(Reading time: 7 - 13 minutes)

தொடர்கதை - தாரிகை - 34 - மதி நிலா

series1/thaarigai

ரபரப்பில் கோவை நீதிமன்றம்..!! சிலை கடத்தல் வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு..!!”, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நிமிடத்திற்கு ஒருமுறை ஒளிப்பரப்பு செய்து தங்கள் டிஆர்பியை ஏற்றிக்கொண்டிருந்தனர்..!!

“உண்மையாவே உங்க அப்பாவா கண்ணா இது..??”, கைது செய்த நாள் முதலாய் இக்கேள்வியே பிரஜித்தின் தாயிடமிருந்து..!! அவரால் நம்பவே முடியவில்லை..!!

நாதன் ரியல் எஸ்டேட் புள்ளிதான்..!! கொஞ்சம் அடாவடி பேர்வழி..!! அரசியலில் கொஞ்சம் பின்புலம்..!! பேராசைக்காரர் என ஒரு கலவையானவர்..!! இதெல்லாம் நன்றாக தெரியும் அவரது மனைவிக்கு..!! ஆனால் சிலைக் கடத்தல்.. போதை மருந்து விநியோகம்.. கூடவே ஒரு கொலை..!!

ஆம்..!! காவல்த்துறைத் தோண்டத் தோண்ட ஒன்றொன்றாக அனைத்தும் வெளியே வந்திருந்தது..!!

அரசியலில் அவருக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி தன் மீது சுமத்தப்பட்டிருந்த வழக்குகளிலிருந்து தப்பிக்க முயற்சி செய்தார்தான்.. ஆனால் அனைத்தும் தவிடுபொடியே..!! காரணம் அவருக்கு எதிராய் பிரஜித் சமர்ப்பித்த ஆதாராங்கள்..!!

அவன் செய்துவைத்த வேலையைக் கண்டு கவினுக்கும் நிஷாவிற்கும் அதிர்ச்சியுடன் கூடிய ஆச்சர்யம்..!!

“இன்னும் நீ ஸ்ட்ராங் பண்ற கேஸை..”, கவின் ஒருமுறை சொல்ல..

“அம்மாதான் நம்மக்கிட்ட இருக்க ஆதாரத்தை எல்லாம் கொடுக்க சொன்னாங்க..”, பிரஜினிடமிருந்து வந்த பதிலைக் கேட்டபின் எதுவும் சொல்லவில்லை இருவரும்..!!

முழுதாக ஒன்றரை வருடத்திற்குப் பிறகு தீர்ப்பு இன்று..!!

நாதன் நிச்சயம் மேல் முறையீடு செய்து வெளியே வந்துவிடுவார்தான்.. அதுவும் இன்றே..!!

பணம் நீராய் அல்லவா விளையாடிக் கொண்டிருக்கிறது..!! அதுவும் பின்புலம் மதிய அமைச்சர்கள் அல்லவா..!! நாதன் அவர்களையும் இதில் இழுத்து விட்டுவிட்டால் ஆட்சி மாற்றம் முதல் கட்சிபூசல் வரை நிகழும் என்ற பயம்..!!

“நம்ம கோர்ட்டுக்கு போக வேண்டாம்மா..??”, என்னவோ அவருக்கு நாதனைப் பார்க்க வேண்டும்போல்..!!

“எதுக்குமா போகனும்..?? அவரே இன்னும் கொஞ்சம் நேரத்துல வீட்டுக்கு வந்திருவார்..”

“அப்படி எல்லாம் உங்க அப்பாவை வெளியே விட்டுட மாட்டாங்க..”, சொல்லக்கூடாது என்று நினைத்தும் வார்த்தைகளைத் தவறவிட்டிருந்தான் கவின்..!!

நாதனின் மீது அவனுக்கு ஏற்பட்டிருந்த மதிப்பு அப்படி..!!

“உனக்கு அவரைப் பத்தி இன்னும் சரியா தெரியல கவின்.. இந்நேரம் அவருக்கு பதிலா நான்தான் செஞ்சேன்னு சரண்டராக வரிசையில ஆளுங்க நிப்பாங்க.. அவரோட செல்வாக்கு அப்படி..”, கசப்பாக பிரஜித் உரைத்திருக்க.. எழுந்து சென்றிருந்தார் அவரது அம்மா..!!

சங்கட்டமாய் ஒரு மௌனம் இருவருக்குமிடையில்..!!

“சாரி பிரஜி.. தேவையில்லாம பேசி அம்மாவை சங்கடப்படுத்திட்டேன்..”, என்னவோபோல் இருந்தது கவினுக்கு..!!

“அதெல்லாம் ஒண்ணுமில்லை கவின்.. நீ உன் மனசுல பட்டதை சொன்ன.. விடு..”, என்றவன் பேச்சை மாற்றும் விதமாய், “நான் யூஎஸ்ல ஹையர் ஸ்டடீஸ்க்கு அப்ளை பண்ணலாம்னு இருக்கேன் கவின்..”, என்றான்..!!

“என்ன பிரஜி சொல்ற நீ..??”

“ஆமாடா.. இந்தியாவில்தான் பிஜி பண்ணனும்னு நெனச்சேன்.. அதான் ஆசையும்கூட.. பட்.. இனி என்னால் இங்க இருக்க முடியும்னு தோணல.. ஐ நீட் அ ப்ரேக்.. ஒரு நாலஞ்சு வருஷம்.. அதுக்குமேல என்னாலையும் அங்க இருக்க முடியாது..”

“அப்போ அம்மா..??”

“அம்மாவையும் கூட்டிட்டு போலாம்னு ப்ளான்.. அம்மாவுக்கும் கொஞ்சம் இங்கிருந்து வேற எங்கயாவது போனா நல்லா இருக்குனு தாட் இருக்கு.. சும்மா ஒரு எக்ஸ்ப்பீரியன்ஸ்க்காக என்ட்ரன்ஸ் எக்ஸாம்ஸ் எழுதுனேன்..”

“நிஷாக்குத் தெரியுமா..??”

“ப்ச்.. இன்னும் சொல்லல.. சொன்னா.. இந்த உலகத்தை பேஸ் பண்ண முடியாம ஓடறயான்னு கேட்பா.. கண்டிப்பா..”, என்றவன் சிறு அமைதிக்குப் பின், “உண்மைதானே அது.. கொஞ்ச நாளைக்கு அதான் பண்ணப் போறேன்.. கொலைகாரனோட பையங்கற அடையாளம் வேண்டாம் எனக்கு.. எனக்குன்னு ஒரு அடையாளம் வேணும்.. அதுக்காக ஓடத்தான் வேணும்..”, என்றவனின் குரலில் வெறுப்பு மட்டுமே மிச்சமாக..!!

சில வருடங்களுக்குப் பிறகு..!!

ஞ்சினூர்..!! குன்னூரை அடுத்த மலைகிராமம்..!! நூறடிக்கு ஒரு குடிலென மொத்தம் முப்பத்து வீடுகளை சுமந்த சிற்றூர்..!!

வானமகளின் கைகளில் தவழ்ந்திடும் மேகம்போல் நிஷாவின் கைகளில் மிதந்துகொண்டிருந்தது ஒரு குழந்தை..!! பிறந்து சில மணி நேரங்களேயான பெண் குழந்தை..!! இன்னும் தன் விழிகளைத் திறந்திருக்கவில்லை அது..!! அதன் அழகைக் காண திகட்டவில்லை அவளுக்கு..!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.