(Reading time: 10 - 19 minutes)

உண்மைதான் நஸீம் அந்தப் பெண்ணைப் பற்றி புரிந்துகொள்ளவே முடியவில்லை.சாந்தமாய் இருக்கிறாள்.கஷ்டங்களைக் கூட மனமுவந்து ஏற்றுக் கொள்கிறாள்.இப்போதுகூட உடல் நலமாய் இருப்பதாய் கூறி சிறைக்கே செல்வதாய் கூறிவிட்டாள்.எத்தனைத் தடுத்தும் மறுத்துவிட்டாள்.”

முதலில் இருந்தே இதுபோன்ற நிகழ்வுகள் தான் எனைக் குழப்பிக் கொண்டிருக்கிறது தாதி.என் மனதை மிகவும் சலனப்படுத்துகிறாள்.”

நஸீம்!!”

இதை உங்களிடம் கூறுவதில் எனக்குத் தயக்கம் ஏதும் இல்லைதான்.அவளைக் கண்ட முதல் சந்திப்பில் இருந்தே மனம் ஒரு நிலையில் இருக்கமாட்டேன் என்கிறது.அதுவும் ஆண் உடையில் அவள் இருந்த போதே அவளைக் கண்டுக் கொண்டேன்.அந்த துணிச்சல்தான் முதலில் கருத்தில் பட்டது.

ஒருவித புது உணர்வு இன்னதென்று வரையறைக்க முடியாத நிலை.இவையனைத்தும் எனக்கு இதுவே முதல் முறை ஒரு பெண்ணிடத்தில்.அதே நேரம் அவள் என் கவனத்தை திசை திருப்புகிறாளோ என்று ஒரு கோபம்.அதைதான் அவள் மீது தண்டனைகளாய்  காட்டினேன்.இப்பொழுதும் இது என்னமாதிரியான உணர்வு என்று நிச்சயமாய் புரியவில்லை

காதல்!!!”

என்ன???!!!”

ஏன் நஸீம் இத்தனை அதிர்ச்சி அது ஒன்றும் அத்துனைப் பெரிய தவறான சொல் அல்லவே?”

தாதி தாங்கள் என்னை மேலும் குழப்புகிறீர்கள்.அடிப்படையில் அவள் ஒரு இந்து.”

இருக்கலாம்.ஆனால் காதலுக்கு  மதங்கள் இருக்கிறதா என்ன?”

“…”

இதோ பார் நஸீம் இந்த விடயத்தை எனைத் தவிர யார் கேட்டாலும் உனைப் பழித்துதான் பேசுவார்கள்.ஆனால் எனக்கு உன் மகிழ்ச்சி மட்டுமே பிரதானம்.எத்துனை நாட்கள் உன் நிக்காவைப் பற்றி கவலை கொண்டிருப்பேன் தெரியுமா?

நான் உன் இரத்த பந்த தாதி இல்லை எனினும் உனை என் பேரனாகவே எண்ணி வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.அப்படியிருக்க பொது வாழ்க்கையை கடந்த உன் குடும்பம் உனக்கான மனைவி மக்கள் இதெல்லாம் வேண்டும் என்று அல்லாவை வேண்டாத நாள் இல்லை.ஒரு வேளை இவள்தான் உன் மனதிற்கு நெருக்கமானவள் என்றால்..”

வேண்டாம் தாதி இந்தப் பேச்சை இத்தோடு நிறுத்தி விடலாம்.”

நஸீம் நான் கூறுவதை..”

இல்லை தாதி இது வேண்டாத வீண் பேச்சு..நாட்டு மக்களில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒன்று என்று நான் கூறலாம்.அவர்களுக்குள் நான் பேதமும் பார்ப்பதில்லை.நாட்டு மக்களுக்கு அவரவர் விருப்பப்பட்ட மதத்தை பின்பற்றுவதற்கு  நிச்சயமாய் உரிமை இருக்கிறது.ஆனால் என் தனிப்பட்ட வாழ்க்கையில் நான் நம் மக்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன்.அப்படியிருக்க இவையெல்லாம் தேவைற்ற சிந்தனை தான்.”

ம்ம் மிகுந்த குழப்பத்தில் இருக்கிறாய் நஸீம்.நான் இந்தப் பேச்சை இத்தோடு விட்டுவிடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை.ஆனால் வாழ்வில் யாருக்கும் எளிதில் கிடைக்கப் பெறாத வரம் மனம் கவர்ந்தவளை நிக்காஹ் செய்து கொள்வது தான்.அல்லாஹ் உனக்கு அந்த வரத்தை நிச்சயம் அளிக்கட்டும், வருகிறேன்.”

சமீராவின் பேச்சு அவனை அளவிற்கு அதிகமாகவே சலனப்படுத்தியிருந்தது.இப்படி ஒரு கோணத்தை அவன் துளியளவும் சிந்தித்திருக்கவில்லை.இருந்தும்இப்போது சிந்திக்கத் தோன்றியது.

முப்பது அகவையான ஆண்மகனுக்கு எதிர்பாலினத்தை கண்டால் ஏற்படும் எந்தவித உணர்ச்சிகளுக்கும் இடமளிக்காமல் இருந்தவன்.எந்தபெண்ணையும் தவறான கண்ணோடத்தில் நினைத்துபார்க்க முடியாதவன். போரிலும் எதிரி நாட்டினரிடமும் சற்றும் ஈவு இரக்கமின்றி நடந்து கொள்பவனா இவன் எனுமளவு  அவன் தேசத்தில் பெண்கள் உயர்வாய் போற்றப்பட்டனர் என்றே கூற வேண்டும்.

இன்னும் சற்று அதிகமாகவே கூற வேண்டுமானால் அவன் இன்னும் நிக்காஹ் செய்யாமல் இருப்பதை வைத்து அவனை இழிவாய் சிலர் பேசியது கூட உண்டு.ஒரு அரசன் என்பவன் எத்தனைப் பெண்களை மணக்கிறானோ அந்த எண்ணிக்கையைக் கொண்டுஅவனின் மரியாதை அதிகரிக்கும்.

அப்படியிருக்க ஒரு முறை கூட நிக்காஹ் செய்யாமல் இருப்பதால் அவனிடம் குறையிருக்கிறது என்றெல்லாம் கூட மற்ற சிற்றசர்கள் எள்ளி நகையாடி இருக்கின்றனர்.அந்த கோபத்தை எல்லாம் அவ்வரசர்களின் மீது போர் தொடுத்து நாட்டைக் கைப்பற்றி தன்வசமாக்கி அவர்களின் மரணப்படுக்கையில் தீர்த்துக் கொண்டான்.

அப்படி மலையென அசையாதிருந்தவனையும் அசைத்துப் பார்த்தவள் தான் சிவகங்காவதி.அவளைச் சிறைப்பிடித்து அவன் முன் நிறுத்தியே நொடி அவள் கண்களின் அழகிலேயே கண்டு கொண்டான் அவள் பெண் என்பதை.அத்துனை தீர்க்கமான பார்வை,கயல் போன்ற விழிகள் அந்தசோதனை நேரத்திலும் சற்றும் பயமறியா அந்தப் பார்வையே அவனின் தடுமாற்றத்தின் முதற்படி.

அடுத்தததாய் அவளின் வாள் வீச்சு.இந்துஸ்தானத்தின் மிகச் சிறந்த வாள் வீச்சாளன் என்று பெயர் பெற்றவன் இஷான் நஸீம்.அவனையே எவ்வித தயக்கமுமின்றி வாள் போட்டிக்கு அழைத்தாள் சிவகங்காவதி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.