Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 05 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 05 - சாகம்பரி குமார்

Yaanum neeyum evvazhi arithum

மின்காந்த அலைகள் பற்றி அவளுக்கு கொஞ்சம் தெரியும். அவை தொலை தொடர்பு சாதனங்கள் முதல் வீட்டில் பயன்படுத்தும் ரிமோட் கண்ட்ரோல் வரை பயன்படுத்தப்படுகின்றன. ரேடியோ சிக்னல் எனப்படும் அலைகள்கூட மின்காந்த அலைகள்தான். ஆனால் இந்த சிம்ஹன் அது அவன் உடலில் இருக்கிறது என்கிறானே?

மின்காந்த அலைகளை எலெக்ட்ரானிக் கருவிகள் மூலம்தான் உருவாக்க முடியும் கட்டுபடுத்த முடியும். ஆனால் இவன் அதையும் செய்வேன் என்று சொல்கிறானே? அது எப்படி?

ஹனிகாவிற்கு இப்போது விளக்கம் தரக்கூடிய ஒரே ஆதாரம் தாத்தாவின் குறிப்பேடுகள்தான். வீட்டிற்கு சென்றதும் அதனை எடுத்து படிக்க ஆரம்பித்தாள். ஒன்றும் கிடைக்கவில்லை. ஒரு சந்தேகத்தின் பேரில் ‘பூமிகிரகவாசிகள்’ என்றிருந்த குறிப்பேடினை பிரித்து படிக்க ஆரம்பித்தாள். ஆஹாங்… இங்கே சிக்கிடுச்சே!

பூமிகிரகவாசிகள் எனப்படும் மனிதர்கள் அறிவியலில் சிறப்பான அறிவை பெற்றிருந்தார்கள். ஓகே… அதுதான் தெரியுதே… ம்…

 அவர்கள் மனோசக்தியை இயற்பியல் சக்தியாக மாற்ற தெரிந்தவர்கள்… வாட்..? மனோசக்தின்னா மனம் தொடர்புடையதுதானே… அது எப்படி?

எண்ணங்களை அலைகளாக மாற்றி அனுப்ப தெரியும். அதனால் என்னவாகும்? அவர்களால் ஒருவர் நினைப்பதை தெரிந்து கொள்ளவும்… அவர்கள் தன் விருப்பப்படி செயல்பட வைக்கவும்… சில சமயம் இயற்பியல் சக்தியாக பிரயோகிக்கவும் முடியும்.

இது என்ன தாத்தா இப்படி குழப்பமாக எழுதியிருக்கிறார்? சிம்ஹன் மாலாசக்தி என்று சொன்னானே இதைத்தானா? மனோசக்தியை மின்காந்த அலைகளாக மாற்றி செயல்படுத்துகிறானோ?

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

மருத்துவமனையில் அவளுக்கு தோன்றியது சிம்ஹனின் எண்ணங்கள்தானோ…? இப்போது அவளுக்கு ஸ்பேஸ்கார்ட் வேலை கிடைக்கும் என்று சொன்னதும் அவளுடைய்ய மனதை  படித்துதானோ?

அதுசரி அவனுடைய மனோசக்தி மின்வரோ அரசின் புரோட்டோகாலை மாற்றுமா என்ன?

புரோட்டோகால்படி அவள் ஸ்பேஸ்கார்டாக இன்னும் பல நாட்கள் உள்ளன… பல பரிட்சைகளை கடக்க வேண்டும். அவை எல்லாம் இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து ஸ்பேஸ் ஆர்மியின்  நேரடி பார்வையில் நடைபெறும். அப்போதுதான் அவள் தன் தகுதிகளை நிருபித்து ஸ்பேஸ் கார்டாக முடியும்.

முதலில் யார் இந்த சிம்ஹன்? எதற்காக அவள் பின்னே சுற்றுகிறான்.? அவன்பாட்டுக்கு அள்ளி விடறான்? இதுல… இந்த பார்வைக்காகத்தான் சொன்னேன் என்று பெருமையடித்துக் கொள்கிறான். இதுல வாவ் வேற சொல்கிறான்…

மின்வரோவை பொறுத்தவரை தனிமனித வாழ்வும் அரசு வடிவமைத்து தந்ததுதான். சிறுபிள்ளைகள்… வயதான பெரியவர்களுக்கு மட்டும் அங்கு ரேசன் முறையில் உணவுப் பொருட்கள், ஆடைகள் வழங்கப்படும். மற்ற அனைவருக்கும் அவரவர் தகுதிக்கேற்ப வேலை வழங்கப்படும். கல்வியை பொறுத்தவரை அனைவருக்கும் அடிப்படை கல்வி இலவசமாக வழங்கப்பட்டு விடும். மற்ற திறமைகள் அவரவர் அறிவு மற்றும் உடல்தலுதிக்கு ஏற்ப கற்றுக் கொள்ள   வேண்டும். அதன் மூலம் வேலை பெற்று சம்பாதித்துக் கொள்ள வேண்டும்.

