(Reading time: 11 - 21 minutes)

“அப்பா இது மாதிரி சொல்லித்தான் ரெண்டு மாசம் முன்னாடி ஒரு ஹோமியோபதி டாக்டர் பார்த்தோம்... என்னாச்சு வலி இன்னும் கூடத்தான் செஞ்சுது... ரெண்டு நாள்ல திரும்ப நம்ப பழைய டாக்டர்கிட்டதான் போனோம்.... டாக்டர் அப்பா சொல்றதை தப்பா எடுத்துக்காதீங்க...”

“ச்சே ச்சே... தப்பா நினைக்க ஒண்ணும் இல்லை பூபால்... எல்லாருக்கும் வர்ற சந்தேகம்தானே....பெரியவரே அடுத்த டெஸ்ட் பண்ணி ரிசல்ட் வர்ற வரை நான் கொடுக்கற மருந்து சாப்பிட்டு வாங்க.... வலி இல்லாம இருக்கும்... இப்போ நான் கொடுக்கறதுமே அதிகம் சாப்பிடக்கூடாது... ஒரு நாலு நாளைக்குதான் கொடுக்கறேன்... அதுக்குள்ள நீங்க decide பண்ணிட்டு வந்து என்னை பாருங்க....”,மருத்துவர் கூற, சேவை மையத்தில் கையை விரித்துவிட்டால் பணத்திற்கு என்ன செய்வது என்ற யோசனையுடன் பூபாலும், அவன் தந்தையும் மருத்துவர் அறையை விட்டு வெளியில் வந்தார்கள்....

ன்ன ஆச்சுப்பா... கிட்னி டோனர் கிடைச்சாங்களா.... நமக்கு நேரம் ரொம்ப குறைவா இருக்கு...”

“ஹ்ம்ம் பார்த்துட்டேதான் சார் இருக்கோம்... ஆனா ஆள்தான் மாட்ட மாட்டேங்குது....”

“யோவ் பணத்தை கொஞ்சம் ஏத்தி சொல்லிப்பாருய்யா கண்டிப்பா கிடைப்பாங்க...”

“மூணு லட்சம் வரைக்கும் சொல்லி இருக்கேன் சார்... அப்படியுமே யாரும் கிடைக்கலை...”

“மேல இன்னும் அம்பதாயிரம் ஏத்தி சொல்லிப்பாரு... அப்படியே அந்த ஏஜென்ட்டை தனியா கவனிக்கிறேன் சொல்லு....”

“சார் ஷேக்குடையது  ரொம்ப ரேர் blood group.... அதுதான் கிட்னி கிடைக்க தாமதமாகுது... இதுவரைக்கும் வந்தவங்க யாரோடதும் cell tissue அவருடையதோட மேட்ச் ஆகலை....”

“விளக்கம் சொல்லாதைய்யா... இத்தனை கோடி மக்கள்ல ஒருத்தர் கூடவா கிடைக்கலை....”, தன் முதலாளியின் மிரட்டலை கேட்ட PA மனதினுள், ‘நீங்க கூட அந்த கோடி மக்கள்ல ஒருத்தர்தான்... அவ்ளோ அவசரம்னா உங்களதை கொடுங்க..’, என்று மனதினுள் சொல்லிக்கொண்டார்....

“என்னைய்யா மனசுல என்னவோ நினைக்கற போல... என்ன என்னை திட்டிட்டு இருக்கியா....”

“ஐயோ அதெல்லாம் இல்லை சார்... கிட்னி கிடைக்க வேற வழி ஏதானும் இருக்கான்னு யோசனை பண்ணறேன்...”

“நல்லா ரூம் போட்டு கூட யோசனை  பண்ணிக்கோ.... ஆனா எனக்கு இன்னும் ரெண்டு நாள்ல கிட்னி டோனர் கிடைச்சாகணும்....”

“கண்டிப்பா முயற்சி பண்றேன் சார்... அப்பறம் நம்ம டாக்டர் சதா உங்களை காண்டாக்ட் பண்ணினார் போல... நீங்க எடுக்கலைன்னு சொன்னாரு... உங்கக்கிட்ட ஏதோ எக்ஸ்ரே மெஷின் வாங்கற விஷயமா பேசணும் சொன்னார் சார்.....”

