யாதவி குளித்துக் கொண்டிருக்கும் போதே சமையலை முடித்த ரத்னா, மகளுக்கும் தனக்கும் சாப்பாடை டப்பாவில் அடைத்தவர், தனக்கு மட்டும் கொஞ்சம் ஊறுகாய் எடுத்துக் கொண்டு, மகளுக்கு முட்டையில் ஆம்லெட் போடலாம் என்றால், வாங்கி வைத்த முட்டை தீர்ந்து போனதை பார்த்து, அவர்கள் வீட்டிற்கு ரெண்டு வீடு தள்ளி இருக்கும் கடையில் முட்டை வாங்கச் சென்றார்.
“மொத்த விலை கடைக்கு போனால் இங்கு வாங்குவதை விட ஒரு ரூபாய் குறைவாக இருக்கும், மொத்தமாக பத்து முட்டையாக வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும், அதையும் அந்த மனுஷனுக்கு தெரியாமல் வைக்க வேண்டும், இல்லையென்றால் குடிக்க தொட்டுக்க என்ன இருக்கு என்று பார்த்து, நாலைந்து முட்டையை மொத்தமாக பொறிச்சு சாப்பிட்டுவிடுவார்.
இப்போ முட்டை விக்கிற விலை அவருக்கு என்ன தெரியும்? எப்பயாச்சும் தான் வேலைக்கு போறது.. போனாலும் சம்பாதிச்ச காசை வீட்டு செலவுக்கு கொடுக்காம, குடி, ரேஸ்னு செலவு செஞ்சிட்டு வர்றது.. ஆனா வீட்ல வக்கணையா சமைச்சு வைக்கணும்.. அதுக்கு காசுக்கு எங்க போவேன்..” என்று புலம்பியப்படியே கடைக்குச் சென்றார்.
மனைவி இப்படி வீட்டை விட்டு வெளியேறியதும் பன்னீர் மகளை தேடி வர, அவளோ அப்போது தான் குளித்துவிட்டு வந்து முக அலங்காரம் செய்து கொண்டிருந்தாள்.
“யதும்மா..” என்ற அவரது செல்ல அழைப்பிலேயே அவர் எதற்காக அழைக்கிறார் என்பதை அவள் தெரிந்துக் கொண்டாள்.
“என்ன வேணும் ப்பா..”
“யதும்மா இன்னைக்கு தயாரிப்பாளர் வசந்தன் பாண்டிச்சேரிக்கு வந்திருக்காராம்.. அவரை பார்க்க அப்பாயின்மெண்ட் கூட வாங்கிட்டேன்.. சாயந்தரம் காலேஜ்ல இருந்து சீக்கிரம் வந்தா போய் பார்த்துட்டு வரலாம் வர்றியா?”
“இல்ல நான் வர மாட்டேன்.. போனமுறை நான் வந்தா எனக்கு அனார்கலி புல் சுடிதார் வாங்கித்தரணும்னு சொன்னேனா இல்லையா? ஆனா இதுவரைக்கும் நீ வாங்கித் தரவே இல்லை..”
“ரெண்டுமுறை ரேஸ்க்கு போய் நஷ்டம் தாண்டா யதும்மா.. அடுத்த முறை கண்டிப்பா விட்டத பிடிச்சிடுவேன்.. அப்போ அப்பா உனக்கு சுடிதார் வாங்கித் தரேன்..”
“இல்லை எனக்கு இப்போ அந்த சுடிதார் வேண்டாம்.. அதுக்கு பதிலா புதுசா லெகங்கான்னு ஒரு ட்ரஸ் வந்திருக்கு.. கிராண்டா வாங்கணும்னா எப்படியும் 4,000 ஆகும் வாங்கித் தர்றீயா?”
“கண்டிப்பா வாங்கித் தரேன்.. அப்போ சாயந்தரம் என்கூட வருவல்ல..”
“சாயந்தரம் கடைசி பீரியட் கட் அடிச்சிட்டு வரேன்.. காலேஜ் பக்கம் வந்து நில்லு..”
“என் தங்கம்.. வசந்தனுக்கு மட்டும் உன்னை பிடிச்சிட்டா நீ அவரோட அடுத்த படத்தில் ஹீரோயினி தான்.. சரி அம்மாக்கிட்ட இதைப்பத்தி சொல்லிடாத..” என்று சொல்லிக் கொண்டிருந்த போதே ரத்னா கடைக்கு போனவர் வீட்டுக்குள் நுழந்தார்.
கணவனும் மகளும் பேசியது அவருக்கு கேட்கவில்லையென்றாலும் இருவரும் ஒன்றாக நிற்பதை பார்த்தே அவருக்கு உள்ளுக்குள் பயம் வந்தது.
மனைவியின் அரவம் தெரிந்ததும் பன்னீர் அங்கிருந்து சென்றுவிட, “அந்த மனுஷன் என்னடி உன்கிட்ட சொன்னாரு..” என்று ரத்னா யாதவியிடம் கேட்க,
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
“உன்னை காணுமேன்னு கேட்டாரும்மா..” என்று யாதவியும் சமாளித்தாள்.
