Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 11 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 11 - சாகம்பரி குமார்

Yaanum neeyum evvazhi arithum

னிகா தன்னுடைய பணியை முடித்து வீடு திரும்பிய நேரம்… மிட்டிஸா தன்னுடைய ஒற்றனை அழைத்தாள். ஹனிகா தந்த ரிப்போர்ட்டின் விவரம் அவளுக்கு தெரிந்தே ஆக வேண்டும். கர்ஷானை பொறுத்தவரை அவளுக்கு எதிரானவர் என்பது உறுதியான விசயம். என்னதான் ஜெனரலின் மகளாக இருந்தாலும் அவளும் மின்வரோவின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும்.

அவளுடைய தந்தையிடமிருந்து சலுகை எதுவும் அவளுக்கு கிடைக்காது. அவளுடைய சகோதரன் மிஸ்ருவிற்கும்தான்… ஆனால் அவள் விசயத்தில் அவர் இன்னும் கடின முகம் காட்டுவார். ஏனெனில் அவளுடைய சுபாவம் அப்படிப்பட்டது. ஒவ்வொரு நொடியும் அவளுடைய நலனைபற்றி மட்டுமே சிந்திப்பாள்.

மிட்டீஸா ஒற்றனிடம் கட்டளையிட்டபோது ஹனிகாவை கர்ஷான் தொடர்பு கொண்டார். அவரிடம் இந்த மிட்டிஸா பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஹனிகாவும் நினைத்தாள்.  எனவே அவர் அழைத்த இடத்திற்கு சென்றாள்.

அது தலைமையிடத்திலிருந்து சற்று தொலைவில் இருந்த மலை அடிவாரம் ஆகும்! அவளுக்காக கர்ஷான் காத்திருந்தார். அவர் மட்டும் இருந்தார்.

“வா, ஹனிகா… இங்கு எப்படி வந்தாய்?”

“ஸர்… நீங்க சொன்னதுபோல போக்குவரத்து ஷட்டிலில் வந்து  இரண்டு ஸ்டாப் முன்பாகவே இறங்கி விட்டேன். பிறகு  நடந்தே வந்தேன். இது ரகசிய இடமா?”

“இனிமேல்தான் நாம் ரகசியமான இட்த்திற்கு செல்லப் போகிறோம். என்னுடன் வா” என்று அவளை அழைத்து சென்றார்.

மலை ஏறிய சிறிது தூரத்திலேயே ஒரு சிறிய பாதை தெரிந்தது. அந்த பாதையின் முடிவில் இருந்த பெரிய கல்லை நகர்த்தியதும் இருண்ட குகை பகுதி தெரிந்தது.

“ஜாக்கிரதையாக வா ஹனிகா” என்றபடி அதனுள் இறங்கினார்.

இருளில் சற்று  நேரம் நடந்தபின் ஒரு அகலமான கதவு இருந்தது. ஒரு சுவிட்சை அழுத்தி கைரேகை வைத்து அந்த கதவை திறந்தார். உள்ளே ஆச்சரியமூட்டும் விதத்தில் விசாலமான பெரிய ஹால் இருந்தது. ஏதோ கட்டுமான பணி நடைபெறும் வொர்க் ஷாப் போல இருந்தது.

“இங்கேதான் ஸ்பேஸ் ஷட்டில்களுக்கான ஆராய்ச்சிகள் நடைபெறுகின. இந்நேரம் அதிவேக ஷட்டிலை நாம் வடிவமைத்திருக்க வேண்டும். ஆனால் பாதிலேயே அந்த முயற்சி நின்று விட்டது. விஸ்ராவின் திடீர் மறைவினால்…” கர்ஷான்  நிறுத்தினார். 

“இந்த ஆராய்ச்சியை அண்ணன் செய்தாரா?”

“அவன் செய்யவில்லை… அவன் உதவி செய்தான். ஆராய்ச்சியை விஞ்ஞானிகள்தான் செய்தனர். விஸ்ராவிற்கும் எனக்குமான உறவு ஒரு தந்தைக்கும் மகனுக்குமான உறவுபோலத்தான் இருந்தது. அதிவேக விண்கலத்தை உருவாக்கும் என் கனவை நிறைவேற்ற விஸ்ரா உதவினான்”

“அதிவேக விண்கலத்தை அமைக்கும் டெக்னாலஜி  நம்மிடம் இருக்கிறதா ஸர்?”

