(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 15 - ஜெய்

Gayathri manthirathai

வாங்க சதீஷ்.... ஹெல்த் இப்போ எப்படி இருக்கு....”

“நல்லா இருக்கேன் டாக்டர்... காரம் சாப்பிட்டா மட்டும் வலி வருது.... மத்தபடி ஓகே...”

“அது மருந்து நிறைய சாப்பிட்டீங்க இல்லை... அதுனால இருக்கலாம்... கொஞ்ச நாள் உணவுல கவனமா இருங்க.... உங்க உடல்நிலை ஓகேன்னா வேற என்ன விஷயமா என்னை பார்க்க வந்தீங்க...”

“அது டாக்டர்.... இவன் பேரு பூபால்.... இங்கதான் இரண்டாவது வருஷம் படிக்கறான்... இவங்கப்பாக்கு கொஞ்ச நாளா வயித்து வலியா இருக்குது... அது பத்தி உங்கக்கிட்ட கேக்கணும்ன்னு சொன்னான்... அதுதான் கூட்டிட்டு வந்தோம்....”

“சொல்லுங்க தம்பி... எத்தனை நாளா இருக்குது... வேற டாக்டர்கிட்ட காமிச்சீங்களா....”

“ஒரு ஆறு மாசமா கடுமையான வலியா இருக்குது டாக்டர்... நாங்க பக்கத்துல இருக்குற அரசாங்க ஆஸ்பத்திரிலதான் டாக்டர் பார்த்தோம்... அவர் அல்சர் அப்படின்னு சொல்லிட்டு மருந்து கொடுத்தார்... ஆனா அதை சாப்பிட்டும் சரியா போகலை... எப்படியும் மாசத்துக்கு ஒரு வாட்டி அந்த வலி வந்துடுது.... வேலைக்கு கூட போக முடியலை... ரொம்ப அவஸ்தை படுறாரு....”

“ஹ்ம்ம் அங்க டெஸ்ட் எதுனாச்சும் எடுத்தாங்களா...”

“இல்லை டாக்டர்... எப்போ வயித்து வலின்னு போனாலும் ஒரு ஊசி போட்டு மருந்து கொடுத்து அனுப்பிடறாங்க... ரெண்டு தனியார் ஆஸ்பத்திரில காமிச்சோம்.... அவங்க சும்மா consultation மட்டும் பண்ணினதுக்கே ஆயிரம் ரூபாய் வாங்கிட்டாங்க... அதும் தவிர ஏகப்பட்ட டெஸ்ட் எழுதி கொடுத்தாங்க... டெஸ்ட்டும் அவங்க சொல்ற இடத்துலதான் எடுக்கணும் அப்படின்னு சொல்லிட்டாங்க... டெஸ்ட் எடுக்கற செலவை பார்த்த எங்கப்பா கண்டிப்பா வர மாட்டேன்னு சொல்லிட்டாரு....”

“இதுவும் பிரைவேட் ஆஸ்பத்திரிதான் தம்பி... இங்கயும் செலவு ஆகத்தான் செய்யும்...”

“அது நான் இங்க படிக்கறதால எதுவும் சலுகை கிடைக்காதா டாக்டர்...”

“இங்க படிக்கற பசங்களுக்குத்தான் தம்பி இலவச மருத்துவம்.... மத்தவங்களுக்கு கிடையாது....”

“இப்போ என்ன டாக்டர் பண்ண...”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ஒண்ணு பண்ணலாம்... நான் எழுதி தர  blood test, urine test மட்டும் மொதல்ல எடுத்துட்டு வந்து என்னை பாருங்க... பணம் கம்மியா வாங்கிட்டு டெஸ்ட் பண்ற நிறைய சின்ன சின்ன பரிசோதனை நிலையங்கள் இருக்கு... அங்க டெஸ்ட்க்கு கொடுங்க.... ரிசல்ட் பார்த்துட்டு அப்பறம் என்ன பண்ணன்னு அடுத்து யோசிக்கலாம்....”

