Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 07 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 07 - சாகம்பரி குமார்

Yaanum neeyum evvazhi arithum

னிகாவும் மனித இனத்தை சேர்ந்தவளோ என்ற எண்ணம் சிம்ஹனுக்குள் எழுந்தபோது அவனுக்குள் ஒரு இனிய அதிர்வு கிளம்பியது. அவள் ஏலியனாக இல்லாமல் அவன் இனத்தை சேர்ந்தவளாக இருந்தால் வாழ்க்கை ரொம்பவும் இனிமையாக இருக்கும் என்று தோன்றியது.

முதன்முதலில் அவளுடைய கண்களையும்… அந்த தீட்சண்யமான பார்வையையும் பார்த்தபோது ஒரு அழகிய காட்சியை காண்பதுபோல அவனுக்கு தோன்றியது. அந்த கண்கள் நிறைய கனவுகளை கொண்டிருக்கின்றன என்று தோன்றியது. அவை அத்தனையும் நிறைவேறினால் எப்படி இருக்கும் என்றும் தோன்றியது.

அதனாலேயே அவளை அடிக்கடி தொடர்பு கொண்டு அவளை பற்றி அறிய முற்பட்டான். அதேபோல் அவளுடைய கனவுகளையும் அறிந்து கொண்டான். சந்தர்ப்பம் கிடைத்தபோது அவளுக்கு உதவி அவன் தெரிந்து கொண்ட ஒரு கனவினை நிறைவேற்றி விட்டான். இனி அவளிடம்தான் மற்றவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அவளுக்கு ஸ்பேஸ் கார்டாக பணி கிடைத்ததை சொன்னபோது அவள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாள்!. அவளுடைய வேண்டுதல் ஒன்றை அவன் மூலமாக பிரபஞ்சம் நிறைவேற்றி விட்டது என்று  நன்றி உணர்வு பொங்க கூறினாள்.

‘இன்னும் பலமுறை இதுபோல் நீ சொல்வாய் பெண்ணே!!’ என்று மன்திற்குள் நினைத்துக் கொண்டான்.

சிம்ஹன் இதுவரை அவளை ஒரு பெண்ணாக நினைத்ததில்லை. அவனுடைய பரிசோதனை வெற்றி பெற்ற அடையாளமாக கருதினான். அது எப்படி?

அதற்கு இந்த சிம்ஹனைபற்றி தெரிந்து கொள்ள வேண்டும்! அவன் ஒரு இயற்பியல் விஞ்ஞானி! விண்வெளியில் தொலைதூர பயணம் செய்வது அவனுடைய நீண்ட நாள் கனவு. அதற்காக நிறைய முயற்சிகள் செய்தான்.  அத்துடன் பல  நூறு வருடங்களுக்கு முன் பூமி அழிந்துவிடும் என்ற பயத்தினால் இங்கிருந்து வெளியேறிய அவனுடைய மூதாதையர் எங்கிருக்கின்றனர் என்று தெரிந்து கொள்ள நினைத்தான். அவர்களுடைய விண்கலங்களில் எரிபொருள் இருக்கும்வரை அந்த பயணம் தொடர்ந்திருக்கும். பிறகு என்னவாகி இருக்கும்?

எரிபொருள் தீர்ந்தபின் ஏதாவது புதிய கிரகத்தில் தரையிறங்கி இருக்கலாம். அது மனிதன் வாழும் தகுதியுடையதாக இருக்க வேண்டும்… அதிலும் ஒவ்வொரு விண்கலமும் வெவ்வேறு வேகம்… எரிபொருள் கொள்கலன் உடையவை… அவை ஒரே கிரகத்தில்தான் இருக்க வேண்டும் என்பது இல்லை! அவர்களை தேடும் முயற்சியில் குறுக்கீடுகள் இருந்தன.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் " ரிங்கா ரிங்கா ரோசஸ்..." - திகில் நிறைந்த பேய் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

காலக்டிக் பைரேட்ஸ் தொல்லை! அத்துடன் இந்த வேற்றுகிரகவாசிகள் வேறு… யாகாக்கள் ஒரு விதமான காமெடி தொல்லை என்றால்… ஆண்ட்ரமீடா ஏலியன்கள் கிரிமினல் ரகம்…

விஞ்ஞானத்தை மட்டுமல்ல மெய்ஞானத்தையும் பயன்படுத்தி தேடினான் அதற்காக இந்த குரு ஆன்ந்தமெய் சித்தரிடம் சிஷ்யனாக சேர்ந்து நிறைய தெரிந்து கொண்டான். இன்றைய அறிவியலையும் ஆன்மீக குறிப்புகளையும் இணைத்து முயற்சித்தான்.

ஒரு வழியாக அவன் தன்னுடைய தேடலை அடைந்து விட்டான்!. இப்போது அதில் அவன் வெற்றிபெற்று விட்டான்!. பூமியிலிருந்து 4.8 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் மின்வரோவை அடைந்து விட்டான்!. ஆனால் அதுபற்றி போதிய விளக்கம் தரமுடியாத நிலையில் இருக்கிறான். இருக்கட்டும்!

