(Reading time: 10 - 19 minutes)

“என்னாய்யா இப்படி சொல்லிட்ட... அப்போ எம்புள்ளை செத்ததுக்கு நியாயம் கிடைக்காதா....”

“மாமா நம்ம மந்திரி அய்யாவை போய் பார்த்தா என்ன... அவர் கண்டிப்பா நமக்கு ஹெல்ப் பண்ணுவாரு...”

“அப்படி சுலபமா நம்ம மாதிரி ஆளுங்க அவரை பார்க்க முடியுமா முத்து.. முன்னவே ரொம்ப வேலையா இருப்பாரு... இப்போ அவரு மத்திய மந்திரி வேற.....”

“என் கூட வேலை செய்யறவனோட தம்பி அவர் பையன் படிக்கிற காலேஜ்லதான் படிக்கிறான் மாமா... அவன்கிட்ட முழு விவரத்தையும் சொல்லி அவரை பார்க்க முடியுதான்னு பார்க்கிறேன்....”

“சரிப்பா என்புள்ளை எந்தத் தப்பும் பண்ணலை... அவனுக்கு கண்டிப்பா நீதி கிடைக்கணும்....”

“கண்டிப்பா மாமா... நான் அவனைப் பார்த்து பேசிட்டு உங்களுக்கு விவரம் சொல்லுறேன்....”

தீஷ் இப்போ எப்படி இருக்க.. வலி இருக்கா...”, சுந்தர் கேட்க, ‘லேசான வலி தெரிகிறது என்று மெது குரலில் பேசினான் சதீஷ்....

“சார் இது ICU வார்டு இங்க நின்னு பேசக்கூடாது.... நீங்க ஜஸ்ட் பார்த்துட்டு மட்டும் போய்டுங்க சார்.... நாளைக்கு வார்டுக்கு மாத்திடுவோம்.... அப்புறம் நீங்க கூட இருக்கலாம்... இப்ப கிளம்புங்க...”

நர்ஸ் அவர்களை விரட்ட இருவரும் வெளியில் வந்தார்கள்....

மறுநாள் அவனை வார்டுக்கு மாற்ற சதீஷின் தந்தையும், சுந்தரும் மாற்றி மாற்றி அவனை கவனித்து கொண்டார்கள்... 

“இந்த கல்லூரி நடத்துறவங்க நிஜமாகவே மகராசனா இருக்கணும்ப்பா.... நம்ம புள்ளைக்கு என்னா கவனிப்பு....”

“ஆமாம்ப்பா... நானுமே இது எதிர்பார்க்கலை.... ப்ரீயா ஆப்பரேஷன் பண்றாங்களே அதனால கவனிப்பு குறைச்சலா இருக்கும்ன்னு நினைச்சேன்.... ஆனா பணம் குடுக்கறவங்களுக்கு கிடைக்கற கவனிப்பை விட இவனுக்கு அதிகமா இருக்கு.... நீ எப்படி பயந்த சதீஷ்... பாரு உனக்கு எப்படி ராஜ மரியாதை கிடைக்குதுன்னு....”

“ஆமாம்டா நான்கூட இலவசம்ன்னு சொல்லிட்டு அரைகுறையா விட்டுடுவாங்களோன்னு பயந்தேன்.... நல்லவேளை அப்படி எதுவும் ஆகல....”

“ஆனாலும் இந்த சின்ன வயசுல இப்படி உனக்கு கிட்னி எடுக்க வேண்டியதா போய்டுச்சேன்னுதான் மனசுக்கு வேதனையா இருக்கு சதீசு....”

“கவலைப்படாதீங்கப்பா.... இனி வேளைக்கு சரியா சாப்பிட்டு உடம்பை கவனமா பார்த்துக்கறேன்....”

“ஆமாம்ப்பா நீங்க கவலைப்படாதீங்க.... நான் கூட இருந்து அவனை சரியான நேரத்துக்கு சத்தானதா சாப்பிட வைக்கறேன்....”

“நீ கூட இருக்கும்போது இனி நான் சதீஷ் பத்தி கவலையே பட மாட்டேன் சுந்தர்... என்னைய விட நீ அவனை நல்லா பார்த்துக்கற... சதீசு அம்மாக்கிட்ட ரெண்டு வார்த்தை பேசுய்யா.... நேத்து உன்னைய உள்ள கூப்பிட்டு போனதுல இருந்து இப்போ வரைக்கும் ஒண்ணும் சாப்பிடாம தூங்காம கிடக்கறா...”

சதீஷின் தந்தை கூற அவன் தன் தாயிடம் பேச ஆரம்பித்தான்....

அடுத்த இரு வாரங்கள் மருத்துவரின் கண்காணிப்பில் உடல்நிலை தேறி ஒருவாறாக இயல்பு நிலைக்கு திரும்பினான் சதீஷ்,,,, மருத்துவனை வாசம் முடிந்து கல்லூரிக்கு திரும்பி அவன் நாட்களும் படிப்பில் கழிய ஆரம்பித்தது....

இரு மாதங்களுக்கு பிறகு  செமஸ்டர் பரிச்சைகள் முடிந்து கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்க சதீஷ் தன் பெற்றோரை பார்க்க அவன் ஊருக்கு சென்றான்....

முதல் இரு நாட்கள் சாதாரணமாக கழிய மூன்றாம் நாள் காலை வயிற்றில் லேசாக வலியெடுக்க ஆரம்பிக்க, அடுத்த அரைமணியில் உச்சகட்ட வலியில் துடிக்க ஆரம்பித்தான் சதீஷ்....

“காயத்ரி இன்னைக்கு எத்தனை மணிக்குடி கிளம்பனும்.....”

“விழா சாயங்காலம் ஆறு மணிக்குமா,,, அங்க அஞ்சரை மணிக்கு இருக்கறா மாதிரி வர சொல்லி இருக்கா...”

“ஏண்டி காயத்ரி.... உன்னோட சிநேகிதி வேறேன்னு சொல்லி இருக்காளே.... பேசாம நீ அவளோடே போயிட்டு வந்துடேன்... நான் வேற எதுக்கு அங்கல்லாம் வந்துண்டு....”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிரேமாவின் சுப்பையாவின் "உன்னில் தொலைந்தவன் நானடி..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“அம்மா ப்ளீஸ்ம்மா... நீயும் வாம்மா... சந்தியா வந்தாலும் நீ கூட இருந்தாத்தான் நேக்கு தைரியமா இருக்கும்....”

“சரிடி சந்தியா இங்க வராளா.... இல்லை நேரா விழா நடக்க எடத்துக்கே வரேன்னு சொல்லிட்டாளா....”

“இங்க வரலைம்மா.... அவ கல்யாண மண்டபத்துக்கே நேரா வரேன்னு சொல்லிட்டா....”

மாலை காயத்ரியும் அவள் அன்னையும் கிளம்பி விழா நடைபெறும் இடம் சென்று அடைந்தார்கள்...  சந்தியாவும் இவர்களுக்கு முன்னே வந்து அங்கு காத்திருந்தாள்...

“ஹேய் சூப்பரா இருக்க காயு.... இந்த வைட் சல்வார்ல அப்படியே அள்ற.போ.... எப்படி இருக்கீங்க ஆன்ட்டி...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.