Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 01 - சுபஸ்ரீ - 5.0 out of 5 based on 3 votes
Pin It

தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 01 - சுபஸ்ரீ

Ringa ringa roses

ரவு எட்டு மணி  திலக் சப்பாத்தியை பிட்டு குருமாவில் குளிப்பாட்டி வாயில் போட்டான். “உப்பு கொஞ்சம் ஜாஸ்தி” என முறையிட்டவனுக்கு “அப்படியாவது கொஞ்சம் ரோஷம் வரட்டுமே” காட்டமாக அம்மாவிடமிருந்து பதில் வந்தது.

திலக் பி.ஈ முடித்து இரண்டு வருடங்களாயிற்று. இன்னமும் வேலை தேடுவதையே தன் முழு நேர வேலையாக கொண்டவன். அப்பா சுவாமிநாதன் சுய பிஸ்னஸ். அம்மா மங்களம் வீடே உலகம்.. இவனின் ஒரே தங்கை அபர்ணா பி.ஈ கடைசி வருடம் படிக்கிறாள். நல்ல படிப்பாளி. அவளிடம் கர்வமும் திமிரும் கொட்டிக் கிடந்தது.

இவர்களோடு திலக்கின் அப்பாவின் மூத்த சகோதரர் சிவராமன் இங்கு வசிக்கிறார்.  

அவன் அப்பாவும் தங்கையும் வந்து டேபிளில் அமர “ராகுவும் கேதுவும் இன்னிக்கு கூட்டணியா . . செத்தடா நீ” என மனதில் நினைத்தபடி சப்பாத்தியை சாப்பிட்டபடி தன் செல்போனில் கவனம் செலுத்தினான்.

“திலக் உன் தங்கை உன்னவிட வயசுல சின்னவா . .” என அப்பா ஆரம்பித்தார்

கோபத்தை அடக்கியவன் “வயசுல சின்னவளா இருக்கறதனாலதான் தங்கை . . இல்லனா அக்காப்பா” என்றான் போனிலிருந்து கண்ணை எடுக்காமல்.

“இதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல . . படிச்சி முடிச்சி ரெண்டு வருஷம் ஆச்சு இன்னும் வேலைக்கு போகாம தண்டச்சோறு திங்கற . . உன் தங்க கேம்பஸ் இன்டர்வியூல செலக்ட் ஆயிட்டா . . இங்கிலீஷ்ல வெளுத்து வாங்குறா . . உனக்கு ரெண்டு வரி ஒழுங்கா இங்கிலீஷ் பேச தெரியுதா? ” என பேசிக் கொண்டிருந்தவரை இடைமறித்த திலக்

மனம் கொந்தளித்தது. வேலைக்குப் போக அவன் தயார்தான் ஆனால் கிடைத்தால்தானே. “இதபடி அபர்ணா” என தமிழ் நாளிதழை தன் தங்கை முன் திலக் நீட்டினான்.

“எனக்கு தமிழ் தெரியாது”  பெருமையாக தோளை குலுக்கியபடி சொன்னாள்.

சமையல் செய்துக் கொண்டிருந்த அங்கம்மாவை அழைத்தான் திலக் “இத படிங்கம்மா” அதே நாளிதழை தந்தான்.

“என்ன தம்பி எழுத படிக்க தெரியாத என்கிட்ட போய் காட்டுறீங்க” என சொல்லி நகர்ந்தாள் சமையல் செய்பவள்.

“ரெண்டு பேருக்கும் என்ன வித்தியாசம் இருக்கு?” என அப்பாவையும் தங்கையையும் பார்த்து ஏளன சிரிப்பை சிந்தினான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா வெயின் "மையலில் மனம் சாய்ந்த வேளை..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“அப்பபபா” கத்தினாள் அபர்ணா.

“டென்ஷன் ஆகாத தங்கச்சி . . ” என அழுத்தம்திருத்தமாக கடைசி வார்த்தையை உச்சரித்தான்.

“டேய் வேண்டா” என கடுப்பானாள் அபர்ணா

“நான் ஒரு கதை சொல்லட்டா” என ஆரம்பித்தான்

“மனசுல என்ன விஜய்சேதுபதினு நினைப்பா?”  திமிராக கேள்வியை கக்கினாள்.

