(Reading time: 11 - 21 minutes)

“நிலா, நீ எங்க மேல வச்சிருக்கிற நம்பிக்கையை காப்பாத்துற மாதிரி, ஒரு ராஜ குமாரனை கொண்டு வந்து நிருத்துருறோம் பாரு” என்றார் சங்கர்.

அதற்கு எதுவும் பேசாமல், ஒரு சிரிப்பு மட்டும் சிரித்து வைத்தாள் நிலா.

“இங்க வா டா என் செல்லம்” என்று நிலாவை அனைத்துக் கொண்டாள் சிவகாமி.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

சிவகாமியின் அணைப்பில் ஒரு நிம்மதியை உணர்ந்தாள் நிலா.

வெளியே வார்த்தைக்குச் சம்மதம் சொல்லிவிட்டாளும் அவள் மனம் அதற்குச் இன்னும் சம்மதிக்க வில்லை. ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. நடப்பது நடக்கட்டும் பார்த்துக் கொள்வோம் என்று முடிவெடுத்தாள்.

சிறிது நேரம் அங்கே சின்ன அமைதி, சிறிய உரையாடல் எல்லாம் முடிய தன் அறைக்குச் செல்ல எழுந்தாள் நிலா.

அப்போது அவளுக்கு ஒன்று தோன்ற அதை தன் தந்தையிடம் கூற முடிவெடுத்தாள்.

“அப்பா, எனக்கு ஒரு சின்ன உதவி செய்ய முடியுமா” என்றாள் நிலா.

“என்ன டா இப்படி கேட்டுட்ட சொல்லுமா என்ன வேணும்” என்றார் சங்கர் ஆர்வமாக.

அவர் பேச்சில் அவ்வளவு சந்தோஷம் தெரிந்தது நிலாவிற்கு. அதற்குக் காரணம் அவள் சொன்ன சம்மதம் தான் என்று அவளுக்குத் தெரியும்.

நிலாவிற்கு எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை, இருந்தாலும் சொல்லித்தான் ஆக வேண்டும். “இந்த மாப்பிள்ளை தேடுறது, ஜாதகம் அது இதுனு இருக்கிற formalities எல்லாம் நீங்களே பார்த்துக் கோங்க பா, கடைசியா இவர்தான் பையன் நு சொல்லுங்க நான் மேரேஜ் பண்ணிக்கிறேன். எனக்கு என் மன நிலை மாறுவதற்கு அந்த டைம் வேணும் பா. பிளிஸ்” என்றாள்.

“என்ன நிலா இப்படி சொல்ற, உனக்கு விருப்பம் இல்லனா எதுவும் வேண்டாம் மா. உன் சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம்” என்று அவர் பதரி போய் கூறினார் சங்கர்.

அவரின் அந்த வார்த்தையில் சற்று நேரத்திற்கு முன்னர் இருந்த உற்சாகம் சந்தோஷம் எதுவும் இல்லை.

அதை நிலாவும் கவனிக்கத் தவற வில்லை.

“ஐயோ அப்பா, நான் அப்படி சொல்லவில்லை. லவ் அது இது நு ஒரு மாதிரி என் மைண்ட் செட் ஆயிடுச்சி பா. அத மாத்திக் கொள்ளக் கொஞ்சம் டைம் வேணும் அவ்வளவுதான். அது மட்டும் இல்லாமல் எனக்கு எது நல்லது எது கெட்டது நு பார்த்துப் பார்த்து செய்ற நீங்க அமைச்சி தர வாழ்க்கை நல்லா தான் இருக்கும் பா. அதில் எனக்கு நம்பிக்கை இருக்கு” என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள் நிலா.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "காணாய் கண்ணே..." - காதல் & சரித்திரம் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“என்னங்க இது, இவ இப்படி சொல்லி விட்டு போறா. இப்ப என்ன செய்றது” என்றார் சிவகாமி.

“எனக்கும் அதுதான் ஒன்னும் புரியல சிவகாமி. கடவுள் மேலே பாரத்தைப் போட்டு, நாம அடுத்த கட்ட வேளையை ஆரம்பிப்போம்” என்று ஒரு பெரு மூச்சு விட்டுக் கொண்டே சொன்னார் சங்கர்,

தன் அறைக்குச் சென்ற நிலாவிற்கு இப்போது நடந்தது அனைத்தும் கனவு போல் தோன்றியது.

தன் வாழ்க்கை பற்றிய அவளது கனவுகள் அவளை விட்டு எங்கோ வெகுதூரம் சென்று கொண்டிருந்தது.

விருப்பம் இல்லை என்றாலும், கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னது தன் பெற்றோருக்காக தானே என்று தன் மனதை அவள் சமாதானம் செய்து கொள்ளப் பார்த்தாள் ஆனாலும் முடியவில்லை.

தொடரும்

Episode # 03

Episode # 05

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.