(Reading time: 10 - 19 minutes)

“அம்மா தாயே சூலி நீலி காளி அந்த மாதிரி எந்த வேலையும் பண்ணிடாத... அட்லீஸ்ட் அவக்கூட பேச முடியாட்டியும் பார்த்துட்டாவது இருக்கேன்.... உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய் அதுக்கும் ஆப்பு வச்சுடாத....”

“ஹேய் சக்தி உன்னோட போன் அடிக்குது பாரு....”

“சாரங்கன் சார்தான் கூப்பிடறாரு... என்னன்னு தெரியலையே....”

“சொல்லுங்க சார்...”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“சக்தி அந்த மணி விஷயமா ஸ்டேஷன் போய் விசாரிச்சேன்... அவங்க சொன்னதேதான் சொல்லுறாங்க.... புதுசா ஒரு விஷயமும் கிடைக்கலை... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் ரொம்ப தெளிவா அவன் ஷாக் அடிச்சுதான் செத்தான்னு இருக்கு... இதை வச்சுட்டு மேல மூவ் பண்றது கஷ்டம்ப்பா...”

“சார் அவங்க அம்மா அப்பா அப்பறம் மணியோட நண்பன் இவங்க பேசும்போது பொய் சொல்லுறா மாதிரி தெரியலை சார்...”

“அவங்க சாட்சி நிக்காதுப்பா... அவனோட நண்பனும் மணி கோவிலுக்கு போனதை பார்க்கலை... மணி அப்பா சொன்னதை வச்சுதான் சொல்லுறான்....”

“எனக்கு இன்னும் அந்த தற்கொலை நம்ப முடியலை சாரங்கன் சார்... அவங்க அம்மாப்பா பார்த்துட்டு போகற வரை நல்லாத்தான் பேசிட்டு தைரியமா இருந்து இருக்கான்... திடீர்ன்னு எப்படி தற்கொலை பண்ணிப்பான்...”

“தற்கொலை பண்ணிக்க நொடி நேரம் போதும் சக்தி.... பாரதி இன்னொரு கோணம் சொன்னா... இந்த கேசை மணி சைடுலேர்ந்து பார்க்காம இறந்து போன பொண்ணு சைடுலேர்ந்து ஆரம்பிச்சா ஒரு வேளை ஏதாவது துப்பு கிடைக்கலாம்ன்னு சொன்னா... உங்களுக்கு அந்த பொண்ணு டீடைல்ஸ் தெரியுமா....”

“அந்த பொண்ணு படிச்சுட்டு இருந்த பொண்ணு சாரங்கன் சார்... அவளோட தோழிதான் மணி பத்தி சொன்னது..”

“சரி நான் சாந்தியோட தோழிக்கிட்ட பேசிட்டு மறுபடி உங்களை காண்டாக்ட் பண்ணுறேன்....”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "நீயிருந்தால் நானிருப்பேன்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“சரி சாரங்கன் சார்... நானுமே எனக்குத் தெரிஞ்ச சோர்ஸ் வழியா விஷயம் தேத்தமுடியுதான்னு பார்க்கிறேன்....”,  சாரங்கன் வைக்க மறுபடி சக்தியின் போன் அடித்தது...

“சொல்லு மச்சி... என்ன விஷயம்....”

“சக்தி எங்க இருக்க... உன் பக்கத்துல யாராச்சும் இருக்காங்களா....”

“உன்னோட ஸ்டுடென்ட்தான் பக்கத்துல உக்கார்ந்து ரம்பம் போட்டுட்டு இருக்கா... வேற யாரும் இல்லை.... என்ன விஷயம் சொல்லு...”

“சக்தி காலேஜ்ல பொண்ணு இறந்தது தற்கொலை இல்லை... அது ஒரு கொலை....”, சந்தோஷ் சொல்ல, “என்ன மச்சி சொல்லுற...”, என்று அதிர்ந்துபோய்  கேட்டான் சக்தி...  

தொடரும்

Episode # 14

Episode # 16

Go to Gayathri manthirathai story main page

{kunena_discuss:1216} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.