“கதய கேளு முதல்ல . . . இங்கிலாந்துல பதினெட்டாம் செஞ்சுரி வாக்குல” ஆரம்பித்தவனுக்கு ”யேய்ய்யவ்” என  பெரிதாக ஏப்பம் நடுவில் குறுக்கிட இரு என செய்கை செய்தபடி தண்ணீரை குடித்தான்.

அவன் வேண்டுமென்றே இத்தனை பில்டப் கொடுக்கிறான் என அபர்ணாவிற்கு புரிந்துப் போயிற்று. எரிச்சலுடன் என்னதான் கதையளக்கப் போகிறான் என சாப்பிட்டபடி காத்திருந்தாள்.

திலக் தொடர்ந்தான் ”இங்கிலாந்துல பதினெட்டாம் செஞ்சுரி வாக்குல பிளேக் நோய்  நிறைய பேருக்கு வந்து செத்துப் போனாங்க. பிளேக் வந்தா உடம்புல வட்ட வட்டமா சிகப்பு நிறத்துல தடிப்புகள் மாதிரி வரும். அவங்களை பாதுகாத்துக்க பாய்செஸ்னு ஒரு மூலிகைய பயன்படுத்தினாங்க. அதான் நம்ம துளசி மாதிரி ஒரு மூலிகை அது. அந்த நோய் தீவிரமானா சளி பிடிக்கும் ஹச்சு ஹச்சுனு தும்முவாங்க கடைசியில செத்துடுவாங்க.”

இப்ப எதுக்கு இந்த கதை என்பதைப் போல  அபர்ணா கொலைவெறியோடு அவனை முறைக்க . .

“இறந்தவங்களுக்காக நாட்டுபுற ஒப்பாரி பாட்டு ஒண்ணு எழுதினாங்க” என்றவன் சற்றே நிறுத்தி “அந்த ஒப்பாரி பாட்டு எது தெரியுமா?” என அவளைப் பார்த்துக் கேட்க . .

அவள் எதுவும் சொல்லாமல் முறைத்தபடி இருந்தாள். “ஹே உனக்கு ரொம்ப நல்லா தெரியும். அப்பா அம்மாக்கு கூட தெரியும்” என அவர்களை பார்த்தான்.

இருவரும் குழப்பமாக பார்த்தனர்.

சரி நானே சொல்லிடறேன் . .

“ரிங் ஆப் ரிங் ஆப் ரேஷஸ்

பாக்கெட் புல் ஆப் போசீஸ்

அ டிஷ்யூ அ டிஷ்யூ

வி ஆல் பால் டவுன்”

ராகத்தோடு பாடினான் அனைவருக்கும் தெரிந்த ராகத்தில்.

“இதுதான் காலப் போக்குல வார்த்தைகள்  மாறி

“ரிங்கா ரிங்கா ரோசஸ்

பாக்கெட் புல் ஆப் போசீஸ்

அஷ்ஷா புஷ்ஷா

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Subhasree

Completed Stories
On-going Stories

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 01 - சுபஸ்ரீAdharvJo 2019-04-16 20:46
Interesting start sis and indha ringa ringa roses-ku pinadi ippadi oru history ya facepalm enoda favrt rhyme!! (rombha easy one illaingala adhanala :P )

:eek: starting-a sangu udhurangale sis :sad: idhu real diamond thano :Q: periyyappa sonna mathiri diamond ivangalukk lucky agalayo :Q:
waiting to read next update. thank you and keep rocking :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 01 - சுபஸ்ரீVasan 2019-04-16 19:21
Hi sis
Rhymes related solli irupathu
Unmaya?
Reply | Reply with quote | Quote
+1 # GoodSagar 2019-04-16 18:44
Superb start (y)
Dialogues are so natural & trendy
Different story.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 01 - சுபஸ்ரீSrivi 2019-04-16 12:35
Aaha..ennadhu idhu..aarambame thigila irukku.. Good start sis..
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 01 - சுபஸ்ரீmadhumathi9 2019-04-16 12:02
:Q: nadanthathu kanavaa?nalla thodakkam. (y) :clap: adutha epila eppadi poguthunnu paarppom.waiting to read more. :thnkx: (y)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top