(Reading time: 11 - 21 minutes)

தொடர்கதை - சிவகங்காவதி - 04 - ஸ்ரீ

sivaGangavathy

பாணற்கு உரைத்த பத்து

அகத்திணையில் சிற்சில சூழ்நிலைகளில் தலைவன் தலைவியரிடையே சந்து (சமாதானம்) செய்விப்போர் வாயில்கள் எனப்படுவர். வாயிலாக உள்ள பாணனிடம் தலைவி, தோழி, பரத்தை ஆகியோர் கூற்று நிகழ்த்துவதாக அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி பாணற்கு உரைத்த பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

நன்றே பாண கொண்கனது நட்பே 

தில்லை வேலி இவ்வூர்க் 

கல்லென் கௌவை எழாஅக் காலே - (131)

(தில்லை = ஒரு வகை மரம்; கௌவை = பழிச்சொல்)என்ற பாடலில் தலைவி, ஊரார் பழிச்சொல் கூறா விட்டால் தலைவனின் நட்பு ஏற்றுக் கொள்ளத் தக்கதேஎன்று பாணனிடம் வாயில் மறுக்கும் (மறுத்துரைக்கும்) செய்தி இடம் பெற்றுள்ளது.

யக்கம் தெளிந்தவள் கண் விழிக்க முயன்ற போது கதிரவனின் ஒளியில் கண்கள் வலுவிழந்ததாய் தோன்றியது.சிரமப்பட்டு கண் திறந்தவள் சுற்றும் முற்றும் பார்த்து தன் நிலையை நோக்க ஆடைகள் தளர்த்தப்பட்டு ஒருபுறமாய் படுக்க வைக்கப்பட்டிருந்தாள்.

அடிபட்ட இடத்தில் மருந்து ஏதோ இடப்பட்டிருப்பதை போன்ற உணர்வு சட்டென பதறிப்போய் எழ முயற்சித்தவளை மெதுவாய் தடுத்து நிறுத்தியது ஒரு கரம்.

“பெண்ணே பதட்டம் வேண்டாம் உனக்கு ஒன்றுமில்லை வேண்டிய வைத்தியம் செய்தாகிவிட்டது.அபாயத்தை தாண்டிவிட்டாய்.”, அறுபதுகளை கடந்த கிழவி ஒருவர் பொறுமையாய் கூறி முடித்தபோது தான் அவளுக்கு சென்ற உயிர் மீண்டதாய் உணர்ந்தாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“தாங்கள் யார்?இங்கு எப்படி?நேற்றிரவு தங்களை நான் பார்க்கவில்லையே?”

“நான் சமீரா. நஸீமிற்கு பாட்டி முறை.அரசவையின் தலைமை வைத்தியரும் கூட பொதுவாய் போர்களுக்குச் செல்லும் போது சில சமயங்களில் நானும் வீரர்களுக்கு உதவியாய் வருவதுண்டு. எத்துனை பெரிய கொடிய விஷமானாலும் அதை முறிக்கும் மருந்து என்வசம் உண்டு.உன் நல்ல நேரம் இந்த முறை நான் வந்திருக்கிறேன்.”

சற்றே ஆசுவாசமாய் உணர்ந்தவளுக்கு இப்போதும் கூட வலியில் முகம் சுனங்கியது.இருந்தும் அடுத்தகட்ட அதிர்ச்சிக்கு தயாராக வேண்டும் மனம் தளராதே என மூளை அறிவுறுத்தியது.நீண்ட ஆழ் மூச்செடுத்தவள் கடினப்பட்டு வலி மறந்து எழுந்து அமர்ந்தாள்.

“நஸீம் உனை வெளியே போகக் கூடாதென பணித்திருக்கிறான்.”

“நான் ஒன்றும் உங்கள் தேசத்தின் அடிமை அல்ல நீங்கள் கூறுவதையெல்லாம் கேட்பதற்கு.”

