(Reading time: 11 - 22 minutes)

சாதாரணமாக இருந்த மகன் திடீரென்று வலியில் துடிக்க ஆரம்பித்ததை அதிர்ச்சியுடன் பார்த்தார்கள் சதீஷின் பெற்றோர்....

“ஐயா சதீசு... என்னய்யா பண்ணுது... ஏன் இப்படி துடிக்கற....”

“தெரியலைம்மா திடீர்ன்னு வயிறு ரொம்ப நோவுது...”

“ஏண்டி புள்ளைக்கு காரமா எதுனாச்சும் கொடுத்துட்டியா....”

“இல்லையா காரம் ஆவாதுன்னு பாத்து பாத்துதானே சமைக்கிறேன்.... மதியத்துக்கு  கூட கீரைதான் கடைஞ்சேன்.... கூட பூண்டு ரசம் சாப்பிட்டான்... காலைல கூட கஞ்சிதான் குடிச்சான்....”

“ரொம்ப நோவுதாய்யா... வாயுப் பிடிப்பா இருக்குமோ... நான் பொய் சோடா வாங்கியாறவா....”

“ரொம்ப நோவுதுப்பா.... சரி நீங்க வாங்கிட்டு வாங்க.... குடிச்சு பாக்கறேன்.....”

“நீ போய் சோடா வாங்கியா.... அதுக்குள்ள நான் சீரக கஷாயம் போடுறேன்... எதுனா வயுத்துப் புண்ணு இருந்தாக்கூட அது ஆத்திடும்....”

சதீஷின் அன்னையும், தந்தையும் மாற்றி மாற்றி செய்த  அனைத்து கை வைத்தியங்களும் பலனின்றி போனது... அவனின் வலி அதிகமாதே தவிர குறையவில்லை... சற்று நேரத்தில் சாப்பிட்ட அனைத்தையும் வாந்தி எடுக்க ஆரம்பித்தான் சதீஷ்...

“ஐயா சதீசு... எனக்கென்னவோ பயமா இருக்குதுய்யா.... இப்போதான் ஆப்பரேஷன் வேற ஆகி இருக்கு... நாம பேசாம டாக்டர் கிட்ட போய்டுவோமா...”

“ஒண்ணும் இருக்காதுப்பா... நேத்து ராத்திரி ரொம்ப நேரம் கழிச்சு சாப்பிட்டேன் இல்லை அதுனால ஜீரணம் ஆகாம  கூட வலி இருக்கலாம்...”

“ஏம்ப்பா அது இம்மாநேரம் கழிச்சாப்பா வலிக்கும்.... எதுவா இருந்தாலும் டாக்டர் சொல்லட்டும்.... நீ மொதோ கிளம்பு... இப்படித்தான் போனவாட்டியும் ஒண்ணும் இல்லைன்னு விட்டுட்டு கடைசில ஆபரேஷன்ல கொண்டாந்து விட்டுது.... நாம இப்போ போகற டாக்டர் நல்ல ராசிக்காரர் சதீசு.... துட்டும் அதிகமா வாங்க மாட்டாரு.... மருத்துவத்தை சேவை மாதிரி செய்யறாரு... அதுவும் ஏழைங்கன்னு தெரிஞ்சா சில சமயம் இலவசமா கூட பார்ப்பாரு.... உன்னோட மாமாக்கு மஞ்சக்காமாலை வந்தபோது அவர்க்கிட்டதான் காட்டி வைத்தியம் பார்த்தோம்... பாதி மருந்து அவர் இலவசமாத்தான் கொடுத்தாரு.... ”,சதீஷின் அன்னை சொல்ல, அதற்கு பின் சதீஷின் மறுப்புகள் எதையும் ஏற்காமல் அவன் தந்தை சதீஷை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார்....

“எப்போதுலேர்ந்து வலி இருக்குது தம்பி....”

“பதினோரு மணி போல லேசா ஆரம்பிச்சுது டாக்டர்.... பசினால கூட இருக்கும்ன்னு சொல்லி மதியம் சாப்பிட்டேன்... அதுக்கு பிறகும் வலி நிக்கலை... நேரம் ஆக ஆக அதிகமாத்தான் ஆகுது.....”

