(Reading time: 11 - 21 minutes)

டேய் சதீஷ் எப்படா ஊருல இருந்து வந்த... அம்மா, அப்பாலாம் எப்படி இருக்காங்க...”

“நேத்துதான் வந்தேன் சுந்தர்... எல்லாரும் நல்லா இருக்காங்க....”

“ஏண்டா இப்போ உடம்பு எப்படிடா இருக்கு... உனக்கு வலின்ன உடனேயே வந்து பார்க்க நினைச்சேன்... ஆனா அம்மா, அப்பாக்கூட அப்போ ஊருக்கு போய் இருந்ததால வர முடியலை....”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“பரவா இல்லைடா... இப்போ ஒண்ணும் இல்லை... நான் சாப்பிட்டது ஏதோ ஒத்துக்கலைன்னு டாக்டர் சொன்னாரு....”

“அப்பாடி.. நான் கூட பண்ணிய ஆபரேஷன்லதான் ஏதானும் ப்ரோப்லம் ஆகிடுச்சோன்னு நினைச்சேன்....

“ச்சே ச்சே அப்படிலாம் இல்லைடா... ஆனா இனிமே காரம், மசாலா எல்லாம் கொஞ்ச நாள் கம்மியாவே சாப்பிட சொல்லி இருக்காரு டாக்டர்... அம்மாக்கு என் சாப்பாடை நினைச்சே பெரும் கவலை... அவங்களை சமாதானப்படுத்திட்டு வர்றதுதான் கஷ்டமா போச்சு....”

“அவங்க கவலை அவங்களுக்கு... ஆனா டாக்டர் சொன்னா மாதிரியே கவனமா இருடா...”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அருகில் ஒரு மாணவன் வந்தான்...

“இங்க சதீஷ்....”

“நான்தான் சதீஷ்... என்ன வேணும்...”

“என்னோட பேரு பூபால்... இரண்டாவது வருஷம் MBBS படிக்கறேன்.... உங்களுக்கு இங்க ஹாஸ்பிடல்ல சர்ஜெரி ஆச்சுன்னு சொன்னாங்க... அதுக்கு பணம் எதுவும் வாங்கலைன்னு பசங்க சொன்னாங்க... எங்கப்பாக்கு கொஞ்ச நாளா வயிறு வலிக்குதுன்னு சொல்லிட்டு இருக்காரு... எங்க குடும்பமும் ரொம்ப கஷ்டப்படற குடும்பம்... இங்க படிக்கிற பசங்களுக்கு மட்டும்தான் இலவசமா... இல்லை பெற்றவங்களுக்குமா...”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா வெயின் "மையலில் மனம் சாய்ந்த வேளை..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“எனக்கு இந்த விவரமெல்லாம் தெரியலையேங்க... நீங்க நேரடியா அங்கேயே போய் கேட்டுடுங்களேன்... இல்லை அங்க யாரையும் தெரியலை.... ரெண்டு வாட்டி நான் போய் கேட்ட உடனேயும், அவங்க பதில் சரியா சொல்லலை... அதுதான் உங்களுக்கு அங்க யாரையாச்சும் தெரிஞ்சா அவங்க வழியா கேட்டுப்பார்க்கலாமேன்னு நினைச்சேன்....”

“எங்களுக்கு பெர்ஸனலா யாரையும் தெரியாதே... வேணும்ன்னா ஒண்ணு பண்ணலாம்... எனக்கு வைத்தியம் பார்த்த டாக்டர் போய் பார்க்கலாம்... அவர்கிட்ட உங்கப்பாவோட டீடைல்ஸ் காட்டி என்ன பண்ணலாம்ன்னு கேக்கலாம்...”

“ரொம்ப தேங்க்ஸ்ங்க... பாவம் வலில ரொம்ப அவஸ்தை படறாரு... நாளைக்கே அவரை பார்த்துடலாம்...”

“உடனே பார்க்க முடியுமா தெரியலை... நாம போய் அந்த டாக்டர் பார்க்க ஒரு அப்பாய்ட்மென்ட் வாங்கலாம்...”

மூவரும் சென்று வைத்தியரை பார்க்க இரண்டு நாட்கள் கழித்து நேரம் வாங்கினர்.....  

தொடரும்

Episode # 13

Episode # 15

Go to Gayathri manthirathai story main page

{kunena_discuss:1216} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.