(Reading time: 12 - 23 minutes)

தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 13 - ஜெய்

Gayathri manthirathai

வெளியில் பாதுகாபிற்காக ஆயுதம் தாங்கிய காவலர்களை கண்டு காரிலிருந்து மிரண்டபடியே இறங்கி வாயிலுக்கு அருகில் சென்ற காயத்ரியும் அவள் தாயும், அரிவாள் வந்து விழுந்த வேகத்தையும் கூடவே எழுந்த கர்ஜனையையும் பார்த்து மேலும் அரண்டு போய் நின்றார்கள்... சக்தியும், சந்தியாவும் இது எங்களுக்கு ஜகஜமப்பா என்ற பாவனையுடன் ஒருவரை ஒருவர் பார்த்து கண்களால் அடுத்து என்ன செய்வது என்று பேசிக் கொண்டார்கள்...

இரண்டு நிமிடங்களுக்கு பிறகு ராஜ தோரணையில் ஒரு பெண்மணி சக்தியை முறைத்தபடியே வாயிலுக்கு வந்தார்... அவரின் தோரணையைப் பார்த்து இன்னும் பயந்து நின்றார்கள் காயத்ரியும் அவள் தாயும்...

“எம்மாவ் என்னாது இது... புதுசா கல்யாணம் ஆகி வர்றவங்களை ஆரத்தி எடுத்து வரவேற்கணும், இப்படி அரிவாளை எல்லாம் தூக்கி போட்டு வரவேற்கக்கூடாது... நடைமுறை பழக்க வழக்கம் கொஞ்சம் கூட தெரியலையே.... உங்க வீட்டுல என்னத்த சொல்லிக்கொடுத்து வளர்த்தாங்களோ...”, சக்தி பேச கீழே இருந்த அரிவாள் அந்தப் பெண்மணியின் கைக்கு இடம் மாறியது....

“இங்க பாரும்மா... பேச்சு பேச்சா இருக்கணும்.... அரிவாளை தீட்டுறது எல்லாம் என்ன பழக்கம்.... எதையும் குணமா வாயால சொல்லணும்...”, சக்தி சொல்ல, இப்பொழுது அரிவாளின் முனை சக்தியின் அன்னையால் கூர் பார்க்கப்பட்டது....

“எம்மாவ் எதுனாச்சும் பேசும்மா... மனுஷனுக்கு பீதி ஆகுதுல்ல...”, சக்தி பேச பேச இவன் என்ன விதமான டிசைன் என்பது போல பார்த்தாள் காயத்ரி....

“கமலம் அவங்களை உள்ள கூப்புடும்மா... வெளிய நிக்க வச்சுட்டு என்ன விளையாட்டு...”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அரிவாள் தூக்கி கூர் பார்ப்பதை விளையாட்டு என்று சொல்லும் பிரகஸ்பதி யார் என்பது போல் பார்த்தார்கள் காயத்ரியும் அவள் தாயும்....

அங்கு மத்திய மந்திரி நிற்க, அவர்களுக்கு தலை சுற்றாத குறை... ஏற்கனவே அங்கு அரிவாளுடன் நிற்கும் பெண்மணியை போஸ்டர்களில் ஏகப்பட்ட இடங்களில் பார்த்திருக்கிறார்கள்... அந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் வெளி வராத நிலையில் மத்திய மந்திரியும் அங்கு நிற்க, இன்னும் அதிர்ச்சி ஆனார்கள்.... சந்தியாவை பற்றியோ அவளின் குடும்பத்தை பற்றியோ பெரிய அளவில் காயத்ரிக்கு எதுவும் தெரியாது... சக்தியையும் பார்த்திருக்கிறாளே தவிர அவனின் பின்புலம் அவளுக்கு தெரியாது...

சக்தியின் அன்னை வழிவிட சக்தியும், சந்தியாவும் பம்மியபடியே காயத்ரியையும் அவள் அன்னையையும் உள்ளே அழைத்து சென்றார்கள்....

அனைவரும் உள்ளே நுழைந்தவுடன் அவர்களை அமர சொன்னார் சக்தியின் தந்தை....

