(Reading time: 11 - 22 minutes)

“காயத்ரி இப்போ நடந்ததுக்கு மன்னிப்பு கேட்டுக்கறேன்... வேற வழியில்லாம இந்த வேலை பண்ண வேண்டியதா போச்சு... தயவு செய்து நீயும் உங்கம்மா மாதிரி மயக்கம் போட்டுடாத... நான் இப்போ சொல்லப்போற எதையும் மறுத்து சொல்லாத.... எதனால இப்படி பண்ணினேன்னு இங்க இருந்து வெளிய போன உடனேயே சொல்லுறேன்.....”,சக்தி கூறியவுடன் அதிர்ச்சியில் தலையைக் கூட ஆட்ட முடியாமல் தன் கழுத்திலிருந்த தாலியையே வெறித்தபடி இருந்தாள் காயத்ரி.....

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

காயத்ரியின் அன்னையின் முகத்தில் தண்ணீர் தெளித்து அவரின் மயக்கத்தை தெளிய வைத்த சந்தியா சக்தி காயத்ரியிடம் கூறியதையே கூறினாள்.... அவரால் இப்பொழுது நடந்ததை கொஞ்சமும் ஜீரணிக்க முடியவில்லை.... தனியார் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாக போய்கொண்டிருக்கும் நிகழ்ச்சி.... எத்தனை பேர் இதை பார்த்தார்களோ.... கண்ணீரை அடக்க முடியாமல் விக்கி விக்கி அழுதபடியே மேடையை நோக்கி நகர ஆரம்பித்தார்....

அதற்குள் அங்கிருந்த மைக்கின் அருகில் வந்த சக்தி அனைவரையும் பார்த்து பேச ஆரம்பித்தான்....

“எல்லாருக்கும் வணக்கம்... இங்க பரிசு விழா நடந்துட்டு இருக்கிறபோது இப்படி நடந்ததுக்கு நான் முதல்ல மன்னிப்பு கேட்டுக்கறேன்...”

“ஹலோ இன்ஸ்பெக்டர் என்ன பார்த்துட்டு இருக்கீங்க.... அவன் பாட்டுக்கு வந்தான், தாலி கட்டிட்டு என்னமோ பிரசங்கம் பண்ணிட்டு இருக்கான்.... மொதல்ல அவனை அர்ரெஸ்ட் பண்ணுங்க....”, தாளாளரின் மகன் சொல்ல, சக்தியை கைது செய்வதா, செய்தால் மந்திரியின் கோவத்திற்கு ஆளாக வேண்டி வருமோ என்று கையைப் பிசைந்தார் அங்கிருந்த காவலதிகாரி...

“அவங்களுக்கு விருப்பம் இல்லைன்னு உங்களுக்குத் தெரியுமா...”

“எங்க அந்தப் பொண்ணுக்கு உன்னை பிடிச்சிருக்குன்னு எல்லாருக்கும் நேரா சொல்ல சொல்லு பார்க்கலாம்....”

“எங்க விஷயத்தை ஊர் முழுவதும் சொல்லி டமாரம் அடிக்க எங்களுக்கு விருப்பம் இல்லை.. அதனால காயத்ரி இப்போ எதுவும் சொல்ல மாட்டா....”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "நீயிருந்தால் நானிருப்பேன்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“அப்படியா ஆனா நீ இப்போ செய்திருக்க காரியம் என்ன ரகசியமானதா.... இந்த ஊர் என்ன, உலகம் முழுக்கவே இந்த விஷயம் இப்போ தெரிஞ்சு போச்சே... இத்தனை பேருக்கு நேராத்தானே தாலி கட்டினே... அப்போ அத்தனை பேருக்கும் நீ விளக்கம் சொல்லித்தான் ஆகணும்...”

“நான் ஏன் இப்படி பண்ணினேன்னு காயத்ரிக்கு தெரியும்....”, சக்தி சொல்ல காயத்ரி அவனை அதிர்ந்து பார்த்தாள்... அவளைக் கண்டுகொள்ளாமல், “அவங்க வீட்டுக்கும், என் வீட்டுக்கும் நடந்ததுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கு... முதலில் அதை பண்ணுறேன்.... அதுக்குப் பிறகு உங்க எல்லாரையும் கூப்பிட்டு கண்டிப்பா எதுக்காக இந்த அவசர கல்யாணம் அப்படின்னு சொல்லுறேன்... அதனால இப்போ நீங்க கொடுக்க வேண்டிய பரிசை கொடுத்துட்டீங்கன்னா நாங்க கிளம்பிட்டே இருப்போம்...”, சக்தி பேசியதற்கு மறுப்பு எதுவும் காயத்ரி தரப்பிலிருந்து வராததால் தாளாளர் அவளின் பரிசைக் கொடுத்து அனுப்பினார்...

காயத்ரியின் அன்னையின் அருகில் வந்த சக்தி, “இங்க எதுவும் பேச வேண்டாம்... எல்லாத்தையும் எங்க வீட்டுல போய் பேசிக்கலாம்....”,என்று கூற, அனைவரும் சக்தியின் காரில் ஏறி அவன் வீட்டை அடைந்தார்கள்....

சக்தியின் கார் அவன் வீட்டை அடைந்து அனைவரும் இறங்கி நடந்து வீட்டின் உள்செல்ல காலை வைக்க,  “எந்த எடுபட்ட பயலாவது வீட்டுள்ள காலை வச்சான் வகுந்துருவேன் வகுந்து...”,என்ற கர்ஜனைக் குரல் கேட்க, கூடவே வீச்சரிவாள் ஒன்று வாசலில் வந்து ‘ணங்’ என்ற சத்தத்துடன் விழுந்தது....  

தொடரும்

Episode # 11

Episode # 13

Go to Gayathri manthirathai story main page

{kunena_discuss:1216} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.