Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 06 - பூர்ணிமா செண்பகமூர்த்தி - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 06 - பூர்ணிமா செண்பகமூர்த்தி

Idho oru kadhal kathai

முதனுக்குக் கண்ணில் தூக்கம் மறைந்து, கதையின் சுவாரசியம் ஈர்க்கவும் தொடர்ந்து படித்துக் கொண்டு இருந்தான். நேரம் போவதைக் கவனிக்கவில்லை.

வெள்ளைத்தாமரை இதழ்-5     இதோ ஒரு காதல் கதை  பகுதி-5

"பிசிக்ஸ் லேப் மதியம் ஒரு மணிக்கு தானே, அதுக்குள்ள வேகமா இன்ஜினியரிங் மெக்கானிக்ஸ் அசைன்மென்ட் முடிச்சிரலாம்” கண்மணியிடம் சொல்லிக்கொண்டு இருந்தாள் ரம்யா.  கண்மணி அதை கவனித்ததாகவே தெரியவில்லை.. மும்முரமாக வேறு எதோ எழுதி கொண்டு இருந்தாள். என்ன எழுதிட்டு இருக்க கண்மணி..? சொல்ல முடியாத விஷயம்டி. கொஞ்சம் பர்சனல். சரி நீ உன் பர்சனல் விஷயத்தைக் கவனி. நான் போய் மதி சாப்பிட்டாளானு பார்த்துட்டு வர்றேன்..

ஹே மதி. இன்னிக்காவது ஒழுங்கா சாப்பிட்டியா.. ?

இல்ல ரம்மி..

ஏண்டி சாப்பிடல?

எனக்கு ஒரே அப்பா ஞாபகமாவே இருக்குடி!

இன்னிக்கு புதன்கிழமை, வெள்ளிகிழமை சாயங்காலம் ஊருக்கு போகப் போற. அப்பாவைப் பார்க்கப் போற. அப்புறம் என்னடி..? இதுக்கெலாம் கவலைப்படாதடி ..

சரி வா! காண்டீன்ல போய்  வேகமா சாப்பிட்டு வரலாம். மத்தியானம் பிசிக்ஸ் லேப் இருக்குல!.

மதிய உணவு இடை வேளை  முடியும் நேரம், காண்டீனில் இருந்து மதியும் ரம்யாவும் நடந்து வந்து கொண்டு இருந்தார்கள்.

மதி " ரம்யா நீ அந்த கண்மணி கூட பழகுறது எனக்கு சுத்தமா பிடிக்கல"

ஏன் மதி?ஏன் அப்படி சொல்ற?

அவ சுத்த மோசம்டி..அந்த ஒல்லியான உயரமான பையன் , அவன் பேர் கூட கார்த்திக். அவனும் அவளும் லவ் பண்றாங்க..எனக்கு லவ்னாலே புடிக்காது!"

சீ சீ சீ அப்படிலாம் இல்லடி அவ!அவங்க ஜஸ்ட் ஸ்கூல் ப்ரெண்ட்ஸ் தான்!

ஸ்கூல் ப்ரெண்ட் கிட்ட பேசுற மாதிரி அவளைப் பார்த்தால் தெரியலேயே!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா வெயின் "நெஞ்சோடு கலந்திடு உறவாலே..." - காதல் கலந்த குடும்பத் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

இல்ல மதி கண்மணி அப்படி பட்ட பொண்ணு கிடையாது. அவங்க ரெண்டு பேரும் சின்ன வயசில் இருந்து சேர்ந்து படிச்சிருப்பாங்க. அதான் அவ தினமும் பேசுறா. நீ தப்பா  புரிஞ்சு கிட்ட மதி!

நீ தான் ரம்மி அவளைப் பத்திப் புரிஞ்சிக்காமல் இருக்கிற!.காலேஜ் முழுக்க அவங்க காதல் கதை தெரியும்.நீ வேணா அவகிட்டவே கேளு."

அவ கிட்ட கேட்கிறதா?ச்சே! ச்சே!.  இந்த விஷயத்தை எப்படி நான் அவகிட்ட நேரடியா கேட்கிறது?

அப்படினா நான் சொல்றதயாவது நம்பு. நான் மட்டும் சொல்றேன்னு நினைக்காத, எல்லாரும் தான் சொல்றாங்க. எல்லாரும் சொன்னாலும் நீ நம்ப மாட்டியா ?

எல்லாரும் சொல்றாங்கன்னு  ஒரு விஷயத்தை நம்பிட முடியுமா மதி ?

நம்பாட்டி போ. என்னவோ பண்ணு நீ !

ஏன் நம்மோட கிளாஸ்ல கூட தினேஷ்னு ஒருத்தன் டெய்லி அவன் ஸ்கூல் கிளாஸ்மேட்  கீதா கிட்ட பேச வருவான் தெரியுமா?

