இப்போது புரிந்தது நிலாவிற்கு எல்லாம், தன் தாய் சுத்தி வளைத்து எங்கே வருகிறார்கள் என்று. அதோடு சேர்த்து, 1 year conditionum அவளுக்கு நினைவிற்கு வந்தது. “ஆஹ வசமாக மாட்டி கொண்டோம்” என்று அவளுக்குப் புரிந்தது. எதுவும் பேசாமல் எழுந்து சென்று கை கழுவி விட்டு, அப்படியே தன் அறையை நோக்கி நடந்தாள் நிலா.
அவள் எஸ்கேப் ஆக நினைத்தாலும், அவள் தாய் விடுவதாக இல்லை. “ஏய் நிலா, வா இங்க. கேட்டுக்கிட்டு இருக்கேன். ஒரு பதிலும் சொல்லாமல் போற” என்றார் சிவகாமி.
இன்று வசமாக மாட்டிக் கொண்டோம் என்று நிலாவிற்குப் புரிந்து விட்டது. “என்ன மா உன் பிரச்சனை, நாளைக்கு டிரெஸ் எடுக்க போகனும் அவ்வளவு தானே, போலாம் மா, போதுமா” என்றால் நிலா, தன் அறையின் வாசலில் நின்று கொண்டு.
நிலாவைப் பற்றி அவர்கள் இருவருக்கும் தெரியும், பேச்சுக் கொடுக்காமல் நழுவி விடுவாள் என்று. அதற்கு மேல் அமைதி காக்காமல் actionனில் இறங்கினார் சங்கர்.
“நிலா, இங்க வாடாமா” என்றார் சங்கர்.
நிலாவிற்குப் புரிந்து விட்டது. இன்று இவர்கள் விடப் போவது இல்லை என்று “நிலா நீ காலி” என்று மனதில் நினைத்துக் கொண்டு, தன் தந்தை அருகில் சென்று அமர்ந்தாள் நிலா.
“நேரடியா கேக்கிறேன் மா. போன முறை உன் கல்யாண பேச்சு எடுத்தப்ப, டைம் வேணும் நு சொன்ன. உன் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து நாங்க சரினு சொன்னோம். நீ கேட்ட அந்த டைம் முடிஞ்சி போச்சி” என்று நிறுத்தினார் சங்கர்.
நிலாவிற்கு அது தெரியும். அதனால் மௌனமாக இருந்தாள்.
“நான் அடுத்த கேள்வி என்ன கேட்க போறேனு உனக்குத் தெரியும் நு நினைக்கிறேன்” என்றார் சங்கர்.
“தெரியும் பா. இவரை பிடித்திருக்கு, இவரைத் தான் கல்யாணம் செய்து கொள்ள போறேனு உங்களிடம் சொல்ற அளவிற்கு இந்த ஒரு வருடத்தில் எதுவும் நடக்கல பா” என்று கூறும் போதே அவளின் வார்த்தையின் உற்சாகம் குறைந்தது.
“ஸாரி மா. உன் மனதை கஷ்ட படுத்துறாதுக்காக நான் இந்த கேள்வியை கேட்கல” என்றார் சங்கர்.
அவர்களின் நோக்கம் நிலாவிற்குத் திருமணம் செய்து வைக்க வேண்டு என்பது தான். அவளுக்குப் பிடித்தது போல் ஒரு பையனை அவள் சந்திக்க வேண்டும் என்றுதான் அவர்களும் கடவுளை நாள் தோறும் வேண்டிக் கொண்டனர்.
“அப்பா, இதுக்கு எதற்கு பா ஸாரி. ஃப்ரியா விடுங்க" என்றாள் நிலா.
"சரி மா நிலா, இப்போ என்ன முடிவு பண்ணிருக்க. நம்ம ஏற்கனவே பேசுன மாதிரி நாங்க மாப்பிள்ளை பார்க்க ஆரமிக்கலாமா, இல்ல இன்னும் உனக்கு டைம் வேணுமா. எதுவா இருந்தாலும் நீ சொல்ற முடிவுதான்.” என்று கூறிவிட்டு நிலாவைப் பார்த்தார்.
அவரின் கேள்வி, நிலாவிற்கும், சிவகாமிக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஒருவருட கெடு முடிந்து விட்டது, மாப்பிள்ளை பார்த்து விட்டோம், நீயும் பார்க்க வேண்டும், அடுத்து கல்யாணம் தான் என்று எல்லாம் கூறுவார் என்று பார்த்தால், இன்னும் டைம் வேண்டுமா, என்ன என் முடிவு என்று கேட்கிறாரே என்று தன் தந்தையை ஆச்சரியமாகப் பார்த்தாள் நிலா.
கல்யாணத்தைப் பற்றிக் கண்டிப்பாகப் பேசுவார் என்று பார்த்தால், அவளிடம் என்ன செய்யலாம் என்று அனுமதி கேட்கிறாரே என்ற எண்ணம் சிவகாமிக்கு. அதே கேள்வியோடு அவரை பார்த்தார் சிவகாமி.
தன் மனைவி கூறாமலே அவர் மனதை புரிந்துக் கொண்ட கணவராய், “நான் என்ன செய்கிறேன் என்று எனக்குத் தெரியும், நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று செய்கை காட்டினார். சிவகாமியும் அதைப் புரிந்து கொண்டு அமைதி ஆனார்.
“அப்பா எனக்கு என்ன சொல்றது நு தெரியல” என்றாள் நிலா.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சசிரேகாவின் "கலாபக் காதலா..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
உண்மையில் அவளுக்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை. அவர்கள் நிலாவை வலுக்கட்டாயம் செய்தாலாவது அவர்களை எதிர்த்துப் பேச முடியும். ஆனால் இங்கு அதற்கும் வழி இல்லை. அவளுக்காக ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து செய்பவர்கள் அவர்கள். அவளின் ஆசைக்கு என்றுமே தடை போட்டது இல்லை. அவளிடம் இருந்து இந்த கல்யாணத்தை தவிர வேறு எதையும் அவர்கள் எதிர் பார்த்ததும் இல்லை. அப்படி இருக்க என்ன செய்வாள் அவள். தன் ஆசையை ஒத்தி வைக்க முடிவு செய்தாள்.
ஒரு பெரு மூச்சு வாங்கிவிட்டு “சரி பா, நாம் ஏற்கனவே பேசியது போல், என்னால் எனக்குப் பிடித்த ஒருவரை 1 வருடத்திற்குள் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. நீங்க என் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து எனக்கு டைம் கொடுத்திங்க. அதே போல் நான் உங்க வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பது தான் சரி. அதனால், நீங்க மாப்பிள்ளை பாருங்கப்பா. நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றாள் நிலா.
அதைக் கேட்டு இருவருக்கும் மகிழ்ச்சி. ஒரு வழியாக ஒற்றுக் கொண்டாள்.
“நிலா உன்னைமையா தான் சொல்றீயா” என்று அதை உருதிப் படுத்திக் கொள்ளக் கேட்டார் சிவகாமி.
“ஆமாம் மா. இதுவரைக்கும், நீங்க எனக்கு நான் ஆசை பட்டது எல்லாம் செஞ்சிருக்கீங்க. அதே மாதிரி எனக்கு எது நல்லது நு பார்த்துப் பார்த்து செஞ்சிருக்கீங்க. எனக்கு இந்த கல்யாணம் நல்லது நு உங்களுக்கு தோனுச்சினா, அது தப்பா இருக்காது. அதனால்தான் சரி நு சொன்னேன்” என்றாள் நிலா.