(Reading time: 11 - 21 minutes)

“சக்தி மேலதான் முழு தப்பும்ன்னு நாங்க வெளிப்படையா சொல்றோம்மா... உங்க பொண்ணுக்கு எந்த பாதகமும் வராத அளவுக்கு நாங்க பார்த்துக்கறோம்... இவங்க பேசறது  எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான்... அடுத்த ஒரு சென்சேஷனல் நியூஸ் வந்தா அதுக்கு தாவிடுவாங்க... அதனால கவலைப்படாதீங்க....”

“உங்களுக்கு வேணா இந்த மாதிரி விஷயம் எல்லாம் சாதாரணமா இருக்கலாம்... நீங்க பெரிய அந்தஸ்த்துல இருக்கறவா.... ஆனா எங்களை மாதிரி நடுத்தற, சாதாரண  குடும்பத்துக்கு இல்லை... நாங்க ரெண்டு பொம்மனாட்டி இங்க தனியா இருக்கோம்... இங்க இருந்து இப்போ கிளம்பி போய் எப்படி எங்க தெருவுல இருக்கறவாளை பார்க்கப்போறோம் அப்படிங்கறதை நினைச்சாலே மலைப்பா இருக்கு....”

“சரிம்மா இப்போ என்ன சொல்றீங்க... இந்த கல்யாணத்தை ஒத்துக்கறீங்களா....”

சக்தியின் அன்னை கேட்க என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தார் காயத்ரியின் அன்னை... அங்கிருந்த அனைவருக்கும் அவர்களை பார்க்க மிகப் பரிதாபமாக இருந்தது.... எந்தவித சலசலப்பும் இல்லாமல் அமைதியாக சென்று கொண்டிருக்கும் வாழ்வில் திடீரென்று இதுபோல் நிகழ்ந்தால்....

“நேக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை... நாங்க இப்போ கிளம்பி எங்காத்துக்கு போறோம்... நான் என் பையனை உடனே கிளம்பி வர சொல்றேன்... அவன் வந்து அவனோட கலந்து பேசிட்டு எதுவா இருந்தாலும் உங்களுக்கு சொல்றேன்....”

“ஆன்ட்டி என்னை மன்னிச்சுருங்க... நான் பண்ணினது பெரிய தப்புதான்... உங்க யார்க்கிட்டயும் அனுமதி கேட்காம திடீர்ன்னு இந்த மாதிரி பண்ணி இருக்க கூடாது... ஆனா எனக்கு வேற வழி தெரியலை... அந்த நேரத்துல அவன் கிட்ட இருந்து காயத்ரியை காப்பாத்த இந்த ஒரு வழிதான் இருந்தது... எங்கம்மா கேட்டாங்க இல்லை... நாளைக்கு வேற ஒரு பெண்ணை அவன் கல்யாணம் பண்ணினால் அப்போவும் போய் அந்த பெண்ணை கட்டிப்பியான்னு... கண்டிப்பா இல்லை... உங்க பெண்ணை மனசார விரும்பினதாலதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...”, சக்தி சொல்ல அடப்பாவி என்பதுபோல் அனைவரும் அவனை பார்த்தார்கள்...

“முதல்முறை காயத்ரியை சந்தியாகூட பார்க்கும்போதே எனக்கு பிடிச்சு இருந்தது... ஆனா கண்டிப்பா எங்க ரெண்டு பேருக்கும் இருக்கற வேறுபாடுகளால இந்த கல்யாணத்துக்கு உங்க சைடுலேர்ந்து அனுமதி கிடைக்காதுன்னு தெரியும்... அதனால அவக்கிட்ட லவ் சொல்லாம ஒதுங்கிட்டேன்... ஆனா எப்போ அந்த மனோஜ் காயத்ரி மேல கண்ணு வச்சிட்டானோ அதுக்கப்பறம் என்னால சும்மா இருக்க முடியலை... அவன் ஒரு காலை சுத்தின பாம்பு கண்டிப்பா கடிக்காம விடமாட்டான்... காயத்ரி தப்பானவன் கைல மாட்டக்கூடாதுன்னுதான் நான் அவளுக்கு தாலி கட்டினேன்... உங்களோட ஆதங்கமும், பயமும் எனக்கு புரியுது... ஆனா வேற வழி இல்லை... நீங்க இந்த கல்யாணத்தை ஒத்துக்கிட்டுதான் ஆகணும்... அதே மாதிரி நீங்க ரெண்டு பேருமே இங்க எங்ககூடத்தான் இன்னும் கொஞ்ச நாள் இருந்தாகணும்...”, சக்தி சொல்ல காயத்ரியும், அவள் அன்னையும் அவனை அதிர்ந்து பார்த்தார்கள்...