“இல்லை… சில விசயங்கள் தியரிட்டிகலாக இருந்தன. உன் தாத்தாவின் ரகசிய குறிப்புகள்…. விஸ்ராவிடம் இருந்தன. ”

“அவற்றை மட்டும் வைத்து ஷட்டிலை உருவாக்க முடியாதே ஸர்..”

“ஆமாம், அதற்கு ஒரு மாடல் வேண்டும். அதை வைத்து இம்ப்ரூவ் செய்யலாம் என்று நினைத்தோம்”

“மாடல்?”

“அதையும் விஸ்ராதான் தந்தான்….” அவர் பேசிக் கொண்டே மூடியிருந்த மற்றொரு ஷட்டரை திறந்தார். அங்கே…

“ஸ்பேஸ்ஷிப்…. ஆன்ட்ரமீடா ஏலியனின் ஸ்பேஸ்ஷிப்… அரை ஒளிவேகத்தில் செல்லக்கூடியது.. மை காட்..” ஹனிகா கத்தினாள்.

“அதேதான்… நீ க்ரேட் 0வை பெற வைத்த இலக்கு இதுதான். நீ என்ன நினைத்தாய்… இதுபோன்ற வேலையை இதுவரை யாரும் செய்யவில்லை என்றுதானே நினைத்தாய்…”

“யெஸ் ஸர்… ஆனால்…. இது எப்படி…?”

“விஸ்ராதான் பிடித்து வந்தான். இந்த ஷிப்பை துரத்தியபோது அது ஆஸ்ட்ராய்ட் ஓடையில் விபத்துக்குள்ளாகி விட்டது. அதிலிருந்த ஏலியன் எங்கே  என்று தெரியவில்லை… ஷிப்பை விஸ்ரா இழுத்து வந்தான். ஆனால் இது மிக ரகசியமான விசயமாக்கும். ஜெனரல் ஸ்மித்திற்கு மட்டும் தெரியும். அவருடைய நம்பிக்கையான சைன்டிஸ்ட்கள் கொண்டு இந்த பணியை ஆரம்பித்தோம்…”

“பிறகு என்னவானது ஸர்…”

“ம்… விஸ்ராவிற்கு விங் கமாண்டர்  போஸ்டிங் தர ஜெனரல் ஆலோசித்தார். அந்த விசயம் மிட்டிஸாவிற்கு தெரிந்து விட்டது. அவளுக்கு  கீழே இருந்தவன் விங் கமாண்டர் ஆவது பிடிக்கவில்லை. ஜெனரலிடம் வாக்குவாதம் செய்தாள். ஆனால் ஜெனரல் உறுதியாக இருந்தார். அந்த சமயத்தில்தான் விஸ்ரா காணாமல் போனது…”

“மிட்டீஸாவிற்கு என் அண்ணன்மீது வெறுப்பு வர இது மட்டும் காரணமாக இருக்காது ஸர்… வேறு ஏதோ வலுவான காரணம் இருக்கிறது”

“வலுவான காரணம் எல்லாம் உன்னை போன்ற நியாயவாதிகளுக்கு மட்டும்தான் தேவைப்படும். ஆனால் மிட்டிஸா போன்ற அதிகார போதை உள்ளவர்களுக்கு இது போன்ற சின்ன விசயங்கள்கூட போதும்…”

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 11 - சாகம்பரி குமார்Srivi 2019-05-15 07:13
Sema update Sissie..paapom eppide mitiza kuttaiya kuzhappa porangannu.. enga ponalum naalu peru politics panna vandhruanga..cheche
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 11 - சாகம்பரி குமார்AdharvJo 2019-05-14 19:52
steam pch enga parthalum politics!! nice update ms Sagampari :clap: :clap: Sad of Vizra..Waiting to see how Simhan would help Hanika to continue vizra's work.

thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 11 - சாகம்பரி குமார்madhumathi9 2019-05-14 18:14
facepalm vetru kurahathilum idhu polthaan nadakkuma? Nice epi.interesting aaga poguthu kathai.waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top