(Reading time: 10 - 19 minutes)

அழைத்தது மட்டுமல்லாமல் அவளின் ஒவ்வொரு அசைவும் அவனுக்குச் சவாலாய் அமைந்தது அவனாலேயே மறுக்கப்படமுடியாத உண்மை.அத்துனை சாதுரிமாய் அத்துனை யுக்திகளை கையாண்டு வாள் வீசி அவனே தடுமாறத் தொடங்கும் நிலையில் தான் முதுகில் பட்ட காயத்தின் காரணமாக மூர்ச்சையாகிச் சரிந்தாள்.

அவளை கூடாரத்தில் கிடத்திய பின் சமீராவை அழைத்து வர வீரர்கள் சென்ற பின் சில நிமிடங்கள் அவள் முகத்தையே பார்த்து நின்றிருந்தான்.கள்ளம் கபடமற்ற குழந்தையின் முகத்தில் ஏற்படும் கோபம் போன்றுதான் தோன்றியது நாட்டைக் காப்பாற்றுவதற்காக அவள் காட்டிய இந்த அதீத தைரியம்.

விளக்கின் ஒளியில் வலியில் சுனங்கிய முகத்தோடு கிடந்த அவள் தான் இஷான்  தன் வாழ்நாளில் ஒரு நிமிடத்திற்கும் மேல் பார்த்த ஒரு மங்கையாய் இருக்கும்.

அதற்குள் அங்கு சமீரா வந்துவிட தன் கவனத்தை திருப்பி வெளியில் சென்றுவிட்டிருந்தான்.அதன் பிறகு தனது தேசத்திற்கு வந்து சிறையில் அவளைச் சந்தித்த கணம் முதல் தேவையற்ற ஒரு வன்மமும் கோபமுமே அவளிடத்தில் இருந்து வந்தது.

அனைத்திற்கும் மேலாய் அவனிடம் ஒருமுறைக் கூட தேவையற்ற வாக்குவாதமோ வீண் பழிச்சொற்களோ பேசாமல் இருந்தாள்.அனைத்தும் கடவுளின் விதிப்படியே நடப்பதாய் அப்படியே ஏற்றுக் கொண்டிருந்தாள்.அதையும் தாண்டிய அவள் தந்தையின் மரணம் அதைக் கூறி அவள் செய்ய வேண்டிய ஈமக் காரியங்களைப் பற்றி கேட்பதற்கு எத்துனை துணிவிருந்திருக்க வேண்டும்.

இருப்பதோ அடிமையாய் வேற்று தேசத்தில் அந்த நாட்டின் அரசனிடமே அதுவும் அவன் வேற்று மதத்தை பின்பற்றுபவன் என்று தெரிந்தும் தன் உணர்வுகளையும் சாங்கியங்களையும் மதிப்பான் என்று எந்த அடிப்படையில் நம்பியிருப்பாள்.

யாருக்காகவும் எந்த நிலையிலும் தன் கடமைகளைத் தவறாமல் செய்ய நினைக்கும் குணம் அனைவரிடத்திலும் சாத்தியம் தானா?அவளின் கடவுளிடத்தில் எத்தனை மூர்க்கமான பக்தி கொண்டிருந்தால் எத்னையோ மைற்கற்கள் கடந்து நடக்கும் ஒரு விடயம் அவளுக்கு இங்கு தெரிந்திருக்கும்.

எல்லாவற்றையும் விட தன் உயிரைக் காப்பது என்பது!!!தானே அவள் இடத்தில் இருந்தால் இதைச் செய்திருப்பேனா என்றால் அவன் பதில் சர்வ நிச்சயமாய் இல்லை என்பதுதான்.என்னை வருத்த நினைப்பவனைப் பற்றி நான் ஏன் கவலை கொள்ள வேண்டும் என்றே எண்ணியிருப்பான்.

எப்படி ஒருத்தியால் அழகில் வீரத்தில் பக்தியில் பொறுமையில் நிதானத்தில் என அனைத்திலும் சிறந்து விளங்க முடியும்?யா அல்லாஹ் இன்னும் எத்துனை எத்துனை கேள்விகள் இவளைப் பற்றி என்னுள் கேட்டுக் கொள்வது?

வேண்டாம் கண்டிப்பாக வேண்டாம் இந்த இஷான் ராஜ்ஜியத்தை ஆளப் பிறந்தவனேயன்றி ஒரு பெண்ணின் மனதை அல்ல.காதலுக்கு என் வாழ்வில் கண்டிப்பாக இடமில்லை.உறவுகள் ஒருவனை பலகீனமாக்கும்.இலக்கை நோக்கிய பயணத்திற்கு முட்டுக் கட்டையாக இருக்கும்.அப்படிப்பட்ட காதலோ உறவோ இந்த இஷானிற்கு ஒரு போதும் தேவையில்லை 

தொடரும்...

Episode 07

Episode 09

Go to Sivagangavathi story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.