(Reading time: 7 - 13 minutes)

ஆப்பிள் போலே இருப்பானே

இந்த கல்லூரிக்கு போகின்றதோ

என்னை தாக்கிய தாவணியே

முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்தில்லே

யார் புன்னகையும்

உன் போல் இல்லையடா

யார் வாசனையும்

உன் போல் இல்லையடா

அய்யோ ஆனதே

ஆனந்தம் போனதே

ச்சீ ச்சீ ச்சீ சிந்தனை

சிரிப்புக்குள் வேதனை

போடி வராதே

மணம் போனால் வராதே

உன்னை பெற்ற ஒரு அன்னை கொண்ட வேதனைகள் தருகிறாய்

போதுமே

சந்திப்போமா இருவரும் சந்திப்போமா

ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா

சந்திப்போமா நெப்சூனலில் சந்திப்போமா

காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா

இந்த சாலையில் போகின்றான்

மீசை வைத்த பையன் அவன்

ஆறடி உயரம் அழகிய உருவம்

ஆப்பிள் போலே இருப்பானே

இந்த கல்லூரிக்கு போகின்றதோ

என்னை தாக்கிய தாவணியே

முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்தில்லே

சந்திப்போமா இருவரும் சந்திப்போமா

ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா

சந்திப்போமா

நெப்சூனலில் சந்திப்போமா

காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா

"பாட்டி...என்ன பண்ணிட்டு இருக்க?"

"தூங்கி எழுந்துட்டியா நிலாமா?. உனக்கு தான் பூ கட்டிட்டு இருக்கேன். உனக்கு பிடிக்குமேனு தாத்தா நம்ம தோட்டத்துல இருந்து பரிச்சிட்டு வந்தாரு. திரும்பு தலைல வச்சிவிட்றேன்."

"சரி பாட்டி. நா போய் பூங்கொடிய பாத்துட்டு வரேன்" என்று ஈஸ்வரியின் வீட்டிற்கு ஓடினாள்.

"ஹே கொடி... கொடி..."

"அட நிலா... வாடி உள்ள வா. ஏன் வெளியவே நிக்குற?. கஸ்தூரி அம்மா சொன்னாங்க நீ இன்னைக்கு வரனு. எப்படி இருக்க?", ஈஸ்வரி.

"நா நல்ல இருக்கேன் அத்தை. பூங்கொடி எங்க?"

"மாடில இருந்து துணி எடுத்துட்டு வர போய் இருக்கா அவ. கொஞ்ச நேரத்துல வந்துடுவா. நீ உக்காரு சாப்புட எதாவது எடுத்துட்டு வரேன்."

"இல்ல அத்தை எதும் வேணாம் நா மாடிக்கே போய் பாக்குறேன் அவள."

"ஹ்ம்ம்..."

இந்த சாலையில் போகின்றான்

மீசை வைத்த பையன் அவன்

ஆறடி உயரம் அழகிய உருவம்

ஆப்பிள் போலே இருப்பானே.... என்று பாடிக்கொண்டே ஓடி வந்தவளை பார்த்த பூங்கொடி,

"என்ன நிலா பாட்டுலாம் பயங்கரமா இருக்கு?. யாரு அந்த பையன்?"

"ஹே அதுலாம் ஒன்னுமில்ல டி"

"இல்லையே எதோ இருக்க மாதிரி இருக்கே. எப்படியும் ரெண்டு மாசம் இங்க தான இருக்க போற கண்டுபிடிச்சிடறேன்" என்று கண்ணடித்தாள் பூங்கொடி.

"ஹ்ம்ம்... கண்டுபிடி... கண்டுபிடி...", நிலா.

பல மாதம் கழித்து சந்தித்த தோழிகள் பல விஷயங்களை பகிர்ந்து மாத்தி மாத்தி கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.

"வாங்க... வாங்க... உள்ள வாங்க. சீதா அவங்க வந்துட்டாங்க பாரு.", ராம்.

"தோ... வந்துட்டேன் ராம்.", சீதா

"வாங்க வாங்க... உக்காருங்க. இந்த ஜூஸ் குடிங்க. இன்னும் 10 மினிட்ஸ்ல சாப்பாடு ரெடி ஆகிடும். தோ வந்துடறேன்", என்று கிட்ச்சனை நோக்கி விரைந்தாள் சீதா.

"நா எதாவது உதவி பண்ணட்டுமா???" என்று கேட்டவளை திரும்பி பார்த்த சீதா,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.