“ஓ ஆமாம்... மறந்தே போயிட்டேன்... இப்போ பேசிடறேன்....”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் " ரிங்கா ரிங்கா ரோசஸ்..." - திகில் நிறைந்த பேய் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“சொல்லுங்க டாக்டர்... கூப்பிட்டிருந்தீங்க போல....”

“ஆமாம் சார்... நம்ம செகண்ட் பில்டிங்ல ஒரு எக்ஸ்ரே மெஷின் வைக்கணும் சொல்லிட்டு இருந்தேனே.... அது பத்தி பேசத்தான் கூப்பிட்டேன் சார்...”

“அது பண்ணிடலாம் டாக்டர்... நீங்க டீடைல்ஸ் அனுப்பிடுங்க... நான் பார்த்துக்கறேன்....”

“அப்பறம் அந்த ஷேக் வர்ற தேதி மறுபடி confirm பண்ணிட்டாரு.... கிட்னி டோனர் கிடைச்சுட்டாரா....”

“இல்லை டாக்டர்... அது பத்தித்தான் PAகிட்ட பேசிட்டு இருந்தேன்...”

“சொதப்பிடாம பாருங்க சார்... ஆள் பயங்கர பெரிய இடம்... இங்க வேற எல்லா பெரிய ஆளுங்களையும் கையில வச்சிருக்காரு... நாம கடைசி நேரத்துல பின்னடிச்சா அவ்வளவுதான் ... அத்தனை சைடுலேர்ந்தும் போட்டு தாளிச்சு எடுத்துடுவாங்க....”

“ஹ்ம்ம் புரியுது டாக்டர்.... அதான் நானே இதுல இன்வால்வ் ஆகி பார்த்துட்டு இருக்கேன்.... பணம்கூட ஏத்தி சொல்ல சொல்லி இருக்கேன்... பார்க்கலாம்...”

“சார் இப்போ நீங்க எங்க இருக்கீங்க.....”

“என்னோட ஆபீஸ்லதான் டாக்டர்... ஏன் கேக்கறீங்க....”

“உங்கக்கூட வேற யாராவது இருக்காங்களா....”

“என் PA மட்டும்தான் இருக்காரு...”

“ஓ அந்த ஷேக்குக்கு கிட்னி கிடைச்சா மாதிரிதான்... ஒரு ஆள் மாட்டி இருக்கு....”

“”என்ன டாக்டர் இந்த விஷயத்தை இவ்ளோ லேட்டா சொல்றீங்க... எவ்ளோ சந்தோஷமான விஷயம்.... இதைத்தானே முதல்ல சொல்லணும்....”

“நான் நேர்ல வந்து உங்ககிட்ட பேசறேன் சார்.... நாம போன்ல நிறைய பேச வேண்டாம்....”

“இப்போவே வர்றீங்களா டாக்டர்....”

“இப்போ முடியாது சார்....நாளைக்கு காலைல ஒரு ஆறு மணிபோல உங்க வீட்டுக்கு வர்றேன்... அப்போ பேசிக்கலாம்.....”

“சரி டாக்டர்... நாளைக்கு பார்க்கலாம்....”

“சார் டாக்டர் என்ன சொன்னாரு.... ஒரே சந்தோஷமா இருக்கீங்க....”

“நம்ம சதான்னா சதாதான்ய்யா.... பாரு ஆளை பிடிச்சுட்டாறு....”

“என்ன சார் சொல்றீங்க... டோனர் கிடைச்சுட்டாங்களா... யாரு சார்....”

“ஆமாய்யா.... நாளைக்கு விவரம் சொல்றேன்னு சொல்லி இருக்காரு... நீயும் நாளைக்கு காலைல வீட்டுக்கு வந்துரு.... விவரம் கேட்டுட்டு follow பண்ண வசதியா இருக்கும்...”, தன் PAவிடம் சொல்லிவிட்டு சந்தோஷ மனநிலையில் வீட்டிற்கு கிளம்பினார்.....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.