(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 11 - ஜெய்

Gayathri manthirathai

ணியின் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் கூட்டம் சேர சேர அங்கு பதற்ற நிலை உருவாக ஆரம்பித்தது....  எதிர்கட்சிகள் இதை தங்களுக்கு ஒரு வாய்ப்பாக கருதி மணியின் இறப்பை அவனின் சாதியோடு இணைத்து அரசியல் போராட்டமாக மாற்ற ஆரம்பித்தார்கள்...

அடுத்த மூன்று மணி நேரத்தில் நிலைமை கட்டுக்கடங்காமல் போக அமைச்சரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பால் போலீசார் மணியின் உடலை தற்பொழுது அவர்களிடம் ஒப்படைக்க போவதில்லை என்றும் பேசி முடிவெடுக்கலாம் என்றும் கூறி அனைவரையும் கலைந்து போகும்படி அறிவிக்க... காவல்துறையை சேர்ந்தவர்கள் மணியின் உறவினர்களை அப்புறப்படுத்த ஆரம்பித்தார்கள்....

ஆனால் மணியின் உறவினர்களோ  மறு பிரேதப்பரிசோதனை தவிர வேறு எந்த வித பேச்சு வார்த்தைக்கும் நாங்கள் உடன் பட மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறிவிட, முதலில் அந்த இடத்தை விட்டு கலைந்து செல்லுமாறும் எதுவாக இருந்தாலும் மறுநாள் தன்னை காவல் நிலையத்தில் வந்து பார்க்குமாறு கூறி அவர்களை கலைக்க பார்த்தார் அங்கிருந்த காவலதிகாரி....

மணியின் பெற்றோர்களிடம் வந்த எதிர்கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்கள் அவர்களை கவலைப்படாமல் இருக்குமாறும் தங்கள் முழு ஆதரவு அவர்களுக்கு உள்ளதென்றும் கூறி ஆறுதல்படுத்த இங்கு நடந்து கொண்டிருக்கும் எதுவும் புரியாமல் தங்கள் மகனை நினைத்து கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார்கள் அவனின் பெற்றோர்.....

இரண்டு நாட்கள் கடந்தும் மணியின் விஷயத்தில் ஒரு தீர்வும் எடுக்க முடியாமல் திணறியது காவல்துறை....

லாக்அப் மரணங்கள் சர்வ சாதாரணமான விஷயமாக மாறிவிட்ட காலகட்டத்தில் இதையும் சுலபமாக மூடிவிடலாம் என்ற மனநிலையில் இருந்த காவல்துறை மணியின் விஷயத்தில் அதை செயல்படுத்த முடியாமல் தடுமாற ஆரம்பித்தது....

மிகச்சாதாரண யாரும் அறியாத மணி இரண்டு நாளில் தொலைகாட்சி மற்றும் சமூக ஊடகங்களால் உலகமே திரும்பி பார்க்கும் ஆளாக மாறினான்....

பெண்ணை கொலை செய்த குற்றத்தால் தற்கொலை செய்துள்ளான் என்று ஒரு பிரிவும், காவல்துறையால் ஜோடிக்கப்பட்டு குற்றவாளியாக்கப்பட்டு கொல்லப்பட்டான்  என்று மற்றொரு பிரிவுமாக விவாதிக்க ஆரம்பித்தார்கள்... விஷயமே தெரியாமல் பொது ஊடகங்களிலும் ஆளாளுக்கு கருத்து தெரிவிக்க சாதாரண விஷயம், காதல், ஜாதி சமூகம் என்று பல்வேறு விஷயங்களில் பயணப்பட்டு மீடியாவிற்கு நல்ல அவலாக அமைந்தது....

இதில் இழுபட்டு போனது மணியின் பெற்றோர்தான்.... தன் மகன் இறந்து இரண்டு நாட்கள் ஆன பின்னும் இன்னும் அவன் முகம் கூட காண முடியா சோகத்தில் இருந்தார்கள்...

எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் மறு பிரேதபரிசோதனை இல்லாமல் உடலை வாங்கக்கூடாது என்று பேசிவிட்டு போக, ஆளும் கட்சியை சேர்ந்தவர்களும், காவல் துறை அதிகாரிகளும் எந்த பிரச்னையும் இல்லாமல்  உடலை பெற்றுக்கொள்ளுமாறு கூறி வற்புறுத்த ஆரம்பித்தார்கள்....

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

முதலில் சாதாரணமாக அவர்களுக்கு ஆறுதல் சொல்வதாக ஆரம்பித்த பேச்சுக்கள் இரண்டு நாளில் தங்கள் சொல்லுக்கு அவர்களை பணியும்படி அவர்களை மிரட்டும் அளவுக்கு போனது.... இரண்டு பக்கமும் போக முடியாத நிலையில் இருந்தனர் மணியின் பெற்றோர்....

அடுத்த சில நாட்களும் இழுபறி நடக்க, அடுத்து சினிமா நடிகர் ஒருவர் கொடுத்த அறிக்கையால் மக்களின் கவனமும் ஊடகத்தின் கவனமும் அந்த புறம் திரும்ப, இங்கு காவல்துறை கொடுத்த அழுத்தத்தால் மணியின் உடலை பெற்றுக்கொண்ட அவனின் பெற்றோர் அவன் உடலை தங்கள் ஊருக்கு எடுத்து சென்று புதைத்தார்கள்....

அரசியல் கட்சிகளுக்கும், ஊடகங்களுக்கும் கிடைக்கும் பல விஷயங்களில் ஒரு விஷயம் மணியின் மரணம்... அந்த நேரத்தில் அவன் மரணம் அவர்களின் கட்சியின் பெயர் மறந்த மக்களின் மனதில் ஞாபகப்படுத்தவும், ஊடகத்துறைக்கு TRP ரேட்டிங் ஏறவும் உதவியது.... அடுத்த சில நாட்களில் அந்த புண்ணியத்தை சினிமா பிரபலம் எடுத்துக்கொண்டதால் மணியின் பெற்றோரை அம்போ என்று விட்டுவிட்டனர் இந்த இருவரும்....

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சாகம்பரியின் "மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம்" - மர்மமும் காதலும் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

தன் மகன் உண்மையில் தற்கொலை செய்து கொண்டானா இல்லை கொலை செய்யப்பட்டானா என்று தெரியாமல் கலங்கித் தவித்தனர் மணியின் பெற்றோர்....

நன்றாக படித்து விஷயம் அறிந்தவர்களுக்கே இந்த மாதிரி நிலையின் என்ன செய்வது என்று புரியாதிருக்கும் நிலையில் மணியின் பெற்றோரை போன்றவரின் நிலை என்ன சொல்ல....

காவல்துறையின் கெடுபிடி, அரசியல்வாதிகள் தலையீடு, மீடியாக்களின் தொடர்ந்த தொல்லை இவற்றிலிருந்து ஒருவாறாக அவர்கள் விடுபட்டு தன் மகன் காவல் நிலையத்தில் இருந்தபொழுது இருந்த உண்மை நிலையை கண்டறிய என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தனர்....

“ஏம்ப்பா முத்து நேத்து அந்த சமூக அமைப்பு ஆளுங்ககிட்ட பேசினியே.... என்னப்பா ஆச்சு....”

“அட போங்க மாமா... ரெண்டு வாரம் முன்னாடி வரைக்கும் மணிக்கு நியாயம் கிடைக்காம நான் ஓயப்போறதில்லைன்னு சொல்லிட்டு இருந்தவரு, நேத்து  அந்த நடிகர் எப்படி அப்படி பேசலாம்ன்னு அடுத்த போராட்டத்துல இறங்கிட்டாரு.... இதுல அவரை பக்கத்துல போய் பார்க்க கூட முடியலை... இதுல எங்க பேச... அவரோட கூட ஒருத்தர் சுத்திட்டு இருந்தாரு.. அவர்கிட்டதான் பேசிட்டு வந்தேன்... அவரும் பார்க்கறேன்னு சொல்லி இருக்காரு.... எனக்கென்னவோ இவங்க நமக்கு உதவுவாங்கன்னு நம்பிக்கை இல்லை மாமா.....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.