(Reading time: 10 - 19 minutes)

ஆம் அந்த சம்பவத்தன்று தான் அவனை பற்றி அவளுக்கு தெரியும், “நான் உன்னோட காலேஜ் தான், ஆனா அங்க பிஜி பண்றேன்.. என்னோட பேர் அஜய்..” என்று அப்போது தான் அவனை அவளிடம் அறிமுகப்படுத்திக் கொண்டான்.

அதற்கு முன்பு அவனை அவள் பார்த்ததாக ஞாபகத்திற்கு கூட வரவில்லை, ஆனால் அவன் உன் பின்னாலேயே சுற்றுவேன் என்று சொல்கிறான், எப்படி?

“பர்ஸ்ட் டைம் உன்னை பார்த்தப்பவே என்னை அறியாமலேயே என்னோட மனசை நீ திருடிக்கிட்ட.. எப்படி உன்னை எனக்கு பிடிச்சதுன்னே தெரியல.. உன்னோட கேரக்டருக்கும் என்னோட கேரக்டருக்கும் செட் ஆகாதுன்னு தோனும்.. அதேபோல் உன்னோட அந்தஸ்துக்கு எனக்கு ஏணி வச்சாலும் எட்டாது.. அதனால் உன்னை இம்ப்ரஸ் செய்யற கிறுக்குத்தனமெல்லாம் நான் செஞ்சதில்ல.. ஆனா உன்னை ஃபாலோவ் பண்ணிக்கிட்டே இருப்பேன்.. உன்னோட பின்னாடி சுத்தறதுக்கு கூட ஒரு ரேஞ்ச் இருக்கணும்னு நீ நினைச்சியான்னு தெரியல.. அதான் நான் உன் பின்னாடி சுத்தினது உனக்கு தெரியல போல..” என்றதும் அவள் முகம் வாடிவிட்டது.

“சாரி அன்னைக்கு நிலையை தான் நான் சொன்னேன்.. அப்படி உன் பின்னால சுத்தினதுல தான் அன்னைக்கு உன்ன அந்த பசங்கக்கிட்ட இருந்து காப்பாத்த முடிஞ்சுது.. அதுக்கு முன்னமே என்னோட மனசை உன்கிட்ட திறக்க நான் நினைச்சதில்லை.. அப்படியிருக்க அதுக்குப்பிறகு உன்கிட்ட நான் என்னோட காதலை சொன்னா, உன்னை காப்பாத்தினதுக்கு பதிலா உன்கிட்ட இருந்து உன்னோட காதலை எதிர்பார்க்கிறதா நீ நினைச்சிடக் கூடாது.. எனக்கும் அப்படி தோனக் கூடாது.. அதான் சைலண்டா இருந்தேன்..

அப்புறம் ரெண்டுப்பேருக்குமே படிப்பு முடிஞ்சு விலகி போயிட்டோம்.. உன்னோட சில ப்ரண்ட்ஸ் கிட்ட கேட்டும் நீ எங்க இருக்கேன்னே தெரியல.. ஆனா இத்தனை வருஷம் கழிச்சு உன்னை பார்ப்பேன்னு எதிர்பார்க்கல.. இதுல உன்னோட கல்யாண விஷயமும் கேள்விப்பட்டு என்னோட காதலை எனக்குள்ளேயே புதைச்சிட நினைச்சேன்..” என்று அவன் பேசிக் கொண்டே போக,

அவள் ஒருமாதிரி பரவச நிலையில் இருந்தாள். அந்த சம்பவத்திற்கு முன்பு அவன் யாரென்றே தெரியாமல் இருந்திருக்கிறாள். ஆனால் அவன் அவளை காதலித்துக் கொண்டிருந்திருக்கிறான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "நீயிருந்தால் நானிருப்பேன்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

அவனை அந்த சம்பவத்திற்கு பிறகு இரண்டு மூன்று முறை பார்த்திருப்பாள். என்ன இருந்தாலும் அவளும் அந்த ஆண்களை நம்பி சென்றது தவறு தானே, ஆனால் அதைப்பற்றியெல்லாம் அவன் கூறி அவளை காயப்படுத்த முயன்றதில்லை.