அப்புறம் திருமணம் செய்து கொள்வது… குழந்தை பெற்றுக் கொள்வது அனைத்துமே இண்டர்வ்யூ நடத்திதான் அனுமதி வழங்கப்படும். அரசின் கட்டுப்பாடில் மக்கள் இருக்கத் தேவையான திட்டங்கள்தான் இவை! அரசை எதிர்த்து புரட்சி… வேலை இல்லா திண்டாட்டம்… மக்கள் தொகை பெருக்கம்… வறுமை கோடு போன்றவை கிடையாது!  ரொம்பவும் சிக்கலில்லாத வாழ்க்கை! ஏலியன்களை சமாளிப்பது மட்டுமே கவனப்படுத்தப்பட வேண்டிய விசயம் ஆகும்!

அதனால்தான் மற்ற துறைகளைவிட ஸ்பேஸ் ஆர்மிக்கு வரையறைகள் அதிகம் உண்டு. சிறப்பான திறமை உள்ளவர்கள் மட்டுமே அதில் நுழைய முடியும். ஹனிகா ஸ்பேஸ் கார்டாக மாறத் தேவையான கடினமான பயிற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறாள். அரசு நடத்தும் பரிட்சையில் அவள் வெற்றி பெற வேண்டும்.

இந்த சிம்ஹன் சொன்னதுபோல இது இரண்டே நாட்களில் முடிவாகாது!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா வெயின் "மையலில் மனம் சாய்ந்த வேளை..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

தாத்த சொல்லியிருக்கும் மனஅலைகளைதான் இயற்பியல் சக்தியாக மின்காந்த அலைகளாக மாற்றுவது மனிதர்களின் அறிவியலா?

அடுத்த இரண்டாவது நாள்… மின்வரோவின் தலைமை இடத்தின் அருகே உள்ள ஷட்டில்  நிறுத்தம்!. ஹைந்தாவுடன் ஹனிகா சென்றிருந்தாள். அதன் அருகேதான் குழந்தைகளின் திறமைகளை ஆராய்ந்து அவளுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஸ்கிள்ஸ் குளோனிங் சென்டர் உள்ளது. அது தரும் ரிப்போர்ட்டை வைத்துதான் எதிர்காலத்தில் ஹைந்தா எந்த துறைக்கு பொருத்தமாக இருப்பாள் என்று தீர்மானிக்க முடியும்.

ஹைந்தாவை அழைத்துக் கொண்டு ஹனிகா அந்த வெள்ளை நிற ஷட்டிலை விட்டிறங்கினாள்.

திடீரென்று  அங்கு பதட்டம் நிலவியது. அங்கிருந்த சூழலை புரிந்து கொள்ள முற்பட்டாள்.

ஆகாயத்தில் இருந்து பறந்து வந்த சில உருவங்கள் அங்கிருந்தோரை ஃப்ரீஸ் செய்தனர். கால்கள் நடக்க முடியாமல் கடினமாகின. அவர்கள் முன் நின்ற அந்த உருவங்கள்…?

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 05 - சாகம்பரி குமார்Sagampari 2019-04-05 21:07
Dear srivi..
I am blushing. facepalm - Jules Verne? (Sirikkaranga!).
But thank you very much for your encouraging words.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 05 - சாகம்பரி குமார்saaru 2019-04-04 06:24
Interesting update ji
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 05 - சாகம்பரி குமார்Sagampari 2019-04-05 21:09
Dear Saaru
Thank you very much
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 05 - சாகம்பரி குமார்Sahithyaraj 2019-04-03 00:15
I'm out of this world :dance:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 05 - சாகம்பரி குமார்Sagampari 2019-04-05 21:08
Dear Sahithyaraj
Thank you very much
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 05 - சாகம்பரி குமார்Srivi 2019-04-02 22:04
Absolute love with your story and narrating style.. Awesome..tamilayum kalakkals aprom science fiction um ..next Jules Verne neenga than ponga..worm hole, black hole, white hole way to go sis
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 05 - சாகம்பரி குமார்madhumathi9 2019-04-02 19:55
wow warmhole mudiyumun,whitehole ah very interesting. (y) nice epi. :clap: waiting to read more. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 05 - சாகம்பரி குமார்Sagampari 2019-04-05 20:56
Thank you Madhumathi..
White is opposite to black hole..
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top