(Reading time: 11 - 21 minutes)

தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 16 - ஜெய்

Gayathri manthirathai

வாங்க தம்பி...  யாருக்கு உடம்பு சரியில்லை...”

“டாக்டர் நாலு நாள் முன்னாடி சதீஷ் கூட சேர்ந்து உங்களை பார்க்க வந்தேனே... இவர்தான் எங்கப்பா... இவருக்குதான் வயித்து வலி....”

“ஓ ஆமாம்... இப்போ ஞாபகம் வருது.... நான் சொன்ன டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டீங்களா....”

“எடுத்துட்டோம் டாக்டர்...”, பூபால் பரிசோதனை அறிக்கையை டாக்டரிடம் அளித்தான்....

“ஹ்ம்ம்  இதுல பார்க்கிற வரை உங்கப்பாக்கு அல்சர் அதிக அளவுல இருக்கு... blood test report அதுதான் காட்டுது....”

“ஆமாம் டாக்டர்... எனக்குமே அதுதான் தோணிச்சு.... இருந்தாலும் அல்சருக்கு மருந்து எடுக்கறாரு... அதுவும் தவிர சாப்பாடும் ரொம்ப சரியா, காரம் மசாலா அதிகம் சேர்க்காமதான் சாப்பிடறாரு... அப்பறமும் ஏன் இன்னும் குறையாம இருக்குது....”

“எனக்கும் அதுதான் யோசனையா இருக்கு... அடுத்து நாம ஸ்கேன் எடுத்து பார்த்தாத்தான் வேற என்னல்லாம் பிரச்சனை இருக்குன்னு கண்டுபிடிக்க முடியும்...”

“எங்க வீட்டுக்கிட்ட இருக்கற லேப்ல ஸ்கேன் வசதில்லாம் இல்லை டாக்டர்.... அதுக்கு வேற இடத்துக்குத்தான் போகணும்.... ஸ்கேன்க்கு ரொம்ப செலவு ஆகுமா....”

“தோராயமா அஞ்சுலேர்ந்து ஆறாயிரம் ரூபாய் வரை ஆகும் தம்பி.... அதுலயும் எதுவும் தெரியலைன்னா அடுத்த டெஸ்ட் பண்ணியாகணும்....”

“ஆறாயிரமா... டேய் பூபால் இதுக்குத்தாண்டா வேணான்னு சொன்னேன்.... இப்போ ஆறாயிரத்துல ஆரம்பிக்கறது அப்பறம் லட்சத்துல வந்து நிக்கும்...”

“நீங்க சும்மா இருங்கப்பா... ஒரு ஒரு வாட்டியும் வயிறு வலி வரும்போது நீங்க எப்படி கஷ்டப்படறீங்க....”

“டாக்டர் சப்போஸ் இதுல தெரியலன்னா அடுத்த டெஸ்ட்க்கு எவ்ளோ செலவாகும் டாக்டர்...”

“அது ஒரு பதினைஞ்சு வரை ஆகிடும் தம்பி....”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சாகம்பரியின் "யானும் நீயும் எவ்வழி அறிதும் " - காதல் கலந்த Sci-fi தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“ஓ அவ்ளோ ஆகுமா....”

“பாருடா வெறும் டெஸ்ட் பண்ணவே இவரு சொல்றதை பார்த்தா இருவது ஆகிடும் போல... அதுக்குப்பிறகு மருந்து, மாத்திரைன்னு அது வேற செலவு... இதெல்லாம் தேவையா சொல்லு... நம்ம வீட்டுக்கிட்ட இருக்கற டாக்டர்க்கிட்டவே எப்பவும் போல காட்டுவோம்டா....”

“அது சரியா வராதுங்க பெரியவரே... நீங்க தொடர்ந்து கிட்டத்தட்ட ஆறு மாசமா அல்சர் மாத்திரை சாப்பிட்டு வர்றீங்க... எல்லாமே வீரியம் மிக்க வலி நிவாரிணிங்க... இந்த மருந்துக்கெல்லாம் பக்க விளைவுகள் உண்டு.... இருதயம், கல்லீரல், கணையம் இப்படி பல உறுப்புகள் பாதிக்க வாய்புகள் அதிகம்...”

