(Reading time: 12 - 23 minutes)

“நஸீம் இவள் சிவகங்காவதி தானே!!!

“ரத்தன் நீ இவளை அறிவாயா??”

“ஆம் இவள் என் சகோதரி போன்றவள் என் உயிரைக் காப்பாற்றியவள்.”

“சிவகங்காவதி நான் ரத்தன்சிங்..என்னை நினைவிருக்கிறதா?”

“அண்ணா!!!தாங்கள் இந்த தேசத்திலா இருக்கிறீர்கள்.”

“ஆம் சிவகங்காவதி.அண்டை சிற்றரசின் அரசன் நான்.உனை மீண்டும் ஒரு முறையேனும் சந்திக்க வேண்டும் என்று எப்போதும் எண்ணிக்கொண்டே இருப்பேன் ஆனால் இப்படி ஒரு சூழலில் உனை காண்பேன் என்று நினைக்கவில்லை.”

ஒன்றும் கூறாமல் அமைதியாய் தலை குனிந்தவள் ஒன்றும் கூறாமல் நிற்க நஸீம் ரத்தன்சிங்கிடம் விவரம் கேட்டான்.

“தென்னகத்திற்கு ஒரு முறை பயணம் மேற்கொண்டிருந்தேன் நஸீம். அப்போது இவர்களின் நாட்டிற்கு அருகில் இருக்கும் புண்ணியதலத்திற்குச் சென்றிருந்தேன்.அது சற்றே புதர்கள் நிறைந்த பகுதியாய் இருந்தது.அப்படிபட்ட அந்த இடத்தை கடந்து வந்த நேரம் மிகக் கொடிய விஷயத்தைக் கொண்ட சர்ப்பம் எனைத் தீண்டிவிட்டது.

என்னுடன் வந்த என் வீரர்களுக்கும் என்ன செய்வதென ஒன்றும் புரியாத நிலை.மொழி தெரியாத இடம் வேறு அப்போது தான் வழிப்போக்கர் ஒருவரின் உதவியால் இவளைப் பற்றி தெரிய வந்து என்னை அங்கு அழைத்துச் சென்றனர்.

விடயத்தை அறிந்து எந்த ஒருதயக்கமும் இன்றி துரிதமாய் செயல்பட்டு விஷத்தை முறியடிக்கத் தேவையான மருந்தை கொடுத்து உதவினாள்.இருநாட்கள் அவளின் அரண்மனையிலேயே வைத்து உடல் பரிபூரண நலம் பெறும் வரை அவர்களில் ஒருவனாய் எனைப் பார்த்துக் கொண்டனர்.

அனைத்தையும் விட ஆச்சரியமான விடயம் அவள் பேசிய நம் தேசத்து மொழி தான்.ஆச்சரியம் தாளாமல் அவளிடம் கேட்டபோது தான் கூறினாள் பாரதத்தின் பல திசைகளின் தேச மொழிகள் உட்பட பல கலைகள் கற்றுத் தேர்ந்தவள் இவள் என.

நடனம்,இசை,தற்காப்புப் பயிற்சி,யானையேற்றம்,குதிரையேற்றம்,யாழ், என பட்டியல் இன்னும் இன்னும் நீளம் இவற்றில் மாயவித்தை கூட அடக்கமென்றால் பார்த்துக் கொள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "சுஷ்ருதா..." - வித்தியாசமான காதல் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

அங்கிருந்த இரண்டு தினங்களில் எனை மேலும் மேலும் பல அதிசயங்களை காணச் செய்தவள் என்றுதான் கூற வேண்டும்.தெனக்கத்தில் இருந்து பெண் ஒருத்தி கைதியாய் வந்திருக்கிறாள் என்று கேள்விப்பட்டேன் ஆனால் அது இவளாய் இருப்பாள் என்று துளியும் எண்ணவில்லை.