“ஆத்திரத்தால் ஆகப் போவது ஒன்றுமில்லை நேற்று வரை நீ பெண் என்பது யாருக்கும் தெரியாது ஆனால் இப்போது அப்படியல்ல,எனவே தான் நஸீம் உனை வெளியே செல்ல அனுமதி மறுத்திருக்கிறான்.அதுமட்டுமன்றி நீ எங்கள் அடிமை இல்லையென்றாலும் இப்போது எங்களிடம் இருக்கும் பிணைக்கைதி ஆகவே உசூரின் கட்டளைக்குப் பணிந்து தான் ஆக வேண்டும்.புரிந்ததா?”

“இதை எப்படி மறந்தேன்!இனி உயிரோடு சேர்த்து என் பெண்மையையும் காப்பாற்றியாக வேண்டுமே!என் ஈசன் என்னுடன் இருக்கிறான் எதற்கும் அஞ்ச மாட்டேன்.நாட்டையும் என்னையும் காப்பாற்றி கொள்ள முடியாவிடில் அந்த கணமே எனை மாய்த்துக் கொள்வேன்.”

என்று தனக்குள்ளேயே சிந்தனையில் உழன்றவளின் மேல் ஏதோ தழுவும் உணர்வில் சுயநினைவு பெற அவளது தலையில் புடவை தலைப்பினை அணிவித்து அதன் ஒரு புறத்தை அவள் கையில் கொடுத்து முகத்தை மறைத்தவாறு வைத்துவிட்டு வெளியே சென்றார்.

அவர் வெளியே சென்றவுடன் தனக்கே உரிய வேகநடைப் போட்டு உள்ளே நுழைந்தான் இஷான்.அவனை கண்ட பின்பும் கூட அவள் அசையாமல் அமர்ந்திருந்த நிலையை கண்டு அவனின் கண்களில் சிறிதாய் கோபத் தீ கனன்றது.

“இப்போது எப்படி இருக்கிறாய்?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

குருராஜனின் "எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“உங்கள் வசம் பிணையக்கைதி ஆக இருப்பவர்கள் எப்படி நன்றாக இருக்க முடியும்?”

“வாள் வீச்சில் மட்டுமன்றி வார்த்தை வீச்சிலும் கை தேர்ந்தவள் போலவே.நல்லது உன் நலம் பற்றிய அக்கறை எனக்குத் தேவையில்லாதது.சரி இப்போது புறப்படு எழுந்து நடக்குமளவிற்கு உடலில் வலுவிருக்கிறதா இல்லையா என்பதற்காவே என்னுடைய முதல் கேள்வி. இத்தனை திமிராய் பேசும் அளவிற்கு திடம் இருக்கிறது எனவே நடக்கவும் முடியும். ம் புறப்படு”

“நீங்கள் அழைத்தவுடன் பின்னே வருவதற்கு நான் ஒன்றும் நீங்கள் வளர்க்கும் செல்லப் பிராணி அல்ல.எங்கு எதற்க்காக செல்கிறோம் என்ற விவரம் அனைத்தும் தெரியாமல் இங்கிருந்து ஒரு அடி நகர மாட்டேன்.”

“வார்ரே வா!!!தென்னகத்தின் துணிவும் திமிரும் பார்த்து ரசிக்க நன்றாகத்தான் இருக்கிறது.என்னிடம் இப்படி பயமின்றி பேச துணிந்ததற்காகவே உன் கேள்விக்கான விடையை கூறுகிறேன்.உன் தந்தை வெகுநேரமாய் உனக்காக காத்திருக்கிறார் அவரை சந்திக்க விரைந்து செல்வது தானே மரியாதையான ஒன்றாய் இருக்கும்?”

“என்ன!!? இதெப்படி சாத்தியம் ஏதோ சூழ்ச்சி செய்கிறீர்கள்.. என்னால் உங்கள் கூற்றை நம்ப இயலவில்லை.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.