(Reading time: 10 - 19 minutes)

“நம்ம காலேஜ் பொண்ணு கழுத்துல தாலி கட்டி கூட்டிட்டு போய்ட்டான்ய்யா.... அவன் மேல கேஸ் போடலாமான்னு பார்க்கிறேன்....”

“அந்த பெண்ணோ, இல்லை பெண்ணை சேர்ந்தவங்களோ கொடுத்தாத்தான் கேஸ் எடுக்க முடியும்.... மத்தவங்க கொடுக்க முடியாது ஐயா....”

“விழா நடக்கும்போது அதை நடக்க விடாம தொந்தரவு பண்ணினான்னு போட முடியாதா....”

“அது முடியும்... நீங்க ஒரு கம்ப்ளைன்ட் கொடுங்க... நான் விசாரிக்கிறேன்....”

“மொதல்ல அவனை எப்படியாவது தூக்கி உள்ள ஒரு ரெண்டு நாளாச்சும் வைக்கணும்... விழா முடிஞ்சு வந்ததுல இருந்து எம்பையன் முகமே சரியில்லை...”

“ஏங்க விழால யாராச்சும் எதுனாச்சும் சொல்லிட்டாங்களா....”

“அட அது இல்லையா... சக்தி தாலி கட்டிப் கூட்டிட்டு போனானே அந்த பெண்ணை நம்ம சுந்தர் விரும்பி இருப்பான் போல...”, தாளாளர் சொல்ல இன்னும் எத்தனை பெண்ணைத்தான் அந்த சுந்தர் விரும்புவான் என்று பார்த்தார் இன்ஸ்பெக்டர்...

“என்னய்யா சொல்றீங்க....”

“எனக்கும் உறுதியா தெரியலை... அந்த பெண்ணை சுந்தர் பார்த்ததை வச்சு நானே யூகம் பண்ணினேன்... அந்த விழாக்கு பிறகு சுந்தர் முகத்துல சுரத்தே இல்லை... யார் கூடவும் பேசாம மொறைப்பா சுத்திட்டு இருக்கான்....”

“சரிங்கய்யா நீங்க சக்தி மேல ஒரு கம்ப்ளைன்ட் எழுதி கொடுங்க... மேல என்ன பண்றதுன்னு பார்க்கிறேன்....”

க்தி மாமோய் என்ன திடீர்ன்னு இப்படி லவ்ஸு சொல்லிப்புட்டீங்க....”, செங்கமலம் காயத்ரியையும், அவள் அன்னையையும் மாடிக்கு அழைத்து செல்ல, சந்தியா சக்தியிடம் வினவினாள்... சக்தியின் தந்தை அவனை முறைத்தபடி இருந்தார்....

“நீ மொதல்ல எழுந்து என்னோட ரூமுக்கு வா... ஹால்ல உக்கார்ந்து கத்தாத.... என் மாமியாருக்கு முன்னாடி இமேஜ் டேமேஜ் ஆகிடும்... அதுவும் தவிர சிங்கம் வேற சீறிக்கிட்டு இருக்கு... அதை மேலும் கிளப்பிவிடக் கூடாது....”

இருவரும் எழுந்து சக்தியின் அறைக்கு செல்ல, சக்தியின் தந்தை தலையில் அடித்தபடியே வெளியில் சென்றார்....

“சொல்லு மாமு சொல்லு... காயத்ரி பின்னாடி ஜொள்ளு ஊத்திட்டு போன உன் வீணாப்போன கதையை ஜொள்ளு....”

“அடியேய் வேணாம்... என்னோட காவிய காதலை கண்டபடி பேசாத....”

“நீ மொதல்ல உன் கதையை சொல்லு மாமு... அதை கேட்ட பிறகு அது காவிய காதலா, இல்லை கன்றாவி காதலான்னு நாங்க ஒரு முடிவுக்கு வரோம்.....”

“போடி நீ இப்படி பேசறுதுன்னா நான் சொல்லவே மாட்டேன்...”

“கோச்சுக்காத மாமோய்... ஆமாம் நீ அவளை என்கூட ஒரு ரெண்டு, மூணு வாட்டி பார்த்திருப்பியா... அதுக்குள்ள இந்த தெய்வீக காதல் எப்படி form ஆச்சு....”

“யாரு மூணு வாட்டிதான் பார்த்திருக்கேன்னு சொன்னது.. தினம் உங்க காலேஜ் வாசல்ல கருப்பு கலர் ஹோண்டா கார் நிக்குமே பார்த்திருக்கியா...”

“காலேஜ் விடற டைம்ல ஏகப்பட்ட கார் நிக்கும்.... இதுல எங்க இருந்து அந்த காரை கவனிக்க...”

“மிஸ் பண்ணிட்ட... அந்த கார்ல உக்கார்ந்து டெய்லி சாயங்காலம் என்னோட காயுவை சைட் அடிச்சுட்டு அவ வீட்டுக்கு போகற வரை அந்த பஸ் பின்னாடியே போயிட்டு  அவ வீட்டுல ட்ராப் பண்ணிட்டு வர்றதுதான் என்னோட அதி முக்கியமான வேலையே...”

“ரொம்ப பெரிய நாட்டுக்கு உபயோகமான வேலைதான் பார்த்திருக்க....”

“வீட்டுக்கு முக்கியமான வேலைம்மா... இந்த சக்தியின் சேவை முதலில் வீட்டுக்கு பிறகே நாட்டுக்கு...”

“தாங்கலை... சரி உன்னோட இந்த தெய்வீக காதலை எப்போ காயத்ரிகிட்ட சொல்லப்போற....”

“அதுதான் எப்படின்னு தெரியலை சந்தியா... வீட்ட்க்குள்ள ஒரு பூலான்தேவி அரிவாளோட உட்கார்ந்துட்டு இருக்கு... அதை மீறி எப்படி நான் என்னோட செல்லாக்குட்டியோட பேசறது... பேசவே முடியாதுங்கறபோது எப்படி லவ்வை சொல்லுறது....”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா வெயின் "மையலில் மனம் சாய்ந்த வேளை..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“அதுதான் டைரக்ட்டா தாலி கட்டி ஹஸ்பண்ட்டா form ஆகிட்டியே... அப்பறம் என்ன இந்த கதைல எல்லாம் மஞ்சள் கயிறு மேஜிக் சொல்றாங்களே... அந்த மாதிரி எதுனாச்சும் வொர்க்அவுட் ஆகி காயத்ரி உன்னோட சேர்ந்துடுவா... கவலைப்படாத....”

“அதெல்லாம் வீட்டுக்குள்ள இந்த சூனியக்கார லேடி இருக்கற வரை எந்த மேஜிக்கும் நடக்காது சந்தியா....”

“யோவ் மாமா... என்ன எங்கத்தையை இஷ்டத்துக்கு பட்ட பேர் வச்சு சொல்ற... அவங்க அரிவாளை உள்ளார வச்சுட்டாங்கங்கற தைரியம்...”

“பின்ன என்ன சந்தியா... பையன் கல்யாணம் பண்ணிக்கிட்டானே... நல்ல விதமா பேசி  சின்னஞ்சிறுசுகளை சேர்த்து வைப்போம்ன்னு இல்லாம இப்படியா பிரிச்சு வைக்கிறது....”

“மாமு உன்னோட காயு நிஜமாவே சின்னப்பொண்ணுதான்... அதனால மூடிட்டு மூலைல உக்காரு.... ரொம்ப பண்ணின எங்க வீட்டுக்கு அவளை கூட்டிட்டு போய்டுவேன் பார்த்துக்கோ....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.