Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - வேலண்டைன்ஸ் டே... - 12 - மகி - 5.0 out of 5 based on 3 votes
Pin It

தொடர்கதை - வேலண்டைன்ஸ் டே... - 12 - மகி

valentines

குழப்பங்கள்.. இது ரொம்ப வித்தியாசமானது.. எல்லாருக்கும் இது கண்டிப்பா வரும்.. எல்லாரையும் இது கண்டிப்பா ஆட்டி படைக்கும்.. எல்லாத்தையும் தெளிவா முடிவெடுக்கனும் தெளிவா செய்யனும்ன்னு யோசிக்கும் போது தான் முதலில் குழப்பமானது உருவாகுது.. கண்டிப்பா குழப்பம் இல்லைன்னா தெளிவு இல்ல..

நாம கேள்வி பட்டு இருக்கோம் தானே.. நாரதர் குழப்பம் நன்மையேன்னு.. அதே போல தான் அபி அப்பரம் ஆகாஷ்ன் குழப்பங்களிலும் நன்மை நடந்தா ரொம்ப சந்தோஷம்..

மனுவை தேடி ஆகாஷ் சென்றான்.. இந்த பொண்ணு என்ன பன்னீட்டு இருக்கோ.. நானும் இங்க எல்லா பக்கமும் தேடியிட்டேன் ஆனா காணம்.. புது இடத்துல தெரியாம எங்கையாவது போயிட்டாளா.. இவ பன்னர சேட்டைய சமாளிக்கரது ரொம்ப கஷ்டமா இருக்குப்பா.. இப்போ இவள எங்க போயி தேடரது..

அம்மூ.. அம்மூ.. எங்க இருக்க.. அம்மூ விளையாடத.. என்கிட்ட வந்திருடாம்மா.. என ஆகாஷ் சுற்றும் தேடிவிட்டு மீண்டும் அவன் ரூமிற்கு வந்தான்..

ஆகாஷ் கர்னிய காணம்.. எங்க அவ..

இல்ல அபி.. நான் அம்மூவ எல்லா பக்கமும் தேடிட்டேன்.. எங்க போனான்னு தெரியல்ல.. சரி ஒருவேள அவ ரூம்ல இருப்பான்னு தான் இங்க வந்தேன்.. எங்க போயிட்டான்னு தெரியல்ல அபி.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு..

ஏ.. அவ இங்க தான் எங்கையாவது இருப்பா.. நீ எதுக்கு இவ்வளவு டென்சனாகர..

அம்மூ என்கிட்ட சொல்லாம வெளிய எங்கையும் போகமாட்டா.. இப்போ இவ்வளவு நேரமும் அம்மூ எங்க இருக்கான்னு தெரியல்ல.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு அபி.. மிகுந்த கவலையிலும் பயத்திலும் ஆகாஷ் பேசினான்..

டேய்.. அவளுக்கு எதுவும் ஆகியிருக்காதுடா.. நீ தேவையில்லாம பயப்படர.. அவ என்ன குழந்தையா.. அவளவிட்டா இந்த ஊரையே கூறுபோட்டு வித்துருவா.. நீ என்னமோ பயப்படர..

அபியின் எந்த வார்த்தைகளும் ஆகாஷ்க்கு நம்பிக்கை கொடுக்கவில்லை..

என்ன தான் ஆகாஷ்க்கு அபி நம்பிக்கை வார்த்தைகளை கொடுத்தாலும்.. உள்ளுக்குள் அபிக்கும் பயம் இருக்கத்தான் செய்தது.. இவ்வளவு நேரம் கர்னி தனியா இருக்கமாட்டா.. எங்க போயிருக்கா.. என்ன ஆச்சுன்னு தெரியல்லையே.. ஆகாஷ்க்கு தெரியாம கர்னி கண்டிப்பா எங்கையும் போயிருக்கமாட்டா.. அப்போ அவளுக்கு எதாவது.. ச்சா.. அப்படி எல்லாம் எதுவும் இருக்காது.. அடியே கர்னிகுட்டி.. எங்கம்மா இருக்க.. இங்க எல்லாரும் நீ இல்லாம ரொம்ப கவலையா இருக்கோம்.. சீக்கரம் வந்திரு கர்னிகுட்டி.. தன்னையும் மீறி அவனது மனம் கர்னியின் நலனுடன் சிறிது காதலும் கொண்டது..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சாகம்பரியின் "யானும் நீயும் எவ்வழி அறிதும் " - காதல் கலந்த Sci-fi தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

ஆகாஷ்.. மச்சி.. இங்க பாருடா.. அவளுக்கு எதுவும் ஆகி இருக்காதுடா.. நீ ஏன்டா இப்படி மூஞ்சிய வச்சிருக்க.. அவ அவளாவே வந்திருவா மச்சி..

எனக்கு அம்மூவ இப்பவே பாக்கனும் போல இருக்கு.. என்னமோ என் மனசுக்கு நெருடலாவே இருக்குடா.. அவள எந்த கெட்டதும் நெருங்காம இருக்கனும்.. மாமா என்கின்ட அம்மூ எங்கன்னு கேட்டா நான் என்னடா பதில் சொல்லுவேன்.. என்னால அவளை சரியா பாத்துக்க கூட முடியலையான்னு கேட்டா நான் என்னடா சொல்லரது..