“இதுக்கு முன்னாடி இப்படி வந்திருக்கா....”, மருத்துவர் கேட்க, சதீஷ் தனக்கு முன்பு இதே போல் வலி வந்ததையும், அதன் பிறகு அதற்காக நடந்த அறுவை சிகிச்சை பற்றியும் கூறினான்...

“ஓ நீங்க சொல்றதை கேட்டா காம்ப்ளிகேட்டா இருக்கும் போல.... டெஸ்ட் பண்ணாம மருந்து கொடுக்க முடியாது... இப்போதைக்கு ஜஸ்ட் வலி குறையவும், வாந்தி நிக்கவும் மட்டும் ஊசி போடறேன்... நீங்க அடுத்த தெருவுல லேப் இருக்கு... அங்க நான் எழுதி கொடுக்கற டெஸ்ட் எடுத்துடுங்க.... இன்னைக்கு நைட்க்குள்ள ரிசல்ட் தந்திடுவாங்க.... ரிப்போர்ட் பார்த்துட்டு அடுத்து என்ன பண்ணலாம்னு பார்க்கலாம்....”

“டாக்டர் ஐயா, எதுனா பெரிய பிரச்சனையா... எதுக்கு மறுபடியும் டெஸ்ட் பண்ண சொல்றீங்க....”

“இல்லை பெரியவரே.... இப்போதான் கிட்னி எடுத்திருக்காங்க... மறுபடியும் வலி வருதுன்னா டெஸ்ட் பண்ணி  பார்க்காம மேலோட்டமா மருந்து கொடுக்க முடியாது.... சதீஷ் நீங்க முன்னாடி எடுத்த  ரிப்போர்ட் எல்லாம் வச்சுருக்கீங்களா.....”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா வெயின் "மையலில் மனம் சாய்ந்த வேளை..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“இருக்கு டாக்டர்..... இங்க ஒரு காப்பி வச்சுருக்கேன்... சரி அப்போ முன்னாடி எடுத்த டெஸ்ட் ரிசல்ட், அப்பறம் இன்னைக்கு எடுத்தது எல்லாத்தையும் எடுத்துட்டு நாளைக்கு காலைல என்னை வந்து பாருங்க....”,டாக்டர் கூற அவரிடம் ஊசியை போட்டுக்கொண்டு அருகிலிருந்த லேபில் பரிசோதனைக்கு ரத்தம் கொடுத்துவிட்டு சதீஷும் அவன் தந்தையும் வீடு வந்து சேர்ந்தார்கள்....

இரவெல்லாம் சதீஷிற்கும் அவனின் பெற்றோருக்கும் உறக்கம் என்பதே சிறிதளவும் இல்லை.... மறுநாள் காலை மருத்துவர் என்ன சொல்லப்போகிறாரோ என்ற திகிலுடனே நேரத்தை கடத்தினர்....

காலை பத்து மணியளவில் அனைத்து ரிப்போர்ட்களையும் எடுத்துக்கொண்டு மருத்துவரை சந்திக்க சென்றனர் சதீஷும், அவன் தந்தையும்....

ரிப்போர்ட்டை பார்க்க ஆரம்பித்த மருத்துவரின் முகம் சிறிது சிறிதாக மாற ஆரம்பித்தது....  மருத்துவர் அறிக்கையை படித்துவிட்டு சதீஷிடமும், அவனின் தந்தையிடமும் பேச ஆரம்பித்தார்... அவர் பேசுவதை இருவரும் முகத்தில் திகிலடிக்க கேட்க ஆரம்பித்தனர்....

க்தி காயத்ரியின் தாலி கட்டிய அந்த நிமிடம் அந்த அரங்கமே அதிர்ச்சியில் உறைந்தது.... யாருக்கும் ஒன்றும் புரியாத நிலை.... காயத்ரியின் தாய் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார்.... திகிலில் உறைந்து நின்ற காயத்ரியின் காதருகில் சென்ற சக்தி....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.