(Reading time: 11 - 21 minutes)

தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 14 - ஜெய்

Gayathri manthirathai

க்தியின் அன்னை காயத்ரியின் அன்னையிடம் அவர்களின் முடிவு என்ன என்று கேட்க, இருவருமே என்ன சொல்வது என்று தெரியாமல் கண்ணீர் மல்க அமர்ந்திருந்தார்கள்...

“உங்க நிலைமை எனக்கு புரியிது காயத்ரிம்மா... ஆனா இப்படியே அழுதுட்டு இருக்கறதால ஒரு பிரயோஜனமும் இல்லை... அடுத்து என்ன பண்ணனும்ன்னு முடிவு பண்ணனும்....”

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை... என் பொண்ணுக்கு பத்தொன்பது வயசுதான் ஆறது... அதுக்குள்ளே இந்த உலகமே பார்க்க ஒரு திடீர் கல்யாணம்... என்னால ஜீரணிக்கவே முடியலை...”

“இங்க பாருங்கம்மா... சும்மா ஒரு மஞ்ச கயத்தை எடுத்து கட்டிட்டா அது கல்யாணம் ஆகிடும்மா... இந்த சென்டிமென்ட் எல்லாம் விட்டுத் தள்ளுங்கம்மா.., நாம பெண்கள் இப்படி சென்டிமென்ட் பார்த்து பணிஞ்சு போறதாலதான் இந்த ஆம்பளைங்க ஆடுறாங்க... ஒரு கயித்தை கட்டிட்டா போதும், நம்ம பின்னாடியே மாதிரி வந்துருவான்னு நினைப்பு.... காயத்ரி உனக்கு விருப்பமில்லைன்னா அந்த மஞ்ச கயித்தை அவுத்து அந்தா தெரியுது பாரு... அத சுவாமி ரூம்ல வச்சுட்டு கிளம்பு....”

“எம்மா என்னம்மா இப்படி சொல்லிட்ட... அது என்ன வெறும் கயிராம்மா... தாலிம்மா.. அதுக்குன்னு ஒரு மரியாதை இருக்கு... காயும்மா அப்படி எல்லாம் பண்ண கூடாது.... அப்பறம் மாமாக்கு எதுனாச்சும் ஆகிடும்...”, சக்தி நடுவில் பேச, சந்தியா அவன் தொடையில் கிள்ளி வாயை மூட செய்தாள்....

“சக்தி எதையுமே முறையோட செய்தாதான் அதுக்கு மதிப்பு... கல்லு கோவில்ல இருந்தாத்தான் சாமி... அதே தெருவுல இருந்துச்சுன்னு வச்சுக்கோ வெறும் கல்லுதான்.....”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“இப்போ எதுக்கும்மா சம்மந்தமே இல்லாம டயலாக் சொல்ற....”

“சம்மந்தம் இருக்கு சக்தி... பெத்தவங்க. பெரியவங்க ஆசீர்வாதத்தோட, மணமக்களோட முழு சம்மதத்தோட நடந்தாதான் அது கல்யாணம்... அப்போதான் அந்தக் கயிறுக்கும் தாலிங்கற மதிப்பு வரும்... சும்மா போற போக்குல கட்டுற கயித்துக்கு என்ன மதிப்பு இருக்கு... சாதாரண மஞ்ச கலர் நூலுக்கும் அதுக்கும் வித்தியாசம் இல்லை... காயத்ரி இவன் சொல்றான்னு யோசிக்காத.... உனக்கு மனசுல என்ன தோணுதோ அதை சொல்லு....”, செங்கமலம் கேட்க பதில் சொல்லாமல் அழுத வண்ணமே இருந்தாள் காயத்ரி....

“மொதல்ல ரெண்டு பெரும் அழுகையை நிறுத்துங்க... அழுதுட்டே இருந்தா எதையும் ஒழுங்கா யோசிக்க முடியாது....”, உள்ளே சென்று அனைவருக்கும் ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தார் செங்கமலம்....

