(Reading time: 12 - 23 minutes)

“அப்பா என்னப்பா இப்படி பொசுக்குன்னு கதைன்னு சொல்லிட்டீங்க... இது கதையல்ல நிஜம்ப்பா...”

“அந்த ப்ரோக்ராமை இப்போ நிறுத்திட்டாங்க இல்லை... அப்படி இல்லைன்னா நானே இந்த பொண்ணை அங்க நியாயம் கேக்க அனுப்பி உனக்கு டின்னு கட்டி இருப்பேன்....”

“why mummy why.... நல்லது பண்ணின நாயகனுக்கு நீங்க கொடுக்கற சன்மானம் இதுதானா...”

“என்னத்தடா நல்லது பண்ணி இருக்க... மொத்தமா அந்த பொண்ணு வாழ்க்கையை கெடுத்து வச்சிருக்க....”

“அந்த நேரத்துல வேற என்ன பண்ணன்னு யோசிக்க முடியலைமா... நீதான் சொல்லேன் நான் என்ன பண்ணி இருக்க முடியும்ன்னு...”

“ஏன் அந்த பொண்ணை அங்க இருந்து கூட்டிட்டு வந்திருக்கலாம்... இல்லை அந்த சுந்தரை எதுனா பண்ணி இருக்கலாம்....”

“அம்மா சொல்றது ரொம்ப சுலபம்... கிடைச்ச நொடி நேரத்துல பண்றது எவ்ளோ கஷ்டம் தெரியுமா...”

“டேய் சும்மானாச்சும் ஏதானும் கதை சொலாதடா.... அது சரி உனக்கு எங்க இருந்து கரெட்டா அந்த நேரத்துக்கு தாலி கிடைச்சுது....”

“அது அந்த சுந்தர் கைல வச்சிருந்தான் இல்லை அதை பிடுங்கி கட்டிட்டேன்...”

“அடேய் அதுதான் தாலியை பிடிங்கிட்டியேடா... அப்பறம் அவன் எப்படி அதை கட்டுவான்... நீ உண்மையை எல்லாக்கிட்டையும் சொல்லிட்டு காயத்ரியை கூட்டிட்டு வந்திருக்க வேண்டியதுதானே...”

“அதுதான் அந்த சுந்தரோட ஆள் காயுவோட அம்மா கழுத்துல கன் வச்சிருந்தானே... நான் அவளை கூப்பிட்டு போகும்போது அவங்களை எதுனாச்சும் பண்ணிட்டா.... அப்படியே இன்னைக்கு இல்லைனாலும் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு காயத்ரியை கல்யாணம் பண்ணிட்டா... அவனை பத்தி நல்லா தெரிஞ்சும் நம்ம கண் முன்னாடியே ஒரு பொண்ணோட வாழ்க்கை அழிஞ்சு போறதை எப்படிம்மா பார்த்துட்டு இருக்க சொல்ற...”, சக்தி சொல்ல ‘காயுவா’ என்பது போல் பார்த்தாள் சந்தியா....  டீல்ல விடு டீல்ல விடு என்று கண்களாலேயே பேசினான் சக்தி...

“அது சரி.... இதுக்கு முன்னாடி அவன் மூணு பொண்ணுகளை கட்டினானே அப்போ உன்னோட இந்த சமூக சேவை மனப்பான்மை எங்க போய் தூங்கிட்டு இருந்தது....”

“அத்தை அவங்கள்லாம் சக்தி மாமாவை விட பெரியவங்க அத்தை “

“வாடி வா.... இவ்ளோ நேரம் கம்முன்னு இருந்துட்டு இப்போ குரல் கொடுக்கற... இவனோட இந்த மொள்ளமாரித்தனத்துக்கு நீயும் உடந்தையா....”

“ஐயோ அத்தை... எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது... ஆல் சக்தி மாமாஸ் ஆக்ஷன்தான்....”

“ஏண்டா இப்போ இந்தப் பொண்ணை காப்பாத்திட்ட... இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு அடுத்து இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போறான்னு வச்சுக்க... அப்போ என்ன பண்ணுவ... அவளுக்கும் போய் தாலி கட்டி கூட்டிட்டு வருவியா... இன்னும் சுந்தர் மாதிரி நிறைய மொள்ளமாரிங்க நாட்டுல சுத்திட்டு இருக்கு... அவங்களால கஷ்டப்படற பொண்ணுங்களுக்கு எல்லாம் என்ன நல்லது பண்ண போற....”, சக்தியின் தாய் கேள்வி மேல் கேள்வி கேட்க அதற்கு பதில் சொல்ல முடியாமல் திணறினான் சக்தி.....

“அம்மா கேக்கற கேள்விக்கு உன்னால பதில் சொல்ல முடியலை இல்லை சக்தி... இது சினிமா இல்லை சக்தி... நிஜ வாழ்க்கை... சினிமாலதான் இந்த மாதிரி தடாலடி வேலைலாம் பண்ண முடியும்.... நல்லா படிக்கற பொண்ணு.... இப்படி பண்ணிட்டியே... அவளுக்குன்னு எத்தனையோ கனவு இருந்து இருக்கும்... அது எல்லாம் இப்போ தலை கீழா மாறிப் போச்சே... இதுக்கு என்ன பதில் சொல்ல போற...”

“அப்பா எதுவும் மாறலைப்பா... அவ அவங்க அம்மா வீட்டுல எப்படி இருந்தாளோ அப்படியேதான் இங்கயும் இருக்க போறா... அங்க இருந்து காலேஜ் போகறதுக்கு பதிலா இங்க இருந்து போகப்போறா அவ்வளவுதானே...”

“எவ்ளோ ஈசியா சொல்ற சக்தி... உனக்குத்தான் ஒரு மாற்றமும் இல்லை... ஆனா அந்த பொண்ணுக்கு அப்படியே அவ வாழ்க்கை சில மணி நேரத்துல தலை கீழா மாறி இருக்குது....”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா வெயின் "மையலில் மனம் சாய்ந்த வேளை..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

சக்தியின் அன்னை செங்கமலம் காயத்ரியின் அன்னையை பார்த்து, “இன்னைக்கு உங்களுக்கு அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி... கண்டிப்பா இப்போ என்ன பண்றதுன்னு கூட யோசிக்கற நிலைல நீங்க இல்லைன்னு தெரியும்... இருந்தாலும் என்ன பண்ணலாம்ன்னு சொல்லுங்க...”, என்று கேட்க, அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்பதுபோல் அனைவரும் அவரையே பார்த்தனர்...

யோவ் இது என்னய்யா புது தலைவலி... அந்த மணி கேஸ் திருப்பி எடுக்க போறாங்களாமே...”

“ஆமாம் சார்.. நேத்திக்கு அந்த வக்கீல்  சாரங்கன் இங்க வந்து கேள்வி மேல கேள்வி கேட்டுட்டு போனாரு...”

“கிட்டத்தட்ட எட்டு மாசம் ஆகிடுச்சு... இப்போ என்னாத்துக்குய்யா இதை நோண்டுறானுங்க...”

“எனக்கும் சந்தேகமாத்தான் இருக்கு சார்... எதுனா விஷயம் தெரிஞ்சிருக்குமா....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.