Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 08 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 08 - சாகம்பரி குமார்

Yaanum neeyum evvazhi arithum

பூமி…!

மலை சாரல்… ஆர்ப்பரிக்கும் அருவி.. குளிர் காற்று வீசும் காலை நேரம்… அருவிகரையை ஒட்டி அமைந்த அரச மரத்தடியில் சிம்ஹன் தியானம் செய்து கொண்டிருந்தான்.

அதாவது தியானம் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தான். மனதில் ஹனிகா  பற்றிய கவலைதான் இருந்தது. அவளுக்கு எப்படி உதவுவது?

அவனால் ஜேக்கை சந்திக்க முடியவில்லை! எல்லாம் இந்த பெரிய குருஜியால் வந்தது..

அவனுடைய திட்டப்படி ஜேக்கை சந்திக்க வார்ம் ஹோல் பயணத்தை ஆரம்பிக்க நினைக்கும்போது.

“சிம்ஹா.. பெரிய குருஜி வந்திருக்கிறார். “ அஜின் தெரிவித்தான்.

பரமானந்தமெய் சித்தர் வந்திருக்கிறாரா?. பேருக்குதான் அவர் பெரிய குருஜி. ஆனந்தமெய் சித்தரின் அண்ணன்.. கொஞ்சம் ஆன்மீக அதிகளம் செய்யும் ரகம்!

சிம்ஹனுக்கு அவரை பிடிக்காது. சிம்ஹனுடைய அறிவியல் தேடல் அவருக்கு பிடிக்காது.

“அனைத்திற்கும் விளக்கம் கேட்கக் கூடாது மகனே. இந்த குழந்தையை போல் குரு சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.” என்று அஜினை காட்டி டபாய்ப்பார்.

அஜின் அப்படியே கைகட்டி வாய் பொத்தி செமி சர்கிள் போட்டு குனிந்து நிற்பான்.

இதனால் அவர் வந்தாலே ஓடிப்போய் தியானத்தில் அமர்ந்து கொள்வான்.

ஆனாலும் விடாமல் அவனை அழைத்துக் கொண்டு இருப்பார். எனவே அவனால் மின்வரோ பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை.

தியானத்தில் இருந்து கண் விழித்து கொண்டவன் போல் பாவனை செய்தவன்..

“இதோ வருகிறேன்” என்று எழுந்து கொண்டான்.

பரமானந்தமெய் சித்தரை பார்த்து கும்பிடு போட்டு குரு உபதேசம் கேட்டு மனதிற்குள் கொட்டாவி விட்டு வெளியே வந்தபோது நேரம் கடந்திருந்தது.

“உங்களுக்கு பெரிய குருவை பிடிக்காதா?”

ஆகாயத்திலிருந்து வந்து குதித்திருந்த அந்நியன்தான் கேட்டான்.

“அப்படின்னு இல்லை… எனக்கு வேறு ஒரு அவசர வேலை இருக்கிறது. அதனால் குருவின் பேச்சில் கவனம் வைக்க முடியவில்லை.” சிம்ஹன் பேசிக்கொண்டே நடக்க… அவனும் கூடவே வந்தான்.

சிம்ஹனுடைய குடிலில் நுழைந்தவன் அங்கிருந்த சூழலை கவனித்தான்.

“நான் இன்றுதான் முதல்முறையாக இங்கு வருகிறேன். “

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா வெயின் "மையலில் மனம் சாய்ந்த வேளை..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“ஆமாம்.. இங்கு உட்காருங்கள்.” என்று உபசரித்தான்.

“இது ஸ்பேஸ் ஷட்டில்தானே” சிம்ஹன் வரைந்து வைத்திருந்த பென்சில் ஸ்கெட்சை. பார்த்து கேட்டான்.

மின்வரோவின் ஸ்பேஸ் ஷட்டிலை மேலோட்டமாக சிம்ஹன வரைந்திருந்தான். மின்வரோவின் ஷட்டில் பற்றி இவனுக்கு எப்படி தெரியும்?

“ எப்படி என்று தெரியவில்லை. ஆனால் இது எனக்கு பரிட்சயமானதாக தோன்றுகிறது.”