தினேஷ் ஆ ? அது யாரு.நீ என்ன புது கதை சொல்ற? அது யாரோ எனக்குத் தெரியாது. ஆனால், கண்மணி பத்தி நான் சொன்னது தான் நிஜம். அவகிட்ட கேளு ரம்மி.. அப்போ தான் நீ நம்புவ!

சரி மதி ! நான் அவகிட்டயே கேட்கிறேன் !

மறுபடியும்   சொல்றேன் ரம்மி, நீ அந்த கண்மணி கூட பழகுறது எனக்கு புடிக்கல நான் சொல்றத கேளுடி.. 

சரி சரி வா..பிசிக்ஸ் லேப் போறதுக்கு டைம் ஆகிடுச்சு..போலாம் வா..

வகுப்பறையை நெருங்கினார்கள். அங்கே கண்மணியும் கார்த்திக்கும் பேசி கொண்டு இருந்தார்கள். மதி ஓரக்கண்ணால் ரம்யாவுக்குச் சமிக்ஞை காட்டினாள். கண்மணி எழுதிக் கொண்டிருந்த காகிதத்தை, வகுப்பு ஜன்னல் வழியே கார்த்திக்கிடம் கொடுத்துக் கொண்டு இருந்தாள் கண்மணி.

மதி சொன்ன மாதிரி இருவருக்கும் இடையில் காதல் தானோ? ஒரு வேளை, நோட்ஸ் எழுதி தருகிறாளா? என்னவா இருக்கும்? நல்ல பொண்ணு கண்மணி! மதி சொல்றமாதிரிலாம் இருக்காது.  சரி கண்மணி லவ் பண்ணா மத்தவங்களுக்கு என்னவாம். அப்போ லவ் பண்ணினா முதுகுக்குப் பின்னாடி இத்தனை பேர் தப்பாப் பேசுவாங்களோ ?

கல்லூரி பேருந்தில் ஜன்னல் இருக்கைக்கு செல்லமாக சிறு சண்டை போட்டு.ரம்யாவுக்கே விட்டு கொடுத்தாள் கண்மணி..

மாணவர்கள் நடந்து சென்று கொண்டிருப்பதை பார்த்தாள் ரம்யா, ராபின், கார்த்திக், தினேஷ் சேர்ந்து போய் கொண்டிருந்தார்கள்..பொறுக்கி! என்று முணுமுணுக்க

யாரை ரம்யா திட்டுற?

எல்லாம் அந்த தினேஷ் தான்டி..

 •  Start 
 •  Prev 
 •  1  2 
 •  Next 
 •  End 

About the Author

Poornima ShenbagaMoorthy

Latest Books published in Chillzee KiMo

 • Katrin kanalKatrin kanal
 • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
 • Maayakkottai - MinnalMaayakkottai - Minnal
 • Theeradha KadhalTheeradha Kadhal
 • ThazhamPoove Vaasam VeesuThazhamPoove Vaasam Veesu
 • Kids Fun StoriesKids Fun Stories
 • Unnai ondru ketpenUnnai ondru ketpen
 • Yaar arivaarYaar arivaar

Completed Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 06 - பூர்ணிமா செண்பகமூர்த்திShanthi S 2019-04-21 23:00
nice update Poornima 👌👌

Pavam Ramya maattikitta polaruke
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 06 - பூர்ணிமா செண்பகமூர்த்திநன்றி! 2019-04-22 07:48
ரம்யாவின் நிலைமையைத் தெரிந்து கொள்ளும் ஆவலைப் பார்த்து கதை உங்களை ஈர்த்தது கண்டு மிக்க மகிழ்ச்சி :thnkx: தோழி! நன்றி!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 06 - பூர்ணிமா செண்பகமூர்த்திmadhumathi9 2019-04-21 15:58
facepalm ramya avanga ammaavidam maatti kondaale? Enna panna pogiraal? Samaalikkavum mudiyaathu :Q: adheetha aarcathai thoondugirathu kathai.egarly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 06 - பூர்ணிமா செண்பகமூர்த்திநன்றி! 2019-04-22 07:47
தங்களின் கருத்துக்கும் அன்பான ஊக்கத்திற்கும் மிக்க நன்றி தோழி! :thnkx: ஆர்வத்துடன் அடுத்த பகுதிகளை எதிர்பார்க்கும் உங்களின் ஆவலைப் பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன் :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 06 - பூர்ணிமா செண்பகமூர்த்திAdharvJo 2019-04-21 10:37
:D :P matikitangala facepalm no poi telling :yes: aunty Oda reaction enavaga irukkum :Q: seeing sathya?? Enapa idhu love panuravnga ellam ketavangala oh god 😍😍 cool and interesting update ma'am 👏 👏👏 👏 but who is this telephone payan?? Look forward to read next update. Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 06 - பூர்ணிமா செண்பகமூர்த்திநன்றி! 2019-04-22 07:46
தங்களின் கருத்துக்கும் அன்பான ஊக்கத்திற்கும் மிக்க நன்றி தோழி! :thnkx: :thnkx: Ramya samalichala illai mattikittala? seekirame solren :)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top