(Reading time: 16 - 32 minutes)

அவளின் வார்த்தைகளில் ஏக்கமும் ஆசையும் கூடவே தயக்கமும் தெரிந்தது..

இருவரும் மனதில் இதை குறித்துக்கொண்டனர்.. வெளிகாட்டிக்கொள்ளாமல்..

ஊட்டி.. அதன் அழகை நான் வேறு தனியாக வர்ணிக்க வேண்டுமா என்ன..

 தோட்டம் என்றாலே மனதில் ஒரு தனி இதம் பரவும்.. அதுவும் அழகிய மலர் செடிகளுக்கு நடுவில் அமர்ந்து கொண்டு அதனோடு உரையாடும் பொழுது கிடைக்கும் அந்த ஆனந்தம் வேறேங்கு கிடைக்கும்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் " உன்னையே தொடர்வேன் நானே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

அழகிய பூந்தோட்டமும்.. நீண்டு வளர்ந்த மரங்களுக்கு கீழே உள்ள கல் இருக்கைகளும்.. இந்த உலகில் வானம் எவ்வாறு பறந்து விரிந்து உள்ளதோ அதே போல பச்சைபுள்வெளியும் பறந்து விரிந்து இருந்தது.. அதில் ஆங்காங்கு துள்ளி விளையாடும் சிறுவர்களும்.. காண்போரின் கண்களுக்கு அற்புத காட்சியா இருந்தது..

ரொம்ப அழகா இருக்குல்ல.. இந்த பூந்தோட்டம், மரம், புள்வெளி.. அமைதியான இடம்.. இங்க என்னோட எனக்கு பிடிச்ச ரெண்டு பேரும்.. என அபி ,ஆகாஷ் இருவரின் கையையும் மனு  பிடித்துக்கொண்டு நடந்தாள்..

அவளின் இந்த செயலும்.. குழந்த மாதிரி அவ துள்ளி குதிக்கரதும்.. அவளின் இந்த இந்த சிறு சிறு குழந்தை தனமான செயல்களும் பார்க்க.. அவள் ஒரு வளந்த குழந்தையாகவே இருவர் கண்களுக்கும் தெரிந்தாள்..

ஏ.. இந்த இடத்துல எவ்வளவு பூக்கள் இருக்கு.. செமல்ல.. ஆகா என்ன இந்த பூகூட ஒரு போட்டோ எடு.. வாங்க நாம இங்க செல்பீ எடுக்கலாம்.. என அவள் நிக்கவேயில்லை.. அங்கையும் இங்கையுமாக குதித்துக்கொண்டும்.. ஆனந்தமாக இருந்தாள்..

ஏன் மச்சி.. இங்க இருக்கர எல்லாரையும் நாம ரொம்ப சுலபமா சமாளிக்கலாம் போல.. ஆனா இந்த கர்னிய சமாளிக்க நாம இன்னும் கொஞ்சம் போராட வேண்டி இருக்குமோ..

அபி சும்மா இரு.. இதை மட்டும் அவ காதுல்ல கேட்டா.. அவ்வளவு தான்.. ஆனாலும் மச்சா நீ சொன்னதும் ரொம்ப உண்மையான விஷயம் தான்டா..

ஏன்டா.. இப்போ கர்னி நல்ல மூர்ல இருக்க.. நான் அவகிட்ட நேத்து எங்க போனன்னு கேட்கவா..

அவ சொல்லுவான்னு நீ நினைக்கரையா..

இப்போ கேட்டு பார்க்கலாம்டா.. சொன்னா நமக்கு நல்லது தானே..

சரி.. கேளு.. பாத்து கேட்டு பாரு மச்சா..

நான் பாத்துக்கரேன்.. என அபி மனுவை நெருங்கினான்..

ஓய் பேபிம்மா.. நான் போட்டோ எடுக்கவா..

இந்தா ஜித்து அழகா எடு.. என சில புகைபடங்களை அவன் எடுத்த பின்பு..

ஏன் கர்னி.. நேத்து நீ எங்க போன..

ஏன் கேக்கரேன்னா சும்மா தெரிஞ்சுக்க தான்..

நீ எங்க போன கர்னி.. அவளை கூர்ந்து பார்த்தவாறு அபியும், ஆகாஷ் மனுவையே பார்த்தனர்.. அவள் கூறப்போகும் பதிலுக்காக ஆவலாக காத்திருந்தனர்..

நாமலும் காத்திருப்போம் தோழமைகளே.. தங்களின் கருத்துக்களுக்காக நான் காத்திருப்பேன் தோழமைகளே..

Next episode will be published on 8th May. This series is updated fortnightly on Wednesday mornings.

தொடரும்

Episode # 11

Go to Valentines day story main page

{kunena_discuss:1230}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.