“இதுபற்றி உங்களுக்கு என்ன தெரியும்?”

“இது ஸ்பேஸ் ஷட்டில்.. வெளிப்புறம் அலுமினியம் மற்றும் வெப்பதடுப்பு தகடுகள் கொண்டு அமைக்கப்பட்டது. வளிமண்டலத்தை கடந்து அண்டவெளியில் விரையும்போது அதீத வெப்பம் உண்டாகும். அது ஷட்டிலை எரித்து விடாமல் இருக்க இவ்வாறு அமைக்கபட்டுள்ளது.”

விண்வெளி இயற்பியல் விஞ்ஞானியான சிம்ஹனுக்கு இது தெரியும். ஆனால் பேச்சில் குறுக்கிடாமல் கவனித்தான். அவனுக்கு உபயோகமான தகவல் கிடைக்கும் என்று காத்திருந்தான்.

“இந்த மாடல் ஷட்டிலில் மிஸைல் லாஞ்சர்  இருக்கும். போர்முனையில் பயன்படும்.  ஸ்பேஸின் வெப்பம், ப்ரஷர், காஸ்மிக் அலைகளின் தாக்கம் இவற்றை தடுக்கும் வசதி உடையது.

 “அப்புறம் உனக்கு வேறு என்ன தெரியும்?”

“இது ஃபைட்டர் ஷிப்… ஏர்லாக் வசதிகள் கிடையாது. ஒருவர் மட்டுமே பயணிக்க கூடிய கேபின்தான். எனவே அதில் பயணம் செய்யும் வீர்ர் விண்வெளி பயணத்திற்குரிய உடையுடன் இருக்க வேண்டும்.”

[ஏர்-லாக் என்பது விண்வெளியின் வெப்பத்தையும் அழுத்தத்தையும் தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். வெளிப்புற அட்மாஸ்பியர் உள்ளே வராமல் தடுத்து வீர்ர்கள் இயல்பாக இருக்கும் வசதியை தரும்]  

“சாதாரணமாக இதுபோன்ற ஷட்டில்களில் இருவர் பயணம் செய்யும் வகையில் அமைக்கப்பட்ட க்ரு கேபின் இருக்குமே. அது ஏர்-லாக் வசதியுடன் இருக்குமே.”

“ஷட்டிலின் வேகத்தை அதிகரிக்க எடையை குறைத்தாக வேண்டும். எனவே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டன.”

“ஓ…”

“இதனால் ஒரு சிக்கல் ஏற்படும். அந்த உடை எவ்வளவு  நேரம் செயல்படுமோ அதுவரைதான் அவர்கள் ஷட்டிலில் இருக்க முடியும். ஆக்ஸிஜன் குறைந்தாலோ… ப்ரஷர் மாறினாலோ அவர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு விரைந்தாக வேண்டும்.”

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 08 - சாகம்பரி குமார்saaru 2019-04-29 22:22
Super ji
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 08 - சாகம்பரி குமார்AdharvJo 2019-04-23 22:04
Fabulous Ms sagampari :hatsoff: screen play is simply superb and very neat presentation ma'am 👏👏👏👏 I have no comments on your dialogues :D dhool kalakuringa. Why this mittisa ippadi panuranga 😈 I thought that man would be hani's bro is he pretending :Q: indha aliens sema kiladinga :dance: enama sketch podudhunga...for a second thought simhan kuda indha alien elika podura drama aga irukkumn...thank God he saved :yes: waiting to see what happens next ..thank you and keep.rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 08 - சாகம்பரி குமார்Sahithyaraj 2019-04-23 20:12
Very very interesting. Eagerly waiting for Tuesday evening. The day doesn't complete without the update :hatsoff: sis what a dedicated work. :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 08 - சாகம்பரி குமார்madhumathi9 2019-04-23 18:48
wow nice epi.hani ealianidamirunthu thappithathu magizhchi.nallavelai simhan thakkanerathil udhavi seithathaal hani escape. Waiting to read more. :thnkx: 4 this epi. (y) :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top