அப்போதெல்லாம் அவன் பேச்சில் தெரிந்தது அவள் மீது உள்ள அக்கறை தான், அது தான் அவனை விமான நிலையத்தில் சந்திக்கும் வரை அவனை மறக்காமல் நினைக்க வைத்திருந்தது. இத்தனை வருடங்களில் அவனுடன் நட்பாக இருந்திருக்கலாம் தான், ஆனால் வெளியில் அவளை காயப்படுத்தவில்லையென்றாலும் மனதிற்குள் அவளை என்னவாக நினைத்திருப்பானோ என்று நினைத்து தான் அவனை விட்டும் ஒதுங்கியிருந்தாள்.

மற்றப்படி அவன் மேல் அப்போது அவளுக்கு காதலெல்லாம் வரவில்லை, ஆனால் அப்போது தானே தவிர, இப்போது அப்படியில்லை, தந்தை ஏற்பாடு செய்த திருமணம் அவளுக்கு பிடிக்கவில்லை, இருந்தும் அதை ஒத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம், முன்பு அவள் எப்படி இருந்தாள் என்பதை யாராவது அவள் திருமணத்திற்கு பின் பேசி அதனால் ஏதாவது பிரச்சனை வருமோ என்பது மட்டும் தான் முன்பு இருந்த பயம்,

ஆனால் இப்போதோ அவள் ஏன் திருமணத்திற்கு முன்பே அஜயை பார்க்கவில்லை. சாத்விக்கை மணந்துக் கொள்ள சம்மதித்துவிட்டாள்.. ஆனால் அஜய் தான் இப்போதெல்லாம் அவள் நினைவுகளோடு கலந்து அவளை இம்சை செய்துக் கொண்டிருந்தான். தன் மனம் அஜயை நினைக்க ஆரம்பித்துவிட்டது, அது தவறு என்று புத்திக்கு தெரிந்தாலும், மனதிற்கு புரியவில்லை, இப்படி ஒரு தவிப்போடு அவள் இருக்க, முன்பே தன்னிடம் அவன் காதலை சொல்லியிருக்க கூடாதா? என்று மனம் நினைத்தது.

அவள் மனதை அறிந்தவன் போல், “முன்ன சொல்லக் கூடாதுன்னு நினைச்சு அமைதியாகிட்டேன்.. இப்போ உனக்கு கல்யாணம் முடிவாகியிருக்கும் சமயத்தில் அதை சொல்றதே தப்புன்னு நினைச்சேன்.. ஆனா இப்போ தைரியமா சொல்றேன்.. ஐ லவ் யூ.. என்னை கல்யாணம் செய்துக்கிறீயா?” என்று கேட்டான்.

அவள் திகைத்து அவன் முகத்தை பார்த்து, “இன்னைக்கு தான் அப்பா இன்னும் ரெண்டு நாளில் சாத்விக்கிற்கும் எனக்கும் நிச்சயம்னு சொன்னாரு.. இப்போ வந்து இப்படி சொல்றீங்களே..” என்று கேட்க,

“சாத்விக்கிற்கு இந்த கல்யாணத்துல சுத்தமா இன்ட்ரஸ்ட் இல்லன்னு தெரியுது.. இந்த கல்யாணம் நடந்தா உனக்கு கண்டிப்பா சந்தோஷமா இருக்காது சுஜா.. அதுவே என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டா, உன்னை நான் ரொம்ப சந்தோஷமா வச்சிப்பேன்..” என்று அவள் கைகளை பிடித்துக் கூறினான்.

“அப்பாக்கிட்ட சாத்விக்கை கல்யாணம் செய்ய ஒத்துக்கிட்டேன்.. இதோ நிச்சயத்துக்கான ஏற்பாடும் நடக்குது.. இப்போ எப்படி இதை நான் வேண்டாம்னு சொல்றது?” அவள் கேட்க,

“ஏன் வேண்டாம்னு சொன்னா என்ன ஆகும்?” என்றுக் கேட்டது அஜய் அல்ல, யாரென்று இருவருமே பார்க்க, முகத்தில் மூடியிருந்த துப்பட்டாவை அகற்றியப்படி அவர்கள் அருகில் இருந்த இருக்கையில் இருந்து எழுந்து வந்தாள் மதுரிமா.

மையல் தொடரும்..

Episode # 20

Episode # 22

Go to Maiyalil manam saaintha velai story main page

{kunena_discuss:1211}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.