அவன் முதலில் நினைத்தது என்னவென்றால் அவனுக்கு வேற்றுகிரகவாசி தோழியாக கிடைத்திருக்கிறாள். அதுவும் அறிவியலில் பின்தங்கிய கிரகத்தை சேர்ந்தவள். அவனுடைய அறிவை வைத்து அவளுக்கு உதவ முடியும். அண்ணன் குடும்பத்தை பொறுப்பாக காப்பாற்றும்… தன் கிரகத்தை ஏலியன்களிடம் இருந்து காப்பாற்றும் எண்ணம் கொண்ட  நல்ல பெண்! துணிச்சலானவளும் கூட!. அவளுக்கு உதவுவதில் சிம்ஹனுக்கு எந்த தயக்கமும் இல்லை!

என்ன ஒன்று இந்த மானிட பெண்களைப்போல் வெட்க சிவப்பு கன்னத்தில் பரவவில்லை. நளினமாக  நிற்கவில்லை! அவனை இம்ப்ரஸ் செய்ய முயற்சிக்கவில்லை. தன்னுடைய தேடல்… தன்னுடைய பொறுப்பு என்று கவனமாக இருந்தாள். எனவே சிம்ஹனும் அஜினுடன் பழகுவதுபோலவே அவளிடம் சிநேகமாக  பழகினான்.

ஆனால் இப்போது குரு சொல்வதை கேட்கும்போது மனம் தடுமாறுகிறதே! ஏன் அப்படி? இன்னும் அவளுடன் சரியாக்கூட பழகவில்லை… அவளுடைய வாழ்க்கைமுறை தெரியாது! அவள் யாரிடமாவது கமிட் ஆகியிருக்கிறாளா…(அச்சோ ..ஏன் இந்த இதயம் படபடவென அடித்துக் கொள்கிறது?) என்றுகூட தெரியாது…

ஆனாலும் அவனுக்கு ஒன்று புரிந்தது… ஹனிகாவிற்கு அவனுடைய இதயத்தில் இடம் இருக்கிறது. அதனால்தான் குரு இடம்பெய்யர்ந்து சென்றவர்களைபற்றி சொல்லவும் ஹனிகாவின் நினைவு வந்து விட்டது. அவன் இந்த பதினெட்டு குரோமஸோம் கணக்கை மறந்து விட்டான்… மனித வழிதோன்றல் என்றால் இருபத்து மூன்று ஜோடி இருக்க வேண்டும் அல்லவா? அவள் வேறுதான் என்று முடிவெடுத்தான்!

அப்புறம் ஏன் இந்த க்ளுக்ளுவென்ற உணர்வு! ஹனிகா ஒரு மனிதப் பெண்ணாக இருக்கலாம் என்று நினைக்கும்போது  உற்சாகம் கூடி விசில் அடிக்கவும் தோன்றுகிறதே! ஒருவேளை இந்த ஆனந்தமைடு கட்டுபாடில்லாமல் மூளையில் சுரக்க ஆரம்பித்து விட்டதோ! அச்சோடா…

[ஆனந்தமைடு என்பது அமினோ அமிலம். மூளையில் உள்ள ரிஸப்டார்கள் இந்த அமைடு உள்வாங்கும்போது உற்சாகம் தோன்றுகிறதாம்… ஆனந்த அலை வீசுகிறதாம்! அதனால்தான்  இதற்கு ஆனந்தமைட் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். யெஸ் யெஸ் சமஸ்கிருத வார்த்தையைதான் வைத்திருக்கிறார்கள். ]

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 07 - சாகம்பரி குமார்saaru 2019-04-29 09:52
Mitti hani kita thoarka pora hoom .
Wonderful epiii dear
Epdi simhan hani ku udavaporanga waiting to readmore sagambari ji
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 07 - சாகம்பரி குமார்madhumathi9 2019-04-17 12:07
:clap: nice epi.egarly waiting to read more. (y) :thnkx: 4 this epi :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 07 - சாகம்பரி குமார்AdharvJo 2019-04-16 20:32
:clap: :clap: Interesting update ma'am!!
wow Misty-a super ah handle panuranga, why is she feeling so inferior abt hanika?
Yeah, waiting to see how our journey would be in zero terminal and how Mr Simhan would help her?? Indha aliens ellam ena pana pogudhu??
thank you and keep rocking Ms. Sagampari!! (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 07 - சாகம்பரி குமார்Sahithyaraj 2019-04-16 19:20
After reading this. I've started Googling reg. Space, shuttle, black holes etc. So interesting. Keep rocking sis. :dance: :clap: :hatsoff:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 07 - சாகம்பரி குமார்Jebamalar 2019-04-16 18:35
Nice epi... ஜீரோ டெர்மினல் அட்டாக் பற்றி தெரிந்து கொள்ள ஆவல்... Waiting for nxt epi... :clap:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top