(Reading time: 11 - 21 minutes)

தொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 04 - குருராஜன்

Enakena yerkanave piranthavan ivano

கு, வெண்ணிலா இருவரும் அவரவர் படுக்கையில் சாய்ந்தனர். அன்று அவர்களுடைய பெற்றோருடன் நடந்த அந்த விவாதம் அவர்கள் மனம் முழுக்க நிறைந்திருந்தது.

இருவர் மனதிற்க்குல்லும் “நம்ம அப்பா அம்மா சொல்றதும் correct தான். அவங்க கவலைக்குக் காரணம் நம்ம மேல இருக்கிற அக்கறைதான். ஆனாலும் நம்ம வாழ்க்கை விஷயம். அதில் நாம் compromise பண்ணிக்க முடியாது. இந்த ஒரு வருடத்தில் எப்படியாவது என் மனசுக்கு பிடிச்ச துணையா சந்திச்சிடனும்”.

அப்படி சந்திக்கலனா?

அந்த கேள்வியோடு இருவரும் உறங்கி போயினர்.

அடுத்த ஒரு வருடம் ஒரு வாரம் போல் ஓடிப் போனது. நிலா, ரகு இருவருக்கும் இந்த ஒரு வருடம் நன்றாகவே சென்றது.

ஆனால் அவர்கள் காதல் வாழ்க்கையில் மட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. முதல் சில நாட்களுக்கு அவர்களுக்கு அவர்கள் பெற்றோரின் condition ஞாபகம் இருந்தது. போகப் போக அது மறந்து போனது.

அவர்கள் மறக்கலாம், ஆனால் அவர்களைப் பெற்றவர்களுக்கு மறந்து போகுமா. தெரிந்த சொந்த பந்தங்கள் மூலம் தன் பிள்ளைகளுக்கு வரன் தேடிக் கொண்டுதான் இருந்தார்கள்.

“என்னங்க, அது வந்து” பேச வந்ததை இழுத்தார் சிவகாமி.

“என்ன சிவகாமி என்ன விசயம்.” என்றார் சங்கர்.

“நம்ம பொண்ணு கல்யாண விசயமா” என்று இழுத்தார் சிவகாமி.

“எனக்கும் நினைவு இருக்கிறது சிவகாமி. ஆனா நம்ம பொண்ணு மனசுல என்ன இருக்குனு எப்படிக் கண்டு பிடிக்கிறது. நம்ம பொண்ணுக்கு யாரையாவது பிடிச்சிருந்தா, அதை அவ சொல்லாம நாம எப்படி தெரிஞ்சிக்கிறது” என்றார் சங்கர்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“இல்லங்க, நானும் அவளை கவனிச்சிட்டுதான் வரேன். அவளுக்குக் காதலோ, இல்ல அதற்கான விருப்பமோ இருக்கிற மாதிரி தெரியல. நாம்தான் அடுத்த கட்ட முடிவு எடுக்கனும்” என்றார் சிவகாமி.

“நீ சொல்ற மாதிரிதான் எனக்கு தோனுது. இருந்தாலும்” என்று இழுத்தார் சங்கர்.

“எனக்கு புரியிதுங்க. இருங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் அவளே கீழ வருவா, நான் பேசிக்கிறேன்.” என்றார் சிவகாமி. சங்கருக்கும் அதுதான் சரி என்று பட்டது. அவரும் ஆமோதித்தார்.

சிறிது நேரத்தில் தன் அறையிலிருந்து நிலா வெளியே வந்து “மம்மி, பசிக்குது. டிபன் ரெடியா.” என்று கேட்டு கொண்டே டைனிங் டேபிளில் அமர்ந்தாள்.

“ஏண்டி இப்படி கத்துற, இரு எடுத்துட்டு வறேன்” என்று கூறிக் கொண்டே சூடான இட்லியைத் தட்டில் வைத்து எடுத்து வந்து அவளிடம் கொடுத்தார் சிவகாமி.

ஆவி பறந்த அந்த இட்லியை ரசித்துச் சாப்பிட ஆரம்பித்தாள் நிலா.

சிவகாமி சங்கரை பார்க்க, அவரும் சிவகாமியைப் பார்த்தார்.

அவர் பார்வையிலே “என்ன செய்ய போர” என்பது போல் கேட்க, “நான் பார்த்து கொள்கிறேன்” என்று செய்கை காட்டினார்.

“நிலா, நாளைக்கு ஈவினீங் நீ ஃப்ரியா. கொஞ்சம் கடைக்கு போகனும்” என்றார் சிவகாமி.

“சண்டே தான மா நான் வீட்ல தானே இருப்பேன், வேற எங்க போக போறேன். சொல்லுங்க எங்க போகனும்.” என்றாள் நிலா.

“உனக்குத் துணி எடுக்கத் தாண்டி” என்றார் சிவகாமி. சிவகாமி ஏதோ plan செய்து விட்டார் என்று சங்கருக்கு தெரியும், அமைதியாக அங்கு நடப்பதை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார்.

“எனக்கு இப்போ எதுக்குமா டிரெஸ்” என்றாள் நிலா குழப்பமாக.

“உன் பிறந்த நாள் வருதுல” என்றார் சிவகாமி.

“அம்மா, அதுக்கு இன்னும் 3 மாசதுக்கு மேல டைம் இருக்கு.” என்று கூறிவிட்டு, மீண்டும் ஏதோ யோசனை வந்தவள் போல் “அது சரி, லாஸ்ட் கொஞ்ச வருசமா, நானேதானே டிரெஸ் எடுத்துக்கிறேன். உங்கள குப்பிட்டா கூட வர மாட்டிங்க. இப்போ என்ன திடீர் என்று” என்று தன் சந்தேகமாகக் கேட்டாள் நிலா.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மஹாவின் "எனதுயிரே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“நீ எங்க பொண்ண, எங்க கூட கொண்டாட போற கடைசி பிறந்த நாள் டி இது. அதான்” என்றார் சிவகாமி.

சிவகாமி சுற்றி வளைத்து எங்கே வருகிறார் என்பதை சங்கர் அறிந்து கொண்டார். தன் மனைவியின் சாமர்த்தியத்தைக் கண்டு மெச்சினார்.

நிலாவிற்கு இன்னும் எதுவும் விளங்க வில்லை. “ஏன் மா, என்னோட தொல்லை தாங்க முடியலயா. என்ன யாருக்காவது தத்து கொடுக்க போறீங்களா” என்று கிட்டலாக கேட்டாள்.

“அடி கழுத, போட்டனா பாரு” என்று கையை ஓங்கினார் சிவகாமி. அதற்குச் சிறு பிள்ளை போல் சிரித்தாள் நிலா.

“இப்படி விளையாட்டு பிள்ளையா இருக்காத டி. உனக்குக் கல்யாண வயசு வந்துடுச்சி, நினைப்பு இருக்கா” என்றார் சிவகாமி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.