சக்தியை முறைத்தபடியே அவன் அன்னை அமர, அவர் அருகில் பாவம்போல முகத்தை வைத்தபடியே சென்று அமர்ந்தான் சக்தி....

“என்ன சக்தி இதெல்லாம்... திடுதிப்புன்னு இப்படி ஒரு காரியத்தை செஞ்சுட்ட.... சின்ன பொண்ணுடா... ஊரே பார்க்குறா மாதிரி பண்ணிட்டியே.... நீயே நினைச்சாலும் சரி பண்ண முடியாத தப்பு இது.... எதுக்காக இந்த அவசர கல்யாணம்....”

“அப்பா அந்த சுந்தர்  மேடைல வச்சு காயத்ரி கழுத்துல தாலியை கட்டுறதா இருந்தான்ப்பா....”

“நீ மட்டும் என்ன.... அதே காரியம்தான பண்ணி வச்சிருக்க....”, முதல் முறையாக வாயைத் திறந்தார் சக்தியின் அன்னை...

“அம்மா நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளும்மா... இன்னைக்கு அஞ்சு  மணி போல மாமா கால் பண்ணி இருந்தாரு.. அந்த சுந்தர் இன்னைக்கு விழா நடக்கும்போது அத்தனை பேர் முன்னாடி காயத்ரிக்கு தாலி கட்ட போறதா அவனோட ஆள் ஒருத்தன் டாஸ்மாக்ல சொல்லிட்டு இருந்தானாம்.... நாங்க ஏற்கனவே வேற ஒரு விஷயத்துக்காக அவனை கண்காணிச்சுட்டு  இருந்தோம்... மாமாவோட ஆள் இதை கேட்டுட்டு வந்து அவர்கிட்ட சொல்லி இருக்கான்...”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சாகம்பரியின் "யானும் நீயும் எவ்வழி அறிதும் " - காதல் கலந்த Sci-fi தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“அஞ்சு மணிக்கு உனக்கு விஷயம் தெரிஞ்சு இருக்கு... உடனடியா நீ சந்தியாக்கு கூப்பிட்டு விஷயத்தை தெரியபடுத்தி அங்க போக விடாம தடுத்திருக்கலாமே.....”

“இல்லைம்மா நான் விஷயம் சொல்ல கூப்பிடும்போது ஏற்கனவே அவங்க அங்க போய்ட்டாங்க... அந்த சுந்தரும் அவங்களை பார்த்துட்டான்... உடனடியா அவங்க அங்க இருந்து கிளம்பினா பிரச்சனை ஆகப் போகுதுன்னு, நானே நேரடியா போயிட்டேன்....”

“அப்பறம் என்ன உடனடியா அவங்களை கூப்பிட்டு கிளம்ப வேண்டியதுதானே...”

“நான் அங்க போய் சேரும்போது விழா ஆரம்பிச்சுடுச்சு... சரின்னு நான் சந்தியாக்கிட்ட போய் காயத்ரியை கூட்டிட்டு வர சொல்லலாம்ன்னு பார்த்தா, காயத்ரி அம்மாக்கு பின்னால உக்கார்ந்து இருந்தவன் கைல துப்பாக்கியோட இருந்தான்... இது வேலைக்காகாதுன்னு மேடைக்கே போய்டலாம், ஏதாவது பண்ணி விழாவை கொஞ்சம் குழப்பி விடலாம்ன்னு நினைச்சு மேடைக்கிட்ட போகும்போதே அந்த நாதாரி தாலியை பாக்கெட்ல இருந்து எடுத்து இருந்தான்... அதுதான் நான் உடனடியா களத்துல குதிச்சு இந்த வேலை பண்ண வேண்டியதா போச்சு...”, சக்தி சொல்லி முடிக்க தங்களை சுற்றி நடந்த சதி வலையை நினைத்து கலங்கிப் போய் அமர்ந்திருந்தார்கள் காயத்ரியும், அவள் தாயும்...

“மகனே நீ சொல்ற கதை ஓரளவுக்கு ஒத்துக்கறா மாதிரி கோர்வையா இருந்தாலும் நிறைய இடங்களில் ஓட்டை இருக்குதுடா....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.