(Reading time: 8 - 15 minutes)

தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 17 - ஜெய்

Gayathri manthirathai

வா பாரதி.... ராஜா எப்படி இருக்காரு... பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு....”

“நல்லா இருக்கார் சப்பாணி.... நான் பார்த்தே பத்து நாள் ஆச்சு.... செமினார், பேப்பர் presentation அப்படின்னு ஊர் ஊரா சுத்திட்டு இருக்கார்.... அப்பறம் ஜூனியர் சப்பாணி என்ன சொல்றான்... மயிலு எப்படி இருக்கா.... எப்ப இங்க வர்றாங்க....”

“ரெண்டு பேருமே நல்லா இருக்காங்க.... அடுத்த வாரம் இங்க வந்துடுவா....”

“சரி என்ன விஷயமா என்னை அர்ஜெண்டா கிளம்பி வர சொன்ன....”

“அந்த மணி கேஸ் விஷயமா பேசத்தான் வர சொன்னேன்.... எந்த பக்கம் போனாலும் இடிக்குது...”

“ஹ்ம்ம் அந்த பையனோட அம்மாப்பாவை போய் பார்த்தியா.... விஷயம் ஏதானும் கிடைச்சுதா....”

“அவங்க அதேதான் சொல்றாங்க பாரதி.... என் பையன் எங்க கூடத்தான் கோவில்ல இருந்தான்....”

“அவங்களுக்கு அந்த பொண்ணு பத்தி முன்னாடியே  தெரியுமா....”

“இல்லை பாரதி... அவங்க பையன் இந்த மாதிரி பொண்ணு பின்னாடி சுத்திட்டு இருந்தான்னே தெரியலைன்னு சொல்றாங்க... அதுவும் அவன் மிரட்டறான் அப்படின்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா கண்டிப்பா கண்டிச்சு வச்சிருப்போம்... எங்களுக்கும் ரெண்டு பொண்ணுங்க இருக்கு... எப்படி இன்னொரு பொண்ணை தொந்தரவு பண்ண அனுமதிப்போம் அப்படின்னு வருத்தப்பட்டு சொன்னாங்க....”

“அவங்க பையனை காப்பாத்த பொய் கூட சொல்லலாம் இல்லையா....”

“இனி யாரை காப்பாத்த பொய் சொல்லணும் பாரதி.... அவனே போய் சேர்ந்தாச்சு.... அதுவும் இல்லாம அவங்க ரெண்டு பேர் கண்ணுலையுமே பொய் இல்லை... உண்மைதான் தெரிஞ்சுது....”

“இந்த கேஸ் முதலேர்ந்தே மணி பக்கமிருந்தே நாம பார்த்துட்டு இருக்கோம் சாரங்கா... இனி அந்த பொண்ணு பக்கமிருந்து ஆரம்பிக்கலாம்.... மணியை பத்தி information சொன்னது இறந்த பொண்ணோட தோழிதானே...”

“ஆமா அவங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போயிட்டு இருக்கும்போதுதான் இந்த சம்பவம் நடந்து இருக்கு....”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சாகம்பரியின் "யானும் நீயும் எவ்வழி அறிதும் " - காதல் கலந்த Sci-fi தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“ஹ்ம்ம் நானும் சந்தியாவும் அந்த பொண்ணை மறுபடி சந்திச்சு விசாரிக்கறோம்.... நீயும் சக்தியும் அவங்க கோவிலுக்கு போனதை உறுதி படித்த ஏதானும் விஷயம் கிடைக்குதான்னு பாருங்க...”,பாரதி சாரங்கனிடம் விடை பெற்று கிளம்பினாள்....

அங்கிருந்து கிளம்பிய பாரதி சந்தியாவை அழைத்து விஷயத்தை கூறி அந்த பெண்ணை சந்திக்க வேண்டும் என்று கூற, அதன்படி சந்தியாவும் அடுத்த இரண்டு நாட்களில் ஒரு பார்க்கில் அப்பெண்ணை சந்திக்க ஏற்பாடு செய்தாள்....

“வாங்க பாரதி... அதோ அங்க பென்ச்ல உட்கார்ந்து இருக்காங்களே அவங்கதான் சாந்தியோட தோழி....”

“ஹ்ம்ம் இப்போ என்ன பண்ணிட்டு இருக்காங்க...”

“படிப்பை முடிச்சுட்டு ஏதோ சின்ன வேலைல இருக்காங்க பாரதி....”

“எதுக்காக அவங்களை மீட் பண்ண போறோம்ன்னு சொல்லிட்டீங்களா....”

“விவரமா சொல்லலை... சாந்தி விஷயம் பேசணும்.... வாங்கன்னு மட்டும்தான் போன்ல சொன்னேன்....”

“அதுவும் நல்லதுதான்....”, இருவரும் பேசிக்கொண்டே அந்தப் பெண்ணின் அருகில் சென்று தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டார்கள்....

“வணக்கம் மேடம்.... என்னோட பேர் பூஜா... என்கிட்டே நீங்க சாந்தி பத்தி என்ன பேசணும்....”

“உங்களுக்கு சாந்தியை எத்தனை வருஷமா தெரியும்... உங்க ரெண்டு பேருக்கு நடுவுலயும் ரொம்ப நெருங்கிய நட்பா...”

“காலேஜ்ல ரெண்டு பேரும் ஒரே குரூப் அண்ட் ஒரே கிளாஸ்... அடுத்தடுத்து உட்கார்ந்ததால அப்படியே பேசி பேசி பிரிண்ட்ஸ் ஆகிட்டோம்....”

“ஹ்ம்ம் அப்போ ஒரு ரெண்டு வருஷம் பழகி இருப்பீங்க சரியா.... அந்த கொலை நடந்தபோது நீங்க மூணாவது வருஷம் படிச்சுட்டு இருந்தீங்க இல்லை....”

“ஆமாம் மேடம்... கடைசி செமஸ்டர்ல இருந்தோம்....”

“ஓ சரி... மணி பத்தி முன்னாடியே உங்ககிட்ட சாந்தி சொல்லி இருக்காங்களா....”

“பின்னாடியே வந்து ரொம்ப தொல்லை பண்றதா சொல்லி இருக்கா.... அந்த சம்பவம் நடக்கறதுக்கு முன்னாடி வாரம்தான் அவனோட காதலை சாந்தி ஏத்துக்கலைன்னா அவளை ஏதாவது பண்ணிடுவேன்னு சொல்லி மிரட்டி இருக்கான்... சொன்னது மாதிரியே பண்ணிட்டான்....”

“நீங்க அவன் மூஞ்சியை பார்த்தீங்களா....”

“இல்லை மேடம்.... ஹெல்மெட் போட்டிருந்தான்... அதுவும் தவிர ஹெல்மெட் உள்ளுக்குள்ள துணி வச்சு முகத்தை  முழுதும் கவர் பண்ணி இருந்தான்... அவனோட கண்ணுக்கும் கூலர்ஸ் போட்டு இருந்தான்.... அதனால அவனை பார்க்க முடியலை....”

“ஸோ மணி மிரட்டினான்னு சாந்தி சொன்னதை வச்சு நீங்க அவன்தான் பண்ணி இருப்பான்னு ஒரு அனுமானத்துல சொல்லிட்டீங்க... அப்படித்தானே....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.