Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 09 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 09 - சாகம்பரி குமார்

Yaanum neeyum evvazhi arithum

விண்கல ஸ்டேஷனில் ஏ1-45வை  நிறுத்தி விட்டு இறங்கிய ஹனிகாவை கைதட்டல் ஓசைகள் வரவேற்றன.

“வாவ்… ஹனிகா”

“ஹனிகா… பிரமாதம்”

“ஹேட்ஸ் ஆஃப் ஹனிகா”

அனைத்து வாழ்த்துக்களை புன்சிரிப்புடன் ஏற்றுக் கொண்ட ஹனிகாவை ஒரு மருத்துவர் அழைத்து சென்றார்.

பரிசோதனை லாபிற்குள் அவளை அழைத்துச் சென்று அவளையும் அவளுடைய ஸ்பேஸ் சூட்டையும் பரிசோதித்தனர். ஏதாவது ஸ்பீஸிஸ் – நுண்கிருமிகள்- பாதிப்பு இருக்கிறதா என்று டெஸ்ட் செய்தார்கள். கவலைபடும் அளவிற்கு இல்லையென்றதும் பிறகு அவளை வெளியே செல்ல அனுமதித்தார்கள்.

ஹனிகா விங்-கமாண்டர் மிட்டிஸாவை பார்க்க விரைந்தாள். அவளுடைய ரியாக்ஸனை பார்க்க மிகவும் விரும்பினாள். ஆனால் அவள் லெப்டினண்ட் கர்ஷான் அறையில் இருப்பதாக தெரிந்தது. அங்கேயே சென்றாள்.

அவள் அனுமதி கேட்டு நின்றபோது கர்ஷான் அவளை உள்ளே வரச் சென்னார்.

“உள்ளே வா ஹனிகா.” என்றார்.

அவருக்கு சல்யூட் செய்த ஹனிகா அருகிலிருந்த மிட்டிஸாவையும் பார்த்து புன்னகைத்தாள். ‘நான் வந்துட்டேன் பார்த்தியா’ என்பதுபோல சிரித்தாள்.

“ஹனிகா நீ ஏலியன் ஸ்பேஸ்ஷிப் உடன் பிணைக்கப்பட்டு விட்டாய் என்று ரிப்போர்ட் ஆகியிருக்கிறது. எப்படி திரும்பி வந்தாய்?”

“ஸர்…  நம்முடைய ஷட்டிலின் பாதுகாப்பு கவசத்தை உடைத்து அவர்கள் மின்காந்த அலையை கொண்டு பிணைத்திருந்தார்கள். அதற்குத் தேவையான சக்தியை நம்முடைய ஷட்டிலில் இருந்தே எடுத்திருக்கிரார்கள் எபதை புரிந்து கொண்டேன்..”

“அப்படி அறிந்தாய்?”

“ஏனெனில் அவர்களுடையது குவார்ட்ஸ் மூலம் இயங்குவது. நம்முடைய ஷட்டில் சோலார் பவர் மூலம் இயங்குவது. அவர்கள் மதிப்பு மிக்க குவார்ட்ஸின் சக்தியை பிரயோகித்து இதை செய்வதை விரும்ப மாட்டார்கள். ஏனெனில் க்வார்ட்ஸ அவர்களுக்கு தொலைதூர பயணங்களுக்கு தேவைப்படும். மேலும்  நம்மை போன்ற ஒருவரை அழிப்பதற்கு அத்துனை செலவு பிடிக்கும் திட்டத்தை செயல்படுத்த மாட்டார்கள் என்று தோன்றியது. அவர்கள் பார்வையில் நாம் ஒரு சிறு பூச்சிதான். எனவே நம்முடைய சக்தியைதான் உபயோகிப்பார்கள் என்று யூகித்தேன்.”

“ஸோ…”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் " ராணி... மகாராணி..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“என்னுடைய ஷட்டிலை சில நொடிகள் அணைத்து விட்டு பிறகு  ரீ-ஸ்டார்ட் செய்தேன். அவர்கள் உருவாக்கியிருந்த மின்காந்த அலை மறைந்து போனது. எனவே அவர்களுடைய வலையில் இருந்து விடுபட முடிந்தது.”

“வெல்டன் ஹனிகா” என்று சொல்லியபடி எழுந்து நின்று கைதட்டி அவளை பாராட்டினார்.

“என்னவொரு யூகம்… இதைத்தான் திங் பியாண்ட் என்று சொல்வார்கள். இதே நிலையில் சிக்கிக் கொண்ட  நிறைய ஸ்பேஸ்-கார்டுகள் உயிரிழந்து போயிருக்கின்றனர். ஆனால் ஹனிகா நீ உன் திறமையை நிருபித்து விட்டாய்”.