ஆனாலும் ரத்னா யாதவி சொன்னதை நம்பவில்லை. “இங்கப்பாரு காலேஜ் போனோமா வீடு வந்தோமான்னு இருக்கணும்.. அதைவிட்டுட்டு அந்த மனுஷன் கூப்பிட்டாருன்னு எங்கேயாச்சும் போன அப்புறம் என்ன நடக்கும்னு எனக்கு தெரியாது.. அப்புறம் உங்கம்மாவை வேற மாதிரி தான் பார்ப்ப புரிஞ்சுதா?” என்று மிரட்டியவர்,
வேகமாக ஒரு ஆம்லெட்டை போட்டு அதையும் டப்பாவில் வைத்து யாதவியிடம் கொடுத்து, “ம்ம் மணியாகுது பார் சீக்கிரம் கிளம்பு..” என்று அவசரப்படுத்தினார்.
“அம்மா முதல் செமஸ்டர் எக்சாம் வரப்போகுது.. அதுக்கு எக்சாம் பீஸ் கட்டணும்..” என்றவள், அந்த தொகையை சொல்லிக் கேட்க,
“இவ்வளவு ஆகுமா? சரி ஏற்பாடு செய்றேன்.. அந்த மனுஷன்க்கிட்ட இது வேணும் அது வேணும்னு கேட்டு ட்ர்ஸ், கவரிங் நகைன்னு வாங்கிறியே, அதுக்கு பதிலா பணமா கேட்டு வாங்கலாம் இல்ல..” என்று ரத்னா கேட்க,
“ஆமாம் அவரு சும்மா தூக்கி கொடுத்துட்டாலும், அதுவும் பணமா? அவர் எங்க கூப்பிட்டாலும் போகாதன்னு சொல்ற.. அப்புறம் அவர்க்கிட்ட கேளுன்னு சொல்ற..” என்று அவள் கேட்க,
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சசிரேகாவின் "என் வாழ்வே உன்னோடு தான்..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
“அம்மா தாயே நீ அவர்க்கிட்ட எதுவும் கேக்கவும் வேண்டாம்.. அவர் கூப்பிட்டா எங்கேயும் போகவும் வேண்டாம்.. ஒழுங்கா காலேஜ்க்கு போ.. நான் பணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன்..” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
அதன்பின் “இனி இந்த டைரக்டரை பார்க்கிறேன்.. அந்த ப்ரோட்யூசரை பார்க்கிறேன்னு பிள்ளையை எங்கேயாச்சும் அழைச்சிட்டு போன.. என்னை மனுஷியா பார்க்க மாட்ட சொல்லிட்டேன்.. நமக்கு இந்த சினிமால்லாம் ஒத்து வராது, அதனால பிள்ளையை நிம்மதியா படிக்க விடு.. இந்த சினிமாக்குள்ள போனா நம்ம பொண்ணு வாழ்க்கையே நாசமாகிடும்.. சொல்றதை புரிஞ்சு நடந்துக்கோ..” என்று பன்னீரிடம் புலம்பிய ரத்னா அவரை நன்றாக திட்டி தீர்த்துக் கொண்டிருந்தார்.
ஆனால் அதையெல்லாம் பன்னீர் பொருட்டாகவே நினைக்க மாட்டார். தன் நண்பன் பூபதி அவன் மகளை கதாநாயகியாக ஆக்கியது போல், அழகாக, வெள்ளையாக, பதுமை போல் இருக்கும் தன் மகளையும் கதாநாயகியாக ஆக்க வேண்டும் என்ற வெறியோடு இருந்தார். அப்போது தானே அவரும் சுகபோகமாக வாழலாம்.
கணவன் சம்பாதிக்காமல் பொறுப்பில்லாமல் சுற்றி கொண்டிருந்தாலும், ஒரு ஆண் துணை வேண்டுமே என்று தான் ரத்னா பன்னீரின் எத்தனையோ செயல்களை பொறுத்து போய் கொண்டிருக்கிறாள். ஆனால் இப்போது யாதவியை நடிகையாக்க வேண்டுமென்ற வெறியோடு இருப்பதை அறிந்த ரத்னாவிற்கு இப்போதெல்லாம் பயத்தில் நன்றாக உறக்கம் கூட வருவதில்லை.
யாதவியாவது புரிந்து நடந்துக் கொண்டால் பரவாயில்லை. ஆனால் குடும்ப வறுமை காரணமாக யாதவிக்கு இருக்கும் சின்ன சின்ன ஆசைகளை ரத்னா நிராகரிப்பதால், தந்தையிடம் அதை லஞ்சமாக பெற்றுக் கொண்டு அவள் பன்னீருக்கு ஒத்துழைப்பு கொடுப்பதால், யாதவியின் எதிர்காலம் குறித்த கவலை ரத்னாவிற்கு பெரிதாக இருந்தது. மனதில் பாரம் ஏற வேலைக்கு கிளம்பிச் சென்றார்.
மையல் தொடரும்..
Go to Maiyalil manam saaintha velai story main page
{kunena_discuss:1211}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.