“என்ன டாக்டர் பயமுறுத்தறீங்க....”

“பயப்படுத்தலை பெரியவரே... உள்ளதை சொல்லுறேன்.... எதுவுமே அளவோட சாப்பிட்டாத்தான் மருந்து... அதுவே அளவுக்கு அதிகமா போனா விஷம்தான்....”

“டாக்டர் உங்களுக்கு தெரிஞ்ச இடம் எதாச்சும் இருக்கா... குறைந்த செலவுல டெஸ்ட் பண்ணுவாங்களா....”

“உங்க கஷ்டம் எனக்கு புரியுது தம்பி... இந்த டெஸ்ட் எல்லாம் எங்க எடுத்தாலும் இதே செலவுதான் ஆகும்... may be அரசாங்க மருத்துவமனைல ட்ரை பண்ணலாம்....”

“அங்க டெஸ்ட் மட்டும் தனியா பண்ண முடியாது போல டாக்டர்... அங்கவே டாக்டர்க்கிட்ட காட்டி அவங்க எழுதி கொடுத்தது மட்டும்தான் எடுக்க முடியும் சொல்லிட்டாங்க.... ஏற்கனவே எங்க வீட்டுக்கிட்ட இருக்கற மருத்துவமனைல கேட்டுட்டோம்....”

“இப்போ என்ன பண்றதுன்னு நீங்கதான் முடிவு பண்ணணும் தம்பி... இந்த ரிப்போர்ட் வச்சுட்டு என்னால வெறும் அல்சர் மட்டும்தான் ட்ரீட் பண்ணமுடியும்... அதை ஏற்கனவே உங்க டாக்டர் பண்ணிட்டு இருக்காரு...”

“பாரு டாக்டரே சொல்லிட்டாரு.... நாம பேசாம நம்ம பக்கத்துல இருக்கற டாக்டர்கிட்டவே எப்பவும் போல காட்டி மருந்து வாங்கிக்கலாம்....”

“டாக்டர் நான் ஒரு ரெண்டு நாள்ல என்ன பண்ணன்னு யோசிச்சுட்டு  உங்களை வந்து பார்க்கிறேன்...”

“நல்லது தம்பி... இந்த மருத்துவமனைலையே இலவசமா வசதியில்லாதவங்களுக்கு சில பல மருத்துவ சேவைகள் செய்யறாங்க... நீங்க அது வேணா ட்ரை பண்ணி பாருங்க... நான் ஒரு லெட்டர் தரேன்... அதை எடுத்துட்டு போய் அந்த சேவை மையத்துல இருக்கறவங்களை பாருங்க... நூறு சதவிகிதம் கிடைக்கும்ன்னு நம்பிக்கை தர மாட்டேன்... ஆனா கிடைக்க வாய்ப்பு இருக்கு....”

“கிடைக்க ஒரு சதவிகித வாய்ப்பு இருதாக்கூட போதும் டாக்டர்... இன்னைக்கே அங்க போய் பார்க்கிறேன்....”

“பூபால் உன்னை கஷ்டப்படுத்திக்காதப்பா... டாக்டர் சித்த மருத்துவம், ஆயுர்வேதம் அதுல எல்லாம் இந்த மாதிரி டெஸ்ட் எடுக்காமையே எப்படி நாடி பிடிச்சு பார்த்தே மருந்து தர்றாங்க.... சரியா கணிச்சு இந்த வியாதிதான் அப்படின்னு சொல்றாங்களே....”

“ஒரு ஒரு மருத்துவமும் வித்யாசப்படும் பெரியவரே... அலோபதி மருத்துவ முறை இதுதான்...”

“ஏண்டா பூபால்... அப்போ வேணா நாம சித்த வைத்தியம் பார்ப்போமே...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.