(Reading time: 12 - 23 minutes)

“யோவ் நீ வேற ஏன்யா பீதியை கிளப்பற... அதெல்லாம் ஒண்ணும் இல்லை... மொதல்ல கோர்ட்ல இந்த கேஸ் எடுப்பாங்களான்னே தெரியலை... அதுவும் பக்காவா அந்த பையனோட பெத்தவங்க கையெழுத்து எல்லாத்துலையும் வாங்கி வச்சிருக்கோம்.. அதனால நம்ம சைடு எந்த தப்பும் இல்லை...”

“அப்படி நாம அசால்ட்டா இருக்க முடியாது சார்... சாரங்கனோட சீனியர் சந்திரன் சார் பத்தி தெரியும் இல்லை... உண்மை எங்க இருந்தாலும் தோண்டி எடுத்துருவாரு...”

“என்னய்யா பயம் காட்டற.... அப்படி எல்லாம் ஒரு மாவும் ஆட்ட முடியாது... டாகுமென்ட் எல்லாம் பக்காவா வச்சிருக்கேன்... நம்ம மேல ஒரு குறை சொல்ல முடியாது.... அந்த சாரங்கன் வேற எதுனாச்சும் சொன்னானா... அவன் கூட பாரவாயில்லைய்யா, அந்த பாரதி பொண்ணு வந்தாத்தான் ரொம்ப உஷாரா இருக்கணும்...”

“அந்த மணி பத்தியேதான் மாத்தி மாத்தி கேட்டுட்டு இருந்தாரு... அவன் என்ன மனநிலைல இருந்தான்... கேட்ட கேள்விக்கெல்லாம் எந்த மாதிரி பதில் கொடுத்தான் அப்படின்னு....”

“என்னைய்யா இவன்... கோர்ட்ல கேக்க வேண்டியதையெல்லாம் இங்க வந்து கேட்டுட்டு இருக்கான்.. நீயும் ரொம்ப நல்லவிதமா பதில் சொன்னியாக்கும்...”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“இல்லை சார்... மணி இறந்த அன்னிக்கு எனக்கு வெளிவேலை இருந்ததால நான் ஸ்டேஷன்ல இல்லை, அதனால எனக்கு அவன் இருந்த மனநிலை பத்தி தெரியலை... நீங்க இன்ஸ்பெக்டர் இருக்கும்போது வந்து விவரமா கேட்டுக்கோங்கன்னு சொல்லிட்டேன்....”

“போச்சு இன்னைக்கு வந்து என் கழுத்தை அறுக்க போறான்... சரி நான் ரௌண்ட்ஸ் போயிட்டு வந்துடறேன்... அதுக்குள்ள அவன் வந்தான்னா எனக்கு போன் பண்ணு... நான் பேசிக்கறேன்...”

“சார் அப்பறம் அந்த மெடிக்கல் காலேஜ்ல ஒரு பொண்ணு தற்கொலை பண்ணிக்கிச்சே அது விஷயமா பேச அந்த காலேஜ் சேர்மன் உங்களை வர சொல்லி போன் பண்ணினாரு சார்...”

“வருஷா வருஷம் இதே வேலையா போச்சு அவங்களுக்கு... அந்த காலேஜ்க்கு பசங்க படிக்க வர்றாங்களா இல்லை தற்கொலை பண்ணிக்க வர்றாங்களான்னே தெரியலை... நான் ரௌண்ட்ஸ் முடிச்சுட்டு அவரை வீட்டுல வந்து பார்க்கிறேன்னு சொல்லு....”

“சார் அப்பறம் விஷயம் தெரியுமா... நம்ம மந்திரி பையன் சக்தி இருக்காரு இல்லை... அவர் ஒரு பொண்ணை திடீர்ன்னு தாலி கட்டி கல்யாணம் பண்ணிக்கிட்டாராம்.... “

“என்னைய்யா சொல்ற.... இது எப்போ நடந்தது...”

“இன்னைக்கு சாயங்காலம்தான் சார்... அதுவும் நீங்க இப்போ போகப்போறீங்களே அவர் நடத்தின விழாலதான் இப்படி திடுதிப்புன்னு போய் கல்யாணம் பண்ணிட்டாராம்....”

“செம்ம ஹாட் நியூஸ் கொடுத்திருக்கேயா.... ரௌண்ட்ஸ் அப்பறம் போய்க்கறேன்... மொதல்ல போய் விழால என்ன நடந்ததுன்னு கேட்டுட்டு வரேன்...”, மக்களின் பாதுக்காப்பை விட கிசுகிசுவை அறிவதில் ஆர்வம் கொண்டு இன்ஸ்பெக்டர் தாளாளரின் இல்லம் நோக்கி சென்றார்...

ந்த துபாய் ஷேக் அடுத்த மாசம் பதினைந்தாம் தேதி சென்னைக்கு .வர்றதா மெயில் அனுப்பி இருக்காரு சார்...”

“இன்னும் இருபது நாள் தான் இருக்குது.... அவருக்கு டெஸ்ட் எல்லாம் எடுக்க ஒரு ரெண்டு நாள்.. அதுக்குள்ளே நாம கிட்னி டோனர் கண்டுபிடிக்கணும்... நீங்க அந்த ஏஜென்ட்க்கிட்ட பேசினீங்களா...”

“பேசிட்டேன் சார்... அவரும் எல்லா இடத்திலையும் சொல்லி வச்சிருக்கேன்... கிடைச்ச உடனே சொல்றேன்னு சொன்னாரு...”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "நீயிருந்தால் நானிருப்பேன்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“நமக்கு டைம் ரொம்ப கம்மியா இருக்கு... நீங்க வேற ஹாஸ்பிட்டலயும் ட்ரை பண்ணுங்க.... அதே மாதிரி அந்த ஒரு ஏஜென்ட் மட்டும் நம்பி இருக்காம வேற இடத்துலயும் பாருங்க...”

“சார் மத்த ஹாஸ்பிடல்க்கு ஏற்கனவே மெயில் அனுப்பிட்டேன்.. அதே மாதிரி அவன் மட்டும் இல்லாம வேற ஆள்கிட்டையும் பேசி இருக்கேன்....”

“ஹ்ம்ம் சரி... மூணு சீட் காலேஜ்ல காலியா இருக்கே... அதுக்கு சேர பசங்களுக்கு மெயில் அனுப்பியாச்சா....”

“அனுப்பியாச்சு சார்... கூடவே போன் மெசேஜும் அனுப்பி இருக்கோம்... அடுத்த புதன் கிழமை காலேஜ்க்கு வர சொல்லி அனுப்பி இருக்கு....”

“சரி நான் வீட்டுக்கு கிளம்பறேன்... அந்த கிட்னி மேட்டர் மட்டும் தொடர்ந்து சேஸ் பண்ணுங்க.... என்ன ஆனாலும் அடுத்த பத்து நாள்ல நமக்கு டோனர் கிடைக்கணும்...”, அவர் கிளம்ப, ஒரு ஒரு ஏஜென்ட்டாக போன் செய்ய ஆரம்பித்தான் அவரின் PA....  

தொடரும்

Episode # 12

Episode # 14

Go to Gayathri manthirathai story main page

{kunena_discuss:1216} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.