மனு இருவரையும் மாறி மாறி பார்த்துவிட்டு.. நாம இப்போ எங்க இருக்கோம் ஆகா.. நாம ஏன் இங்க இருக்கோம் ஜித்து.. இருவரை பார்த்து அவள் கேட்டாள்..
அபியும்,ஆகாஷ்ம் ஒருவரை ஒருவர் பார்த்து தங்களுக்குள் தலையசைத்து அவளை சாமாளிக்க தயாரானார்கள்..
இல்ல அம்மூ நான் தான் வெளிய வரனும்ன்னு நினைச்சேன்.. சரி அதை விடு இப்போ ரொம்ப குளிருது நாம ரூம்க்கு போலாமா..
ஆமா ரொம்ப குளிருது போலாம் ஆகா.. என அவள் தன்னை மறந்து நடக்க தொடங்கினாள்..
இவர்கள் இருவருக்கும் என்ன செய்வது என்றே தெரியாமல் மனுவை அழைத்துக்கொண்டு ரூம்மிற்கு சென்றார்கள்..
மனுவை அழைத்துக்கொண்டு ரூமிற்கு சென்றவர்கள்.. ரூமிற்கே உணவை வரவழைத்து அவளுக்கு ஊட்டிவிட்டு அவளை படுக்கவைத்தனர்..
இருவரும் மனுவை கவனமாக பார்த்துக்கொண்டனர்.. அவள் உணவு உன்னும் போது சரி.. தூங்கும் போது கூட மனு ஆகாவின் கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டே இருந்தாள்.. அப்போ அப்போ அபியையும் அவள் ஏக்கமாக ஒரு பார்வையை பார்த்துக்கொண்டு இருந்தாள்.. பின் அபி நகரமுற்படுகையில்.. ஜித்து.. என அவனின் கையையும் இறுக்க பற்றிக்கொண்டாள்..
இருவருக்கும் எதுவும் புரியவில்லை.. ஆனா மனு நல்லா பயந்து இருக்கான்னு மட்டும் புரிஞ்சது.. அதை உணர்ந்தோ என்னவோ.. மனுவின் கையை ஆதரவாக தட்டிக்கொடுத்து இருவரும் அவளை தூங்க வைத்தனர்..
ரொம்ப நேரமா அவ தூங்காம ரெண்டுபேரையுமே பாத்துகிட்டே இருந்தாள்.. அப்பரம் கொஞ்ச கொஞ்சமா தன்னையும் அறியாம தூங்க தொடங்கினாள்.. அவ நல்லா தூங்கிட்டான்னு தெரிஞ்ச அப்பரம் தான் ரெண்டுபேரும் மனுவை விட்டு அவங்க பார்வையை நகர்த்தினாங்க..
அம்மூக்கு என்ன ஆச்சு மச்சா.. அவ எங்க போய்.. அவ யாரையோ பாத்திருக்கா மச்சா.. அவங்க என்னமோ சொல்லிருக்காங்க.. ஆனா அது என்னன்னு அவளா சொல்லாத வரைக்கும் நாம எப்படி மச்சா தெரிஞ்சுக்கரது..
அவ தனியா தான் எங்கையோ போயிருக்கா.. ஆனா.. ஏன் இவ இப்படி பன்னரா.. ரொம்ப கஷ்டமா இருக்கு மச்சி.. ஒருவேள எங்கையாவது விளையாட்டு தனமா போகியிருப்பாளோ.. எதையோ பாத்து பயந்து இருப்பா..
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சித்ரா வெயின் "மையலில் மனம் சாய்ந்த வேளை..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
ஆகாஷ் கர்னி பேய்ய பாத்து பயந்திருப்பாளோ..
டேய்.. நானே என்னமோ ஏதோன்னு இருக்கேன்.. நீ வேற ஏன்டா என்ன படுத்தர..
இல்ல மச்சி.. இப்படியும் இருக்குமோன்னு..
மச்சா போதும் உன் விளையாட்டு.. நான் இப்போ நார்மலா தான் இருக்கேன்.. அம்மூவ காணம்ன்னு சொல்லவும் தான் நான் கொஞ்சம் பயந்துட்டேன்..
அப்பாட.. உண்மையா மச்சி.. நான் கர்னியவிட உன்ன நினைச்சு தான்டா ரொம்ப பயந்துட்டேன்.. பித்து பிடிச்ச மாதிரி இருந்தடா நீ..
நான் தான் முன்னாடியே சொன்னல்ல.. என்னோட பலமும், பலவீனமும் என்னோட அம்மூ மட்டும் தான் அபி.. அவளுக்கு ஒன்னுன்னா என்னால தாங்கமுடியாது அபி.. குரல் தழுதழுக்க ஆகாஷ் கூறினான்..
மச்சி.. என ஆதரவாக ஆகாஷின் கையை பிடித்தான் அபி..
என்னமோ போடா அபி.. அவ பன்னரது ஒன்னும் எனக்கு புரியமாட்டிங்குது.. இப்போ வரை அம்மூவ பத்தி என்ன தவிர வேற யாருக்கும் தெரியாது.. நான் அவள ரொம்ப நல்லா புரிஞ்சு வச்சிருக்கேன்னு நினைச்சிருந்தேன்.. ஆனா அது பொய்யின்னு இப்போ தெளிவா தெரிஞ்சிருச்சு மச்சா..
ஏய்.. என்ன ஆச்சுன்னு நீ இப்படி நடந்துக்கர.. ஒன்னும் இல்லடா.. புது இடம்ல அதான் வழிதெரியாம எங்கையாவது போயிருப்பா.. இப்போ வந்துட்டா.. நீ கண்டதையும் நினைச்சு உன்னையும் குழப்பி.. என்னையும் குழப்பாத மச்சி.. இப்போ அப்படியே படுத்து தூங்கு சாமி..
அதுயில்லடா..
டேய்.. இதுக்கு அப்பரமும் நீ எதாவது பேசுனன்னுவை கொன்னுருவேன்டா.. தூங்குடா.. ஆகாஷ்சை மிரட்டி படுக்க வைத்தான்.. மனுவின் பிடியில் இருவரின் கையும் இருந்த காரணத்தால்.. இருவரும் கட்டில் பக்கத்தில் நாட்காலியை போட்டு அவளின் கையை பிடித்தவாரே இருவரும் உறங்கினார்கள்..
சூரியதேவர் மெல்ல மெல்லமாக உதயமாகிக்கொண்டு இருந்தார்.. அந்த விடியல் மிகவும் சிறப்பாக அமையும் என்ற உட்சாகத்தில் முதலில் கண்விழித்தாள் மனு..
மனு கண்விழிக்கும் போது அபியும், ஆகாஷ்ம் அவளின் கையை பிடித்த படி உறங்குவதை பார்க்க அவளுள் இனம்புரியாத ஆனந்தம் கொண்டது அவளின் மனம்.. அகமகிழ்ந்து புன்னகைத்தாள்..
மச்சி.. சீக்கரம்டா.. நேரம் இல்ல.. நாம தான் லேட்.. கர்னிகுட்டி எங்கடா.. அவ கிளம்பிட்டால்ல.. அவள தனியா விடாத மச்சி.. நீ இல்ல நான் ரெண்டு பேர்ல யாராவது ஒருதராவது அவ கூட இருக்கனும்.. மிகவும் பரபரப்பாக அபி கூறிக்கொண்டு இருந்தான்..
WHERE IS THE NEXT EPISODE