ஏய்.. அவ வந்திருவாடா..

அம்மூக்கு எதுவும் இருக்காதுல்லடா.. மிகுந்த கவலையான குரலில் ஆகாஷ் கேட்டான்..

மிகப்பெரிய நிறுவணத்தையே ரொம்ப திறமையா பாத்துக்கர ஒருத்தன்.. இப்படி பேசரத பாக்கும் போது அபிக்கு கஷ்டமாக இருந்தது..

டேய்.. அவளுக்கு எதுவும் ஆகியிருக்காதுடா.. நீ எவ்வளவு பெரிய பிஸ்னஷ்மேன் இப்படி பேசரத பாக்க கஷ்டமா இருக்கு மச்சி..

எனக்கு இப்போ அம்மூவ பாக்கணும்.. அவள பாக்கர வரைக்கும் என்னால வேர எதை பத்தியும் யோசிக்கமுடியாது மச்சா.. என்னோட பலமும் அவ தான்.. பலவீனமும் அவ தான்..

சரிடா.. இப்போ எங்கன்னு தேடரது.. எல்லா பக்கமும் பாத்தாச்சு.. வேர என்ன பன்ன முடியும் நாம போலீஸ்ல சொல்லி தேட சொல்லலாம்..

இருவரும் மனுவை பற்றிய கவலையில் உலாத்திக்கொண்டு இருக்கவும்.. தன்னையும் மறந்த நிலையில் மனு அவர்களை நோக்கி வந்துகொண்டு இருந்தாள்.. அவளை முதலில் பார்த்தது ஆகாஷ்தான்..

அம்மூ.. அம்மூ எங்கடிம்மா போன.. உன்ன காணாம நாங்க எங்க எல்லாம் தேடினோம் தெரியுமா.. அம்மூ.. என அவளை அணைத்தான்..

அபிக்கும் மனுவை கண்டதும் தான் மூச்சேவந்தது.. அவனும் மனுவின் அருகில் வந்தான்..

இருவரும் மாறி மாறி மனுவை கண்டதால் ஏற்பட்ட நிம்மதி கண்ணில் தெரிந்தது.. இவர்கள் இருவரின் எந்தவிதமான பேச்சும் மனுவின் செவிகளில் எட்டவேயில்லை..

அம்மூ என்னடாம்மா ஆச்சு.. மச்சா.. அம்மூ ஏன் எதுவும் பேசமாட்டிங்கரா.. அம்மூ..

கர்னி.. ஏய்.. இங்க பாரும்மா.. என்ன ஆச்சுடா.. எங்கம்மா போயிருந்த.. ஏய் இங்க பாரு.. என இருவரும் அவளை தன்னிலைக்கு கொண்டுவர போராடினார்கள்..

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5 
 •  Next 
 •  End 

About the Author

---

Latest Books published in Chillzee KiMo

 • Katrin kanalKatrin kanal
 • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
 • Maayakkottai - MinnalMaayakkottai - Minnal
 • Theeradha KadhalTheeradha Kadhal
 • ThazhamPoove Vaasam VeesuThazhamPoove Vaasam Veesu
 • Kids Fun StoriesKids Fun Stories
 • Unnai ondru ketpenUnnai ondru ketpen
 • Yaar arivaarYaar arivaar

Add comment

Comments  
# RE: தொடர்கதை - வேலண்டைன்ஸ் டே... - 12 - மகிPalanisamy R 2019-08-11 20:40
What about episode 13...til now no Updation.. But u said, it will be published on 8th may
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வேலண்டைன்ஸ் டே... - 12 - மகிAdharvJo 2019-04-24 16:06
:clap: :clap: jolly epi mahi ma'am (y) As always ivanga loda settaigalai rasithu padikalam and enjoy panalam :dance: Ana andha appavi students ellam kuttitu vandhu deal la vittu ivanga munu perum oru group aga suthurangale :D BTW Karani enga es agitanga...lucky u got her back to the epi today itself....illaina pavam sky rombha feel pani iruparu….abhi-da ketkavendam-da ullukulave-da azhudhu-da pulambi da irukaparu da :D :lol: that was very cute. hope she reveals in the next update. So abhi kaga thaan trip-k karani varamaten solli irukanga...Look forward to see what happens next. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வேலண்டைன்ஸ் டே... - 12 - மகிsasi 2019-04-24 10:53
இன்றைய எபி அருமை இந்த மனு செய்றது புரியலை அப்படி எங்க போய் வந்தா எதையோ மறைக்கறாளே இது ஏதாவது ட்விஸ்டா இல்லை ஏதாவது சஸ்பன்ஸ் வைச்சிருக்காளா? மனுவோட பதிலுக்காக காத்திருக்கிறேன் நன்றி தோழி கதையின் வேகம் அருமையாக உள்ளது
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வேலண்டைன்ஸ் டே... - 12 - மகிmadhumathi9 2019-04-24 07:26
:Q: karni appadi enguthaan poyiruppaal? Nice epi.waiting to read more. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top