“இதை ஏத்துக்கறதா, வேண்டாமான்னே யோசிக்க முடியலைம்மா... உங்களுக்கும், எங்களுக்கும் ஏதானும் ஒரு விஷயத்துலயானும் ஒத்துவருமான்னு சொல்லுங்கோ... பணத்தால நீங்க எங்கயோ இருக்கேள்... அதை கூட விட்டுடலாம்.... உங்க ஆத்துக்காரர் மந்திரி... நீங்களும் அரசியல்ல பெரிய இடத்துல இருக்கேள்... உங்களை எல்லாம் தூரக்க இருந்து பார்த்தாலே பயத்துல நூறடி தள்ளித்தான் நாங்க நிற்போம்... ஏன்னா நானோ, என் பொண்ணோ வளர்ந்தது அப்படித்தான்... அரசியல்வாதிகள் பக்கத்துல வந்தாலே ஆபத்துன்னுதான் வளர்ந்திருக்கோம்....”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சாகம்பரியின் "யானும் நீயும் எவ்வழி அறிதும் " - காதல் கலந்த Sci-fi தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“ஏம்மா மந்திரின்னா என்னம்மா.... நாங்களும் மனுஷன்தான்... ஒண்ணு, ரெண்டு பேர் தப்பு பண்ணினா அதுக்குன்னு ஒட்டு மொத்தமா எல்லாரையும் குத்தம் சொல்றது நியாயமா சொல்லுங்க....”, சக்தியின் அப்பா பொங்கிவிட்டார்.... நியாயமான மனிதருக்கு வரும் கோபம்....

“மன்னிச்சுருங்கோ.... நீங்க கெட்டவர்ன்னு நான் சொல்ல வரலை... அரசியல்வாதி, போலீஸ் இவாளை பார்த்தா எங்களோட ரியாக்ஷன் இதுதான்... அது மட்டும் இல்லை.... சாஸ்த்ரங்கள் ஆரம்பிச்சு சாப்பாடு வரை எல்லாமே வேறதான்... இந்த காலத்துல ரெண்டு ஜாதி கலப்புல கல்யாணம் பண்ணிக்கறதில்லைய்யான்னு நீங்க கேக்கலாம்.... கண்டிப்பா நடக்கறது... ஆனா அதுல பொண்ணு, பிள்ளை தவிர ரெண்டு குடும்பங்களும் எத்தனை சதவீதம் ஒத்து போறதுன்னு சொல்லுங்கோ.... நான் அந்த காலத்து மனுஷி.... இன்னும் சாஸ்திரம், சம்ப்ரதாயம் எல்லாம் பார்த்துண்டு இருக்கேன்....”

காயத்ரியின் அன்னை பேச பேச இங்கே சக்திக்கு உள்ளூர உதற ஆரம்பித்தது... ஏற்கனவே தன் அன்னை காயத்ரி என்ன முடிவு எடுத்தாலும் அதை சிரமேற்கொண்டு செய்ய தயாராக இருக்க, இதில் அவரும் அதை போலவே பேச என்ன செய்து எப்படி அவளை தன்னுடன் வைத்து கொள்வது என்று யோசிக்க ஆரம்பித்தான்....

“நீங்க சொல்றது எனக்கு புரியுதும்மா.... ஒரே ஜாதி ஜனத்துல கட்டினா மட்டும் எல்லாம் ஒத்துபோதா சொல்லுங்க.... எல்லாமே மனுஷங்க நடத்தைலதான் இருக்குதும்மா... நீங்க இதுவரை சொன்ன எதுவுமே பெரிய பிரச்சனை இல்லைங்க.... முதல்ல உங்க ரெண்டு பேருக்கும் பிடிக்கணும்...”

“இதுல பிடித்தம் எங்க இருந்து வர்றதுன்னு நேக்கு புரியலை.... இப்போ சித்த நேரத்துக்கு முன்னாடி சொன்னேளே உரிய விதத்துல நடந்தாத்தான் எதுக்குமே மரியாதைன்னு... உரிய விதத்துல நடந்துதா.... கண்டிப்பா இல்லை... ஆனா உலகம் முழுக்க தெரியறா மாதிரி நடந்தாச்சு... இதை ஏத்துக்கவும் முடியலை... விடவும் முடியலை... இன்னைக்கு இந்த கல்யாணம் வேண்டாம்ன்னு எம்பொண்ணு தாலியை கழட்டி வச்சுட்டு போய்ட்டா எதிர்காலத்துல அவளோட நிலைமை... யார் அவளை கல்யாணம் பண்ணிப்பா...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.