நிச்சயம் அவள் நினைத்திருந்தால் உன்னிடம் இருந்து எப்போதோ தப்பித்திருக்க முடியும் நேர் வழியிலோ அல்லது குறுக்கு வழியிலோ.ஏனெனில் கூடுவிட்டு கூடு பாயும் திறமையும் அவளிடத்தில் உண்டு நஸீம்!!”

“இதை அவனே அறிந்திருந்தான் தானே நிச்சயமாய் அவளால் இங்கிருந்து தப்பித்திருக்க முடியும் தான் ஆனாலும் ஏதோ ஒரு காரணத்தால் அமைதி காக்கிறாள் என்றே யூகித்திருந்தான்.ஒரு வேளை அவனை காப்பாற்றியதற்கு கூறிய காரணமே இதற்கும் இருக்கலாம் என்று நினைத்திருந்தவன் இப்போது ரத்தன் சிங்கும் அதையே கூற ஒன்றும் பேசாது சலனமற்ற முகத்தோடு அவளைப் பார்த்து நின்றான்.”

“சொல்லம்மா ஏன் இங்கே இப்படி ஒரு வாழ்க்கை நீ எது செய்தாலும் அதில் காரணமிருக்கும் என்று நிச்சயம் நம்புகிறேன் கூறு?!”

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை அண்ணா. என் வாள் வீச்சைப் பற்றி உங்களுக்கேத் தெரியும்.எதிரி நாட்டு தலைவன் யாராய் இருப்பினும் வாள்ப் பரீட்சையில் வென்று தப்பித்து விடலாம் என்று எண்ணி தான் தந்தைக்குப் பதில் நான் களம் கண்டேன்.ஆனால் அதில் தோற்றுவிட்டேன்.

எந்த ஒரு போட்டியிலும் தோற்றவர்கள் வெற்றி பெற்றவர்களுக்குஅடிபணிந்து தானே ஆக வேண்டும்.அதுதான் தர்மமும் கூட.அதனால் தான் இந்த சிறை வாசத்தை விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.”

“உன் நேர்மையைப் பற்றி அறிந்தும் இதை நான் கேட்டிருக்கக் கூடாது தான்.இருப்பினும் உனை இனியும் இந்த கோலத்தில் என்னால் பார்க்க இயலாது.நான் நஸீமிடம் அனுமதி கேட்கிறேன் ,நீ என்னோடு வந்துவிடு.”

“அண்ணா?!”

“முடியாது என்று மட்டும் கூறாதே சிவகங்காவதி நீ பெயருக்காக எனை தமையன் என்கிறாயா என்று எனக்குத் தெரியாது ஆனால் நான் எப்போதும் உனை என் தங்கையாகவே எண்ணுகிறேன்.”

“அண்ணா பெரிய வார்த்தை எல்லாம் எதற்கு இதில் நான் முடிவெடுக்க ஒன்றும் இல்லாத போது,என்னால் என்ன கூற முடியும்?”

“நஸீம் உன் நண்பனான எனக்காக இந்த விருந்தோடு சேர்த்து எனக்கான வெகுமதியாய் என் தங்கையை விடுவித்து என்னோடு அனுப்பிவிடு!!”

“ரத்தன்சிங் நட்பு வேறு அரசனின் கடமை வேறு!!”

“புரிகிறது நஸீம் ஆனால் நான் நண்பனாய் மட்டுமே உன்னிடம் வைக்கும் கோரிக்கை இது.எனக்காக இதை மட்டும் செய்ய மாட்டாயா?”

“ரத்தன் நீ எனை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்குகிறாய்.முதலில் விருந்தினனாய் உணவருந்து மற்றவற்றை பிறகு பேசிக் கொள்ளலாம்.”,என்று அத்தோடு முற்றுப்புள்ளி வைத்து நகர்ந்தான் நஸீம். 

தொடரும்...

Episode 08

Episode 10

Go to Sivagangavathi story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.