(Reading time: 8 - 15 minutes)

“அனுமானம் இல்லை மேடம்... அதுதான் உண்மை... மணியைத்தவிர அவ மேல வேற யாருக்கும் இந்தளவு வெறி இல்லை....”

“ஹ்ம்ம் புரியுது.... அவங்க குணம் எப்படி... நல்லா கலகலப்பா பழகுவாங்களா...  உங்களைத் தவிர வேற யாராவது அவங்களுக்கு நெருங்கிய தோழி இருக்காங்களா...”

“இல்லை மேடம்... ரொம்ப பேசமாட்டா.... கேட்ட கேள்விக்கு பதில்... அவ்வளவுதான்... என்கிட்டயானும் ஓரளவுக்கு பேசுவா... மத்தவங்கக்கிட்ட அதுகூட இல்லை....”

“அவங்க அம்மா, அப்பா குடும்பம் பத்தி அவங்களோட பெர்சனல் பத்தி எல்லாம் சொல்லி இருக்காங்களா....”

“அவங்க வீட்டுக்கு நான் ரெண்டு, மூணு தடவை போய் இருக்கேன் மேடம்.... அவ அம்மா அப்பா ரெண்டு பேருமே வொர்கிங்.... காலைல போனா வர்றவே ராத்திரி ஆகிடும்.... ஸோ முக்கால்வாசி நேரம் சாந்தி தனியாதான் இருப்பா....”

“ஹ்ம்ம் மணி தவிர வேற யாராவது அவங்ககிட்ட காதல் சொல்லி இருக்காங்களா.... உங்க காலேஜ்ல இல்லை வெளில...”

“இல்லை மேடம் காலேஜ்ல யாரும் சொன்னதில்லை... ஆனா சாந்தி ஒருத்தரை காதலிச்சுட்டிருந்தா... அது மட்டும் தெரியும்....”

பாரதியும் சந்தியாவும் மாற்றி மாற்றி கேள்விகள் கேட்க பதில் சொல்லியபடியே இருந்த பூஜா கடைசியில் ஒரு குண்டைத் தூக்கி போட்டாள்....

“என்ன சொல்றீங்க பூஜா.... சாந்தி காதலிச்சுட்டு இருந்தாங்களா.... இதை ஏன் நீங்க முன்னாடியே சொல்லலை....”

“இல்லை மேடம்.... அவ லவ் பண்றது வெளிய யாருக்கும் தெரியாது.... நான் சொல்லப்போய் அனாவசியமா அவ பேர் கெட்டுப் போய்ட போகுதேன்னுதான் சொல்லலை மேடம்....”

“என்ன பூஜா நீங்க எத்தனை முக்கியமான விஷயம்... இப்படி மறைச்சுட்டீங்களே...”

“இல்லை மேடம்... அவ காதலிச்சான்னு மட்டும்தான் தெரியும்... யார் என்னங்கற விவரம் தெரியாது... அவ அவரைப்பத்தின எந்த விஷயமும் சொன்னதில்லை... இவ்ளோ ஏன் அவரோட பேர் கூட எனக்குத் தெரியாது....”

“நீங்க அவங்ககிட்ட கேக்கலையா....”

“அவ எதுவும் என்கிட்டே சொல்லலை மேடம்... அவளோட காதலர் அவ படிச்சு முடிக்கரவரை விஷயம் யார் கிட்டயும் சொல்லக்கூடாதுன்னு சொல்லி இருந்ததால அவ எதையும் சொல்லலை மேடம்....”

“எப்படி இருந்தாலும் காலேஜ்ல இருந்துதானே அவரை போய் பார்த்து இருப்பா... அப்போ எங்க போனா ஏதாவது தெரியுமா...”

“எல்லா வாரமும் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும் ரெண்டு பேரும் பார்த்துப்பாங்க மேடம்... சாந்தியோட அம்மா அவளை அந்த ரெண்டு நாளும் கோவிலுக்கு போக சொல்லி இருந்ததால அன்னைக்கு லேட்டா போனாலும் கேக்க மாட்டங்கன்னு அந்த நாளை அவங்க மீட் பண்ண வச்சுக்கிட்டதா சொல்லி இருக்கா.....”

“அவங்க எங்க மீட் பண்ணுவாங்கன்னு சொல்லி இருக்காங்களா...”