“ஏய் சக்தி.... என்னடா பேசற... நீ அந்தப் பொண்ணை காதலிச்ச... அதனால கட்டிக்கிட்ட... உனக்கு அவக்கூட இருக்கறது கஷ்டம் இல்லை... ஆனா அந்த பொண்ணை யோசிச்சு பார்த்தியா... இதுல அவங்க அம்மாவையும் சேர்ந்து இங்க இருக்க சொல்ற....”

“எனக்கு வேற வழி தெரியலைம்மா... ஆன்ட்டி நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க....”, சக்தி பேச பேச அனைவரும் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தார்கள்....

“நீ சொல்றதெல்லாம் பார்த்தா இது ரொம்ப பெரிய விஷயமா இருக்கும் போல இருக்கே சக்தி...”

“ஆமாம்மா அதுனாலதான் இவங்களை இப்போ வெளிய தனியா விடுறது நல்லதில்லைன்னு சொல்றேன்....”

“ஹ்ம்ம் புரியுது... நீங்க என்ன சொல்றீங்கம்மா...”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

Chillzee Special "ஐ லவ் யூ" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“ஆன்ட்டி உங்களுக்கு எங்க வீட்டுல எங்க கூட இருக்க சங்கடமா இருக்கும்.... எனக்கு புரியுது... அதனால நீங்க மேல இரண்டாவது தளம் முழுக்க எடுத்துக்கோங்க... அங்க நாங்க யாரும் வரமாட்டோம்.... நீங்க தனியா இருந்தா மாதிரியும் இருக்கும்... அதே நேரத்துல எங்க கண்ணுக்கு முன்னாடியும் இருப்பீங்க....”

“நீங்க சொன்னதெல்லாம் கேட்ட பிறகு எங்களுக்கும் வேற வழி தெரியலை... ஆனா காயத்ரியோட படிப்பு....”

“அது பத்தின கவலை வேண்டாம்... நானே அவளை காலேஜ் விட்டுட்டு கூட்டிட்டு வரேன்... அதுவும் இல்லாம அவ இப்போ மத்திய அமைச்சர் மருமக... அவ மேல கை வச்சா என்ன ஆகும்ன்னு அந்த மனோஜ்க்கு தெரியும், அதனால அவளை தொந்தரவு பண்ண மாட்டான்...”

“டேய் இந்த ரெண்டு சைக்கிள்க்கு நடுவுல ஆட்டோ ஓட்டற வேலையே வேணாம்... அவளை எப்படி பாதுகாப்பா படிக்க அனுப்பறது அப்படிங்கறதை நாங்க பார்த்துக்கறோம்... இங்க தங்கத்தான் ஓகே சொல்லி இருக்காங்களே தவிர, உன்னை கல்யாணம் பண்ணினதுக்கு இல்லை... என்னைக்கு காயத்ரி உனக்கு ஓகே சொல்றாளோ அது பின்னாடிதான் நீ அவக்கூட பேசற... அது இல்லாம தேவை இல்லாம அவளை தொந்தரவு பண்ணினேன்னு வச்சிக்க, உள்ளாற வச்ச அரிவாளை நான் தூக்க வேண்டியதா போய்டும்....”

சக்தியின் அன்னை சொல்ல, வட போச்சே லுக்கை சந்தியாவும், சக்தியும் பரிமாறிக்கொண்டார்கள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.