுனால ரொம்ப சுலபமா உண்மைய தெரிஞ்சுக்கலாம்....”
“ஒரு விதத்துல நீங்க சொல்றது உண்மைன்னாலும்... சில நேரத்துல அந்தப் பதவினாலேயே அடி ஆழம் வரை போய் உண்மை கண்டுபிடிக்கறதும் கஷ்டம்.... சரி, நீங்க மணி அர்ரெஸ்ட் பண்ணி வச்ச போலீஸ்ஸ்டேஷன், அங்க இருந்த இன்ஸ்பெக்டர் பேரு, உங்க செல் போன் நம்பர் இந்த டீடைல்ஸ் கொடுங்க... நான் என்ன செய்ய முடியும்ன்னு பார்க்கறேன்.... பார்த்துட்டு விவரம் தெரிஞ்ச உடனே உங்களை கூப்பிடறேன்....ஒரு வாரம் பாருங்க.... சப்போஸ் என்கிட்டே இருந்து உங்களுக்கு கால் வரலைன்னா நீங்க என்னை காண்டக்ட் பண்ணுங்க....”
“சரிங்க சார்.... உங்களைத்தான் கடைசியா நம்பி இருக்கோம் சார்... நீங்களும் கை விரிச்சுட்டீங்கன்னா எங்களுக்கு வேற எந்த வழியாவும் உண்மையை கண்டு பிடிக்க முடியாம போய்டும்...”
“என்னால முடிஞ்சதை கண்டிப்பா பண்ணுவேன்... உங்ககிட்ட மணியோட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் காப்பி ஏதாவது இருக்கா...”
“ஆஸ்பத்திரில கொடுத்தாங்களான்னு தெரியலை சார்... நான் மணி அப்பாக்கிட்ட கேட்டுட்டு அப்படி இருந்துச்சுன்னா உங்களுக்கு அனுப்பறேன்...”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சாகம்பரியின் "மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம்" - மர்மமும் காதலும் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
“கண்டிப்பா அனுப்புங்க.... மணியோட இறப்பு சம்பந்தமா போலீஸ் என்னலாம் டாகுமென்ட் கொடுத்தாங்களோ அது எல்லாத்தையும் நாளைக்கு பாபுக்கிட்ட கொடுத்து விடுங்க... எதுவும் இல்லைனாலும் பிரச்சனை இல்லை.... நான் பார்த்துக்கறேன்...”
“ரொம்ப நன்றி சார்.... இவ்ளோ சுலபமா உங்களை பார்த்து பேச முடியும்ன்னு நினைக்கவே இல்லை.... உங்கக்கிட்ட பேசின பிறகு நிம்மதியா இருக்கு...”
“இப்பவே சந்தோஷப்படாதீங்க... கேஸ் முடியட்டும்... அப்பறம் நீங்க இங்க வந்ததோ, எங்கிட்ட உதவி கேட்டதோ மணி அப்பா, பாபு அப்பறம் உங்களுக்கு இப்படி உங்க மூணு பேரைத் தவிர வெளிய யாருக்கும் தெரிய வேண்டாம்.... எப்பவும் போல அந்த கட்சிகாரர் கிட்ட உதவி கேக்கறா மாதிரியே இருங்க.... வேற வழியா உதவி வர்றது தெரிஞ்சா போலீஸ் உஷாராக வாய்ப்பிருக்கு....”
“கண்டிப்பா சார்.... வேற யாருக்கும் சொல்ல மாட்டேன்... இப்போ கிளம்பறேன் சார்....”
மணியின் நண்பன் கிளம்ப, அடுத்து இந்த விஷயத்தை எப்படி அணுகுவது என்று யோசிக்க ஆரம்பித்தான் சக்தி....