(Reading time: 11 - 21 minutes)

க்தி காலேஜ் பொண்ணு இறந்தது தற்கொலை இல்லை... அது ஒரு கொலை....”, சந்தோஷ் சொல்ல, “என்ன மச்சி சொல்லுற...”, என்று அதிர்ந்துபோய்  கேட்டான் சக்தி...

“சக்தி நான் உன்கிட்ட நேர்ல பேசணும்... எங்க வர்ற சொல்லு...”

“வெளிய நாம மீட் பண்ண முடியாது... நீ உன் வீட்டுலையே இரு... நான் அங்க வர்றேன்....”

அடுத்த அரை மணியில் சந்தோஷ் வீட்டில் இருந்தான் சக்தி....

“என்னடா வேஷம் இது... தாடி மீசை எல்லாம் வச்சு TR ரேஞ்சுக்கு இருக்க....”

“போடா பொறாமைப் பிடிச்சவனே.... compare பண்றான் பாரு TR கூட...”

“ஏண்டா அவருக்கு என்ன குறைச்சல்... ஆல் இன் ஆல் அழகு ராஜாடா அவரு... எதுனாச்சும் ஒரு field விட்டு வச்சிருக்காரா பாரு... அன்னைக்கு மீட்டிங்ல பேசினாரு பாரு... ப்பா அப்படியே ஆடி போயிட்டேன்...”

“ரொம்ப பேசறியே... அவரு கட்சில சேர்ந்த்துட்டியா நீயி.... கொபசெ போஸ்ட் கொடுத்துட்டாரோ...”

“அது கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும்டா... எனக்கெல்லாம் அந்த லக் அடிக்காது.... உனக்கு வேணா அடிக்கலாம்....”

“சரி அவரை கலாய்ச்சது போதும்... விஷயத்துக்கு வா...  எப்படி அந்த பொண்ணு தற்கொலை பண்ணலைன்னு சொன்ன....”

“அதுக்கு முன்ன இந்த லிஸ்ட் பாரு...”, சந்தோஷ் ஒரு காகிதத்தை சக்தியிடம் நீட்டினான்....

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா வெயின் "மையலில் மனம் சாய்ந்த வேளை..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“ஹ்ம்ம் இது கடந்த அஞ்சு வருஷத்துல அங்க நடந்த தற்கொலை இல்லை வேற விதமா இறந்தவங்க ரிப்போர்ட்... இதுதான் நம்மக்கிட்ட ஏற்கனவே இருக்கே....”

“இந்த லிஸ்ட்ல ஒரு ஒற்றுமை இருக்கு பார்த்தியா....”

“என்ன ஒற்றுமை....”

“இறந்த எல்லாருமே அந்த வருஷம்தான் கல்லூரில சேர்ந்தவங்க....”

“அது நானுமே பார்த்தேண்டா... அந்த விஷயம் பார்த்த பிறகுதான் எனக்கு சந்தேகமே வலுவாச்சு.... ஆனா ஒரு ஒரு மரணத்துக்கு பின்னாடியும் வலுவான காரணம் இருந்து இருக்கு.. அதுவும் அவங்களை கொஞ்சம் கூட சந்தேகப்பட முடியாத அளவுக்கு....”

“ஹ்ம்ம் எல்லாமே ரொம்ப பிளான் பண்ணி பண்ற விஷயம் சக்தி... ஒரு நூல் அளவு கூட விஷயம் வெளிய யாராலும் கிரகிக்க முடியாதபடி பண்றாங்க...”

“எதுக்காக அப்படின்னு உனக்கு ஏதானும் யூகம் இருக்கா....”

“பணம்தான் வேற என்ன... ஒரு மெடிக்கல் சீட் அட்மிஷன் பீஸ் பேமென்ட் கோட்டால இப்போ என்ன விலை தெரியுமா.... அஞ்சுலேர்ந்து பத்து கோடி.... so free சீட்ல வந்த பசங்களை இந்த மாதிரி கொலை பண்ணிட்டு அதை  பேமென்ட் சீட்டா மாத்தி கொடுத்துட வேண்டியது...”

“ஏண்டா அவனுக்கு வருமானமே வருஷத்துக்கு நூறுலேர்ந்து இருநூறு  கோடி இருக்குமே... இந்த பிசாத்து பத்து கோடிக்கா கொலை வரைக்கும் போறான்....”

“பத்து கோடி இல்லைடா... பத்து லட்சம் அப்படின்னாக்கூட இவனுங்கல்லாம் பண்ணுவாங்க.. அதுவும் இல்லாம அந்த சீட் ,முக்கால்வாசி NRI கோட்டால வச்சுடறான்... அப்படின்னா முப்பதுலேர்ந்து நாற்பது கோடிவரை வாங்கலாம் இல்லை....”

“பகல் கொள்ளை... இப்படி துட்டு கொடுத்து படிச்சு நாளைக்கு டாக்டர் ஆகி விட்ட காசை பிடிக்கறேன்னு நம்மக்கிட்ட கறந்துருவாங்க... ஆமா இதுல பாதி, கேசை மறைக்க லஞ்சம் கொடுத்தே காலி ஆகிடுமே... இவனுக்கு என்ன தேறும் கடைசில... கிடைக்கற  பணத்துக்கு அவன் எடுக்கற ரிஸ்க் பெரிதா இருக்கு....”

“அதுலையும் இவன் ரொம்ப கில்லாடியா இருக்கான்டா.... முதல் ஒரு ரெண்டு, மூணு தடவைதான் லஞ்சம் கொடுக்கறான்.... அதுக்குப்பிறகு வாங்கினவனை இவன் ஏதாவது ஒரு விஷயத்துல மாட்ட வச்சு வீடியோ எடுத்து வச்சுக்க வேண்டியது... அதை வச்சு மிரட்டியே காரியத்தை சாதிச்சுக்கறான்....”

“ஹ்ம்ம் பக்கா கிரிமினல்தான்... சரி இதுக்கு என்ன ஆதாரம்....”, சக்தி கேட்க சந்தோஷ் சொல்ல ஆரம்பித்தான்...  

தொடரும்

Episode # 15

Episode # 17

Go to Gayathri manthirathai story main page

{kunena_discuss:1216} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.