(Reading time: 8 - 16 minutes)

"அப்பா... எழுந்துருங்க பா...ப்ளீஸ் பா..." என்று அவனின் தங்கை கயல் தனது அப்பாவின் உடலை உலுக்கி கதறியதை கண்ட போதும், அவனை கண்டதும் ஓடி வந்து அவனை அணைத்து கொண்டு அழுத அவனின் தாயை பார்த்த போதும் ஒரு துளி நீர் கூட அவனின் கண்களில் இருந்து வெளிவரவில்லை. இறுகிய முகத்துடன் அமைதியாகவே நின்றிருந்தான். இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த சீதாவுக்கு மனம் கனத்தது. அழுது தீர்த்துக்கொண்டிருந்தாள். அணைத்து சடங்கும் முடிந்து உடல் தகனமும் செய்தாகி விட்டது ஆனால் ராமிடம் ஒரு மாற்றமுமில்லை.

அன்றிரவு அவன் வீட்டின் பின்னால் இருக்கும் தோட்டத்தை வெறித்துக்கொண்டு திண்ணையில் அமர்ந்திருந்தான். அவனை தேடி வந்த சீதா அவனை அங்கு கண்டதும் அவனிடம் சென்றாள்.

"ராம்..." என்று அவன் தோல் மீது கைவைத்து அழைத்தாள். ஆறுதல் தேடி ஏங்கிக்கொண்டிருந்த மனம் அவள் தொடுகையில் அனைத்தையும் மறந்து ஆறுதலுக்கு ஏங்கும் சிறு பிள்ளை போல் அவளின் இடையில் முகம் புதைத்து அழ ஆரம்பித்துவிட்டான். அவனின் தலையை ஆறுதலாய் கோதியவள்,

"நல்ல அழுதுடு ராம்... மனசுல இருக்க எல்லா வலியையும் அழுது தீர்த்திடு." என்றாள். அவன் முழுதாய் அழுது தீர்க்கும் வரை காத்திருந்தவள் அவனின் அருகில் அமர்ந்து அவன் தலையை தன் மடி மீது வைத்தாள்,

"ராம்... நீயே இப்டி இடிஞ்சி போய்ட்டா அம்மாக்கும் உன் தங்கச்சிக்கும் யார் தைரியம் சொல்லுவா?. இனிமே நீ தான் உன் அப்பாவோட இடத்துல இருந்து அவங்களுக்கு எல்லாம் செய்யணும். உங்க அம்மா தன்னோட வாழ்க்கை துணையை இழந்து இருகாங்க. அவங்களுக்கு இது பெரிய இழப்பு. அவங்கள நீ தான் அதிலிருந்து மீட்டு நம்பிக்கை குடுத்து வெளிய கொண்டு வரணும். அப்புறம், கயல் சின்ன பொண்ணு. அவளுக்கு நீ தான் நல்ல வழிகாட்டியா இருக்கனும். ஒரு அண்ணனா நீ அவளுக்கு செய்ய வேண்டிய கடமைகளும் பொறுப்பும் நெறய இருக்கு. இனிமே நீ அவளுக்கு வெறும் அண்ணனா மட்டும் இல்லாம அவளுக்கு அப்பவாவும் நீ இருக்கனும். இப்டி இவ்ளோ விஷயம் இருக்கும் போது நீயே இப்டி உக்காந்துஇருந்த அவங்கள யாரு சமாதான படுத்துறது?".

கண்ணீர் வழிய அவளை பார்த்தவன் எழுந்தமர்ந்து அவளின் கண்களை நேராக சந்தித்தவன்,

"நீ என் கூடவே இருந்தா என்னால எதையும் செய்ய முடியும். நீ என் கூடவே இருக்கியா சீதா?"

அவள் இத்தனை நாள் அவனிடமிருந்து கேட்க வேண்டும் என்று நினைத்த அதே வார்த்தைகள் இன்று அவளிடம் வந்து சேர்ந்தது. அவள் கண்களில் இருந்து சந்தோஷத்தில் கண்ணீர் வழிய ஆம் என்பது போல் தலை அசைத்தவள்,

"கண்டிப்பா ராம்... என் கடைசி மூச்சி வரைக்கும் மட்டுமில்ல. ஒரு வேல நா இறந்துட்டா கூட நா உன்னையே தான் சுத்தி சுத்தி வருவேன். அவ்ளோ புடிக்கும் ராம் உன்ன." என்று அவனை அணைத்து கொண்டாள்.

"தெரியும்"

"என்ன தெரியும்?"

"உனக்கு என்ன ரொம்ப பிடிக்கும்னு"

"எப்படி?"

"நம்ம farewell day அன்னைக்கு, அஞ்சு உன்னையும் என்னையும் சேத்து வச்சி கிண்டல் பண்ணது அதுக்கு நீ வெட்க பட்டு சிரிச்சது எல்லாத்தையும் நா பாத்தேன். அப்போவே உனக்கு என் மேல நட்பையும் தாண்டி காதல் உணர்வு இருக்குனு தெரிஞ்சிகிட்டேன். ஆனா அப்போ நா அத ஏத்துக்கற மனநிலைல இல்ல. என் குடும்ப சூழ்நிலை, எங்களை விட வசதியில ரொம்ப உயரத்துல இருக்க உன் குடும்பம் இதுல என்ன ரொம்ப பயம்புடுத்துச்சி.  நீயும் வந்து என் மேல உள்ள காதலை என் கிட்ட சொல்லல. நல்லதா போச்சுன்னு நானும் அத அப்டியே எனக்கு தெரியாத மாதிரியே விட்டுட்டேன். ஆனா இன்னைக்கி எனக்காக நீ இங்க வந்தது என் கூடவே இருந்து எல்லாத்துலயும் எனக்கு உதவி செஞ்சது ஆறுதலா இருந்தது இதுலாம் என்ன உன் பக்கம் ஈர்க்க வச்சிது. அந்த உரிமையில தான் நா உன்ன கட்டிப்பிடிச்சு அழுதேன். நீ என் பக்கத்துல இருக்கறது எனக்கு பெரிய தைரியத்தை தருது. என் கூடவே இருப்ப ல எப்பவும்? என்று குழந்தை போல் கேட்டவனை "எப்பவும் இருப்பேன் உனக்காக" என்று மீண்டும் அணைத்து கொண்டாள்.

நெஞ்சோடு கலந்திடு உறவாலே

காலங்கள் மறந்திடு அன்பே...

நிலவோடு தென்றலும் வரும் வேலை

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "காணாய் கண்ணே..." - காதல் & சரித்திரம் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

காயங்கள் மறந்திடு அன்பே...

ஒரு பார்வை பார்த்து நான் நின்றால்

சிறு பூவாக நீ மலர்வாயே

ஒரு வார்த்தை இங்கு நான் சொன்னால்

வலி போகும் என் அன்பே அன்பே...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.