“ரொம்ப நன்றி டாக்டர்...”

மூவரும்  மருத்துவரிடம் விடை பெற்று வெளியில் வந்தனர்...

“உங்களாலதான் டாக்டர் உடனே பார்க்க முடிஞ்சுது....”, சுந்தரிடமும், சதீஷிடமும் நன்றி உரைத்தான் பூபால்...

“நாங்க என்ன பண்ணினோம்.... ஏற்கனவே இவன் பார்த்ததால அவன் பேரை சொல்லி ஒரு appointment வாங்கினோம்.... அதை போய் பெருசா பேசறீங்க....”

“அதுவே பெரிய உதவி சுந்தர்.... இந்த டாக்டர் பார்க்க மாதக்கணக்கில் காத்திருக்கறவங்க இருக்காங்க... சதீஷ்னால்தான் உடனே பார்க்க அனுமதி கிடைச்சுது....”

“பூபால் நீங்க டாக்டர் சொன்ன டெஸ்ட் உடனடியா எடுத்துடுங்க.... உங்க வீட்டுகிட்டவே பரிசோதனை நிலையம் எதுனாச்சும் இருக்கா...”

“இருக்கு சதீஷ்... இன்னைக்கு மாலைல அங்க போய் கேட்டுட்டு அப்பாவை கூட்டிட்டு போறேன்...”

“சரி பூபால்... உனக்கு என்ன ஹெல்ப் எப்போ தேவைப்பட்டாலும் எங்ககிட்ட கேக்க தயங்காத....”, பூபாலிடம் விடைபெற்று அவரவர் வகுப்புக்கு சென்றனர்....

வாய்யா இன்ஸ்பெக்டர்.... அந்த பொண்ணு விஷயம் என்னாச்சு....”

“அது ஒண்ணும் பிரச்சனை இல்லைங்கய்யா... அதோட பெத்தவங்க வந்து உடம்பை வாங்கிட்டு போய்ட்டாங்க...”

“எதுனாச்சும் தகராறு பண்ணினாங்களா....”

“அப்படிலாம் ஒண்ணும் பண்ணலையா... படிக்க முடியலைன்னு இப்படி பண்ணிடுச்சே அப்படின்னுதான் சொல்லி சொல்லி அழுதாங்க....”

“ஹ்ம்ம் ஒரு தலைவலி விட்டுச்சு....”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சாகம்பரியின் "யானும் நீயும் எவ்வழி அறிதும் " - காதல் கலந்த Sci-fi தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“ஆனா ஐயா... வருஷா வருஷம் இப்படி எதுனாச்சும் ஒண்ணு உங்க காலேஜ்ல நடக்குது.... கொஞ்சம் கவனமா இருங்க... மதிசார் ஏற்கனவே இந்த கேஸ்ல தோண்டி தோண்டி கேட்டுட்டு இருந்தாரு...”

“ஏன்யா அந்த பொண்ணு தற்கொலை பண்ணிட்டதுக்கு நான் என்னய்யா பண்ண முடியும்... எனக்கே ஆயிரெத்தெட்டு தலைவலி... இதுல அப்போ அப்போ இந்த பசங்க வேற எதுனாச்சும் பண்ணிடறாங்க....”

“சரிய்யா உங்ககிட்ட விஷயம் சொல்லணுமேன்னு சொன்னேன்... அப்பறம் நீங்க நடத்தின  விழால ஏதோ கலாட்டா நடந்துச்சாமே... நம்ம ஏட்டு சொன்னாரு...”

“ஏன் ஏட்டு அது மட்டும்தான் சொன்னாரா... என்ன கலவரம்ன்னு சொல்லலையா.....”

“அது அந்த சக்தி பய வந்து ஏதோ கலாட்டா பண்ணினதா சொன்னாரு.....”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.