முகம் கறுத்து நின்ற மிட்டிஸா உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தாள். ‘இவளுக்கு எப்படி இப்படி தோன்றியது. ஐக்யூ அதிகமோ!’

“அதுசரி… நீ இந்த ஷட்டிலை இயக்க எப்போது கற்றுக் கொண்டாய்?” கர்ஷான் ஆர்வமாக கேட்டார்,

“ஸர்… இந்த மாடலை இயக்கியது இல்லை. ஸ்பேஸ் சென்டரில் பயிற்சி பெற்றதுதான்.”

“உனக்கு சைக்காலஜி தெரியும் போலிருக்கிறது. ஏலியன்களின் எண்ண ஓட்டத்தை கண்டுபிடித்து விட்டாய்”

“அதெல்லாம் இல்லை ஸர்… அவர்களிடம் க்வார்ட்ஸ் சக்தியில் இயங்கும் கட்லாஸ் உள்ளது. அதை நம்மீது பிரயோகித்தால்  நாம் சாம்பலாகி விடுவோம். ஆனால் அன்றைக்கு குளோனிங் சென்டரின் முன்பு அவர்கள் வந்தபோது நான் அவர்களை அட்டாக் செய்த பின்பும் அதனை பயன்படுத்தவில்லை. பதட்டமாக ஓடி விட்டார்கள்.”

“ஒருவேளை இந்த அற்ப மின்வரோவாசிகளிடம் மதிப்பு மிக்க குவார்ட்ஸ் சக்தியை பயன்படுத்த வேண்டாம் என்ற கட்டளை அவர்கள் மனதில் ஆழ்ந்து பதிந்து இருக்கும் போல…”

“ஆமாம் ஸர்… நாம் அந்த அளவிற்கு வொர்த் இல்லை என்று நினைத்திருக்கலாம்.”

“மிட்டீஸா இப்போது சொல்லுங்கள். உங்கள் க்ரு மெம்பரின் க்ரேட் என்ன?” தோரணையாக கேட்டார். கேள்வியே சில சமயம் பதிலை பொதிந்து வைத்திருக்கும்.

“அது… க்ரேட்-3… இல்லை 1 தரலாம் ஸர்” வேண்டா வெறுப்பாக சொன்னாள்.

“க்ரேட்-0வில் இருக்கும் ஸ்பேஸ்-கார்ட் எத்தனை பேருக்கு இதுபோல் செயல்பட தெரியும்?”

அதாவது ஹனிகாவிற்கு க்ரேட்-0வே தரலாம் என்று மறைமுகமாக சொல்கிறார்.

“ஸர்…  நான் பேசலாமா?” ஹனிகா குறுக்கிட்டாள்.

“சொல்லு…”

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

Sagampari

Completed Stories
On-going Stories

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 09 - சாகம்பரி குமார்saaru 2019-05-06 16:04
Wonderful update ji
Miti vangunaya pulb baby kita..
ha ha
Hani baby unga annan un all kita ten irukaru
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 09 - சாகம்பரி குமார்Sagampari 2019-05-06 19:42
Thank you saaru
Kutties will have more..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 09 - சாகம்பரி குமார்madhumathi9 2019-04-30 21:01
wow very.v.v.interesting aaga poguthu (y) padikkum aarvathai thoodugirathu. Adutha eiyai eppo padikkalaanm endru kaathu kondu irukkirom. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 09 - சாகம்பரி குமார்Sagampari 2019-05-06 19:42
Thank you Madhumathi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 09 - சாகம்பரி குமார்Sahithyaraj 2019-04-30 19:47
wow factors increase aagitte poguthu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 09 - சாகம்பரி குமார்Sagampari 2019-05-03 20:17
Thank you sahithyaraj
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 09 - சாகம்பரி குமார்AdharvJo 2019-04-30 18:53
Twin white hole veraya 😱 ellame suda suda information....Ms sagampari as these are not something we hear in our day today life its super cool to know abt it.. gk improve agudhu :P thank you!!

Mr altal-ku nala.nose cut...venum.ippadi than :yes:

😍😍 Simhan than pavam :D wish hanika understand his feelings.... :D

as always u give a fair justification 👌

yes it's really sad if the journey is incomplete (y) and I liked her determination. Hope visra is back to form and unite with his family. :cool: and interesting epi ma'am 👏 👏👍 thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 09 - சாகம்பரி குமார்Sagampari 2019-05-03 20:16
Thank you AdharvJo..
This is science fiction story.. i try to make as fantacy.
Yes visra will come back.. Hanika-simhan will have their day.. :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 09 - சாகம்பரி குமார்Srivi 2019-04-30 17:51
Superb update sissy.. Excited ..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 09 - சாகம்பரி குமார்Sagampari 2019-05-03 19:58
Thank you Srivi
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top