“இல்லை மேடம்... காலேஜ் முடியும்போது அவளோட காதலர் இடத்தை மெசேஜ் அனுப்புவாரு... அதை பார்த்த பிறகு இவ அங்க கிளம்பி போவா... இதுவரை ஒரே இடத்துல அவங்க சந்திச்சதே இல்லை....”

“ஓ ரொம்ப மர்மமா இருக்கு...”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா வெயின் "மையலில் மனம் சாய்ந்த வேளை..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“ஆமாம் மேடம்... எனக்கும் சந்தேகம் வந்து கேட்டதுக்கு யாராவது பார்த்துட்டு வீட்டுல சொல்லிட்டா என்னோட படிப்பு பாழா போய்டும்ன்னு அவர் இப்படி இடம் மாத்தி மாத்தி சொல்லுறாருன்னு சொன்னா மேடம்....”

“அந்த ஆள் என்ன பண்ணிட்டு இருந்தான்னு ஏதானும் சொன்னாங்களா... படிக்கற பையனா...”

“இல்லை மேடம் வேலை செஞ்சுட்டு இருந்தாரு.... கடைசியா வேலைய விட்டுட்டு சுயதொழில் ஆரம்பிக்க பேங்க் லோன் ட்ரை பண்ணிட்டு இருந்தாருன்னு சொன்னா மேடம்....”

“சரி பூஜா... இதை பத்தி விசாரிச்சுட்டு மேல ஏதாவது விளக்கம் தேவைப்பட்டுச்சுன்னா உங்களை திரும்ப தொடர்பு கொள்றோம்.... உங்க ஒத்துழைப்புக்கு ரொம்ப நன்றி...”

சந்தியாவும், பாரதியும் பூஜாவிடம் விடைபெற்று யார் அந்த காதலனாக இருப்பான் அவனுக்குன் சாந்தியின் கொலைக்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்குமா என்ற சிந்தனையுடனே அவ்விடத்தை விட்டு அகன்றனர்....

“வணக்கம் டாக்டர்....”

“வாங்க பூபால்... என்னாச்சு... நான் சொன்ன இடத்துல போய் பார்த்தீங்களா...”

“உங்க லெட்டர் கொடுத்ததும் நல்ல மரியாதை டாக்டர்... கண்டிப்பா உதவி பண்றதா சொல்லி இருக்காங்க... என்ன என்ன டெஸ்ட் பண்ணனும் அதுக்கு எவ்வளவு செலவாகும் எல்லாத்த பத்தியும் டீடைலா ரிப்போர்ட் வாங்கிட்டு வந்து பார்க்க சொல்லி இருக்காங்க டாக்டர்... அதும்பிறகு அவங்களால எந்த அளவுக்கு உதவ முடியும்ன்னு சொல்றேன்னு சொல்லி இருக்காங்க....”

“நல்லது தம்பி... அவங்க நேர்மறையா பேசினாலே கண்டிப்பா உதவி கிடைக்கும்ன்னு அர்த்தம்.... நான் உங்களுக்கு இப்போவே டெஸ்ட் பத்தி, அதுக்கான செலவு பத்தி எல்லாம் எழுதி தரேன்... நீங்க அவங்களை பார்த்து அவங்களால உதவ முடியுமான்னு கேட்டுட்டு வாங்க... அதும்பிறகு எங்க டெஸ்ட் எடுக்கலாம்னு முடிவு செய்யலாம்.....”

“ரொம்ப நன்றி டாக்டர்....”

டாக்டரிடம் எடுக்க வேண்டிய டெஸ்ட் மற்றும் அதற்கான  செலவு ஆகிய விவரங்களை வாங்கிக் கொண்டு அந்த சேவை மையத்திற்கு சென்றான் பூபால்... அங்கிருந்தவர்கள் எண்பது சதவிகிதம் வரை கட்டணத்தை தந்துவிடுவோம் மீதமிருக்கும் இருபது சதவிகிதத்தை பூபால் தயார் செய்து கொள்ளவேண்டும் என்று கூற அடுத்த இரண்டு நாட்களில் இருவது சதவிகித பணத்தை தயார் செய்துகொண்டு பூபாலும் அவன் தந்தையும் மருத்துவரை பார்க்க சென்றனர்....  

தொடரும்

Episode # 16

Episode # 18

Go to Gayathri manthirathai story main page

{kunena_discuss:1216} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.