Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 01 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 2 votes

ஷேர் ஆட்டோவில் இருந்த அத்தனை பேரும் இவளை ஆவென்று பார்க்க .இவள் மனமோ "ஓய் என்னா லுக்கு ட்ரெஸ் தான் வெஸ்டர்ன் ...ஆளு செம்ம லோக்கல் பார்த்துக்கோ ...இந்த லுக்கெல்லாம் என்கிட்ட செல்லாது  ..ஆனானப்பட்ட அந்த கருங்குரங்கு ...பாலா  லுக்குக்கே அசாராதவளாக்கும் நானு" என்று மனம் கொக்கரிக்க ..."சீ இருக்க எரிச்சல்ல அந்த கடங்காரன் பாலாவை  வேற நினைக்கணுமா ...அவனும் அவன் மூஞ்சியும் ... "என்று அவசரமாக மனது அந்த பெயரை அழித்தது.

போக்குவரத்து நெரிசலை கண்டு பல பேர் சல சலக்க இவளுக்கு போதுமான அளவு நேரம் இருந்தது...அப்படி பேருந்தை நேரத்திற்கு பிடிக்கவில்லை என்றாலும் அதற்கு காரணம் இந்த போக்குவரத்து நெரிசல் என்று சக்தியிடம் சொல்லி தப்பித்துக்கொள்ளலாம் என்று அந்த வஞ்சகக்காரி திட்டம் தீட்டினாள்..

ஆனால் அவள் சக்தி இருக்க இவள் திட்டம் எல்லாம் எப்போதும் தவிடு பொடி என்பதை நன்கு அறிந்தே வைத்திருந்தாள் அந்த வஞ்சகக்காரி.. மெட்ரோ இரயில் நிலையம் வந்திறங்கிய பின் எப்படியும் ஊருக்கு சென்று தான் ஆகவேண்டும் என்று தீர்மானமாய் முடிவெடுத்தவள் அதற்கு மேல் எதையும் போட்டு குழப்பி கொள்ளாமல் விறு விறுவென்று நடந்து சென்னை புறநகர் பேருந்து நிலையத்திற்கு செல்ல டோக்கனை பெற்றுக்கொண்டு வந்த மெட்ரோ இரயிலில் ஏற "பாரின் ல எப்பவோ வந்தாச்சு...இங்க இப்போ தான் வந்திருக்கு ...இத கட்ட ஒரு எட்டு வருஷமா பண்ணாங்க பாருங்க கூத்து அடேயப்பா ....எல்லாம் இந்த வடநாட்டுக்கார பசங்க தான் இன்னும் இங்க கொஞ்சம் வேலை இருக்கு ...வேலை முடிஞ்சதும் இவங்களை கொண்டு போய் விடுறதுக்கு ஒரு பஸ் ஏற்பாடு செஞ்சிருக்காங்க ...அதுல இடம் பிடிக்க ஓடி வருவானுங்க பாருங்க....இன்னும் கொஞ்ச நாள் தான் அப்புறம் பஸ் எல்லாம் காணாம போயிடும்"  என்று இறந்த காலம்...நிகழ் காலம் ...எதிர்காலம் பற்றி சிலர் வள வளத்து கொண்டிருக்க ....

இவளோ அவற்றை எல்லாம் ரசித்து கேட்டு கொண்டிருந்தாள். தான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் ...வெளியே செல்லும் பாதையில் வந்து, கொடுத்த டோக்கனை உள்ளே போட உண்டியலில் காசு போடும் நினைவு...இன்று மெட்ரோ இரயிலில் பயணசீட்டாய் அவள் கையில் கொடுக்கப்பட்டது ஒரு வில்லை (டோக்கன்) அதை பஞ்சிங் கார்ட் போல் அங்கே காட்டியவுடன் அடைத்திருந்த பாதை திறக்க, பயணம் முடித்து வெளியேறும் போது அதை உண்டியல் போன்ற அமைப்பிடத்தில் போட்டால் மட்டுமே பாதையின் கதவு திறக்கப்படும் .

புறநகர் பேருந்து நிலையத்திற்குள் அவள் வந்ததும் வரிசையாக பேருந்து ஓட்டுநர்களும் நடத்துனர்களும் ...அந்தந்த ஊர் பெயரை கூவி கூவி பயணிகளை சேகரிக்க ...இவளுள் க்ளுக் என்று மூண்டது சிரிப்பு ...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "சுஷ்ருதா..." - வித்தியாசமான காதல் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“ஹிஹி ..இப்போ வாங்க வாங்கன்னு நீங்க கெஞ்சுறீங்க ..இதே பொங்கல்..தீபாவளி ...லாங் வீக்எண்டுன்னா ...தாங்க ...தாங்கன்னு நாங்க கெஞ்சனும் ...சும்மாவா சொல்லுது இந்த சக்தி ..வாழ்க்கை ஒரு வட்டம்னு”

என்று தத்துவத்தை யோசித்துவிட்டு குடிக்க தண்ணீர் பாட்டில் ..கொரிக்க சிப்ஸ்

"ம் கண்மணி ...கண்மணி ...உன் கண்ணில் மட்டும் இது பட்டிருந்தால் என் கண்ணாமுழியை நோண்டி இருப்ப கண்மணி.." என்று அப்போதும் அவளின் கண்மணியை வம்பிழுத்தபடி "இன்னும்   ரெண்டு பாக்கெட் கொடுங்க" என்று கேட்டு வாங்கினாள் அந்த வஞ்சகி ...நாளை கண்மணியை வஞ்சம் தீர்க்க வேண்டுமே ... “ஹஹஹாஹா” என்று நம்பியார் போன்ற சிரிப்பு அவள் மனதுள்.

இரவு 9 மணி....முன்பதிவு செய்திருந்த பேருந்தில் தனது இருக்கையை தேடிப்பிடித்து அமர்ந்தவள் வாங்கிய லேஸ் சிப்ஸ் பாக்கெட்டை "கரக், மொரக்"..சத்தத்துடன்...பிரித்து அதில் இருந்து தேடி பிடித்து பெரிதாய் இருந்த சிப்ஸ் ஒன்றை வாயில் கடித்தபடி ஒரு செல்பி ..."மீ  வித் மை டின்னர்" என்ற கேப்ஷன் போட்டு ..."டேய் வாத்தி ......அந்த கண்மணி கிட்ட உடனே காட்டு" என்ற குறுஞ்செய்தியுடன் அனுப்பிவிட்டாள்  அவள் அல்வாவிற்கு.

மனம் தனது கிராமத்தை நினைத்து சிலிர்த்தது...அவள் விரும்பிய படிப்பு...அவள் விரும்பிய பணி...இருந்தும் தனது கிராமத்தை வெகுவாய் பிரிந்திருக்கும் ஏக்கம் அவளை அவ்வப்போது சோர்வடைய செய்கிறது தான்..."இதை பார்த்ததும் இந்த கண்மணி வயிறு "கப கபன்னு” எரியும்  ஹி ஹி என்னை பார்த்ததும் அப்படியே ஒரு லுக்கு விடும் பாரு "குமுதா ஹாப்பி அண்ணாச்சி"  மறுநாள் கண்மணி படும் பாடு தன் மனக்கண்ணில்...!

கண்களை மூடி தனது கிராமம்..தனது கல்வி ..தனது குடும்பம் அதை தொடர்ந்து அவள் வாங்கிய விருது ...இன்று அலுவலகத்தில் தன்னை கிண்டல் செய்தது அனைத்தையும் நினைத்தவள் முகம் மிளிர்ந்தது..  

மறு நாள் கரூர் அவளை குளிருடன் வரவேற்க ...ஹா... என்ற பெரிய கொட்டாவியை முடிப்பதற்குள் .."ஏறு வண்டியில" என்ற அவள்  அல்வாவின்  குரல் ...

 "டேய் அல்வா  ..எப்படா வந்த"?..நான் வருவது எப்படி டா தெரியும்?" என்னடா அல்வா...? வேவு பார்க்க ஒற்றன் வெச்சிருக்கியா...?எப்படி டா வந்த” என்று கேட்க

"ஏய் ப என்று ஆரம்பித்தவனிடம்  ...டேய் மூடவுட் ஆக்காத”  என்று அவள்  முகத்தை தூக்கி வைக்கவும் ... “அப்ப என்னையும் கடுப்பேத்தாம வண்டியில ஏறு" என்று சொல்ல ...

"டேய் யாரு யாரை கடுப்பேத்தினா?" என்று அவள் கையை கட்டிக்கொண்டு கேட்க ..

“ஏய் டைம் ஆச்சு பப்பு ...சீக்கிரம் ஏறு மா” என்று கெஞ்சவும் . “ஓகே ஓகே அல்வா ரொம்ப கெஞ்சாத” என்று அவன் பின்னே இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்தாள்.

About the Author

Prama Subbiah

Prama Subbiah's Popular stories in Chillzee KiMo

  • Idhu enna maayam..?.!Idhu enna maayam..?.!
  • Kanamoochi re re!Kanamoochi re re!
  • Unnil tholainthavan naanadiUnnil tholainthavan naanadi
  • Vaa.. vaa.. en devathaiye.!Vaa.. vaa.. en devathaiye.!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 01 - பிரேமா சுப்பையாmadhumathi9 2019-04-14 13:28
:clap: nalla thodakkam.waiting to read more. :thnkx: 4this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 01 - பிரேமா சுப்பையாsaju 2019-04-13 20:35
wow sema start sis
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 01 - பிரேமா சுப்பையாரவை 2019-04-12 20:59
Totally agree with Adharva Jo!
Presentation is power packed!
Keep rocking!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 01 - பிரேமா சுப்பையாAdharvJo 2019-04-12 17:58
Colourful start prema ma'am 😍😍😍 first epilaye ponmagal coming with vetri :dance: lively sequence and who is this sakthi telling ulagm vattamnu :Q: heroin sema jolly type ah irukanga contrast mom strick officer range la irukangala chips sapidarudhu Oru kuttrama :D heroin from village and hero vadanatukarana?? :grin: :cool: Selva Alva :P ivaru aluva mathiri sweet bro or rubber bro therindhu kola waiting. Thank you and :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top