(Reading time: 8 - 16 minutes)

தொடர்கதை - எனதுயிரே - 10 - மஹா

enathuyire

ரீட்சை முடிந்து வெளியே வந்த ராம் கண்கள் சிவக்க நின்றுகொண்டிருந்த சீதாவை பார்த்து பதறியவன்,

"என்ன சீதா? என்ன ஆச்சி? ஏன் ஒரு மாதிரி இருக்க?"

"..."

"எக்ஸாம் நல்ல பண்ணலயா?"

"ராம்..."

"ம்..."

"ஏன்? என்னனு? கேக்காம என் கூட கொஞ்சம் வெளிய வரியா?"

ராமின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ரகு ஒன்றும் புரியாமல் பார்த்தான். ஒரு தீவிர பார்வையை அவள் மீது செலுத்திய ராம்,

"சரி சீதா. டேய் ரகு... நம்ம ப்ராஜெக்ட் பத்தி நீயே நம்ம சார் கிட்ட எஸ்பிளேன் பண்ணிடு டா. நா போய் என் பாக் வந்துடறேன் சீதா", என்றான்.

அவன் வருவதற்குள் ரகுவிடம் அனைத்தையும் கூறியவள் ராம் அருகில் வருவதை உணர்ந்து தன் கண்களை வேகமாக துடைத்துக்கொண்டு,

"வா ராம் போலாம்" என்று அவனை அழைத்துக்கொண்டு வெளியே ரெடி ஆக இருந்த டாக்ஸியில் ஏற சென்றவளை வழி மரித்த க்ரிஷ்,

"சீதா... எங்க போற?" என்றான் கோவமாக.

"வழிய விடு க்ரிஷ்" என்றாள் அழுத்தமான குரலில்.

"முடியாது. மொதல்ல நா கேட்டதுக்கு பதில் சொல்லு?"

"அத உங்கிட்ட சொல்லணுமிங்கிற அவசியம் எனக்கில்ல. நா அவசரமா போனும் வழிய விடு க்ரிஷ்", என்றாள் காட்டமாக.

"என்ன சொன்ன? அவசியம் இல்லையா?. நீ இனிமே எங்க போணும்னாலும் அதுக்கு பெர்மிஸ்ஸின் கேக்கணும் ஏன்னா உனக்கும் எனக்கும் வீட்ல கல்யாணம் முடிவு பண்ணிருக்காங்க. இப்போ சொல்லு, எங்க இவ்ளோ அவசரமா அதுவும் இவன் கூட போற?" என்று ராமை முறைத்து கொண்டே கேட்டான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவள் க்ரிஷியின் பேச்சை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த போதும் நிலமை உணர்ந்தவளாக தன்னை உடனே சரி செய்துகொண்டு, "அது நடக்கும் போது பார்த்து கொள்ளலாம். இப்போ நான் என் அம்மா அப்பாவோட பொண்ணு அவ்ளோ தான். நா ஏன் போறேன்? எங்க போறேன்? இதுலாம் என் அப்பாகிட்ட சொல்லிட்டேன். வழிய விடு என்றவள் ராமின் கையை பிடித்து கொண்டு க்ரிஷ்-ஐ தாண்டி டாக்ஸியில் ஏறி சென்றாள்.

கோவத்தில் தரையை உதைத்தவன் அருகில் வந்த அவனது நண்பர்கள் "என்ன டா மச்சான் இது?. அவன் கைய புடிச்சிட்டு போய்ட்டா" என்று க்ரிஷ்-ஐ உசுப்பேற்றினார்கள்.

காரில் ஏறி உட்காந்ததில் இருந்து ஏர்போர்ட் வந்து சேரும் வரையிலும் அவனது கையை விடவே இல்லை அவள். ராமிற்கு ஏதோ ஒன்று சரி இல்லை என்று மட்டும் தோன்றியது.

ஆனால் என்னவென்று அவனால் யூகிக்க முடியவில்லை. கார் ஏர்போர்ட்டிற்குள் நுழைந்ததும் மேலும் குழம்பியவன் யாரையேனும் அழைத்து செல்ல வந்திருக்கோமோ? என்று யூகித்துக்கொண்டிருக்கையில்,

"வா ராம்..." என்று அவனை அழைத்து கொண்டு ஏர்போர்ட்டிற்குள் சென்றாள். ஒன்றும் புரியவில்லை என்றாலும் அவளின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து ஏன்? என்ன? என்று கேட்காமல் அவளை பின்தொடர்ந்தான். ஆனால் அவனின் இந்த மனநிலை அடுத்த அறிவிப்பு வரும் வரையே நீடித்தது. அந்த அறிவிப்பின் மூலம் அவன் விமானம் மூலம் திருச்சி பயணிக்க போகிறான் என்று அறிந்து கொண்டான். ஏன் என்றே தெரியாமல் ஒருவகை பதற்றம் அவனுள் குடியேறியது. இதை கவனித்த சீதா அருகில் இருக்கும் நாற்காலியில் அவனை அமர்த்தி அவனது இரு கைகளையும் தன் உள்ளங்கையில் வைத்து கொண்டாள்.

"ராம்... நா சொல்றத தைரியமா கேக்கணும்..."

"என்னனு சொல்லு சீதா எனக்கு ரொம்ப பயமா இருக்கு"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "கலாபக் காதலா..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

"ராம்... உன்னோட அப்பா..."

"அப்பா... என் அப்பாக்கு என்ன?"

"சடன் ஆஹ் ஹார்ட் அட்டாக்... அவர் நம்மள விட்டு..." என்று கூற முடியாமல் வார்த்தையை மென்று முழுங்கியவளுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

உணர்ச்சியற்ற பார்வையை அவள் மீது செலுத்தியவன் அப்படியே இடிந்து போய் அமர்ந்திருந்தான். அவன் அழுது புலம்பி இருந்தால் கூட பரவாயில்லை ஆனால் அவனின் மௌனம் அவளுக்கு பயத்தை ஏற்படுத்தியது. விமானத்தில் எறியதில் இருந்து வீடு வந்து சேரும் வரையிலும் அவனிடம் எந்த மாற்றமும் இல்லை. மௌனம் மட்டுமே குடி கொண்டது. தனது ராமின் நிலையை கண்டவளுக்கு கண்ணில் கண்ணீர் தளும்பியது. அவனுக்கு ஆறுதலாக "நான் இருக்கிறேன்" என்று உணர்த்த நினைத்தவள் அவனின் கையை விடாமல் அழுந்த பற்றிக்கொண்டாள். ஆனால் இவை எதையும் புரிந்து கொள்ளும் நிலையில் அவனில்லை.

அவன் வீடு வந்து சேர்ந்ததும் அங்கு நின்றுகொண்டிருந்த கூட்டமே அவனுக்கு சீதா கூறிய அனைத்தும் உண்மை தான் என்று உணர்த்தியது. அது தவறான தகவல் என்று யாரேனும் கூறிவிட மாட்டார்களா என்ற அவனது ஆசை அங்கேயே நிராசை